Lyrics

இடரினும் தளரினும் பாடல் வரிகள்!! Idarinum Thalarinum Tamil Lyrics | Idarinum Thalarinum padal

இடரினும் தளரினும் பாடல் வரிகள்!! Idarinum Thalarinum Tamil Lyrics

இடரினும் தளரினும் பாடல் வரிகள்!! Idarinum Thalarinum Tamil Lyrics | Idarinum Thalarinum padal

திருச்சிற்றம்பலம் – Idarinum Thalarinum Tamil Lyrics

இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….1

வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….2

Sivarathri

நனவினுங் கனவினும் நம்பாவுன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனலெரி யனல்புல்கு கையவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….3

தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மல ரடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரியெழ முனிந்தவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….4

கையது வீழினுங் கழிவுறினுஞ்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….5

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….6

வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை யொருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….7

பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்
சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி இராவணனை
ஆரிடர் படவரை யடர்த்தவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….8

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….9

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப்
புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே….10

அலைபுனல் ஆவடு துறையமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்மிறையை
நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப்போய்
விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் னேறுவர்
நிலமிசை நிலையிலரே….11

சிவபுராணம் பாடல் வரிகள்

வேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள்

1008 திருலிங்கேஸ்வரர்கள்

இடரினும் தளரினும் – ப்ரதோஷம் பாடல் || Idarinum Thalarinum video song

 

 

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    Sashti Viratham | கந்த சஷ்டி விரத முறை | சஷ்டி விரத பலன்கள்

    Sashti viratham கந்த சஷ்டி விரதம் பற்றி ஓர் பார்வை: கந்த சஷ்டி விரத மகிமைகள், கந்தசஷ்டி விரதம் கடை… Read More

    5 days ago

    Today rasi palan 6/11/2024 in tamil | இன்றைய ராசிபலன் ஐப்பசி – 20 புதன்கிழமை

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் _* _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *ஐப்பசி -… Read More

    19 hours ago

    தீபாவளி அன்று சகல ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர விரத பூஜை | Lakshmi kubera pooja

    Lakshmi kubera pooja சகல ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர விரத பூஜை... சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளிதரும் தீபாவளி திருநாளில்… Read More

    1 week ago

    தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம்? Diwali celebrations

    Diwali celebrations தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம்? நாம் எல்லோரும் எதிர்ப்பார்த்திருக்கும் ஒரு முக்கிய பண்டிகை தீபாவளி. அதாவது தீபங்களின் வரிசைகள்,… Read More

    1 week ago

    தீபாவளிக்கு முந்தைய நாள் அன்று யம தீபம் ஏற்றுங்கள் | yema deepam

    Yema Deepam தீபாவளிக்கு முந்தைய நாள் அன்று யம தீபம் ஏற்றுங்கள் ! யம தீபம் - 30/10/2024 -------------------… Read More

    1 week ago

    முருகப்பெருமானின் அபூர்வ தோற்றங்கள் | Lord mururga different darshan temples

    Lord muruga different darshan temples குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் (Lord Muruga) இருக்கும் இடம் என்பார்கள். அபூர்வ தோற்றத்தில்… Read More

    7 hours ago