108 சிவன் போற்றி | சிவபெருமான் 108 போற்றிகள் | Lord shiva 108 potri
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி…
1. ஓம் அகரமே அறிவே போற்றி
2. ஓம் அகஞ்சுடர் விளக்கே போற்றி
3. ஓம் அகந்தை நோய் அழிப்பாய் போற்றி
4. ஓம் அகத்தனே போற்றி போற்றி
5. ஓம் அடியர்கள் துணையே போற்றி
6. ஓம் அணுவினுள் அணுவே போற்றி
7. ஓம் அண்டங்கள் கடந்தாய் போற்றி
8. ஓம் அம்மையே அப்பா போற்றி
9. ஓம் அருமறை முடிவே போற்றி
10. ஓம் அருந்தவர் நினைவே போற்றி
11. ஓம் அரும்பிறை அணிந்தாய் போற்றி
12. ஓம் அரஹரா போற்றி போற்றி
13. ஓம் அலைகடல் விரிவே போற்றி
14. ஓம் அவிரொளி சடையாய் போற்றி
15. ஓம் அழகனாம் அமுதே போற்றி
16. ஓம் அறிந்திடு மொழியே போற்றி
17. ஓம் அளப்பிலா அருளே போற்றி
18. ஓம் அன்பெனும் மலையே போற்றி
19. ஓம் ஆடரவு அணியாய் போற்றி
20. ஓம் ஆடிடும் கூத்தா போற்றி
21. ஓம் ஆதாரப் பொருளே போற்றி
22. ஓம் ஆதியே அருளே போற்றி
23. ஓம் ஆலால கண்டா போற்றி
24. ஓம் ஆலமர் குருவே போற்றி
25. ஓம் ஆலவாய் அப்பா போற்றி
26. ஓம் ஆரூரின் தியாகா போற்றி
27. ஓம் ஆற்றலே போற்றி போற்றி
28. ஓம் இடபவா கனத்தாய் போற்றி
29. ஓம் இதயத்தே கனிவாய் போற்றி
30. ஓம் இமயவள் பங்கா போற்றி
31. ஓம் இமையவர் உளத்தாய் போற்றி
32. ஓம் இரக்கமே வடிவாய் போற்றி
33. ஓம் இருட்கறை மிடற்றாய் போற்றி
34. ஓம் இருவினை தவிர்ப்பாய் போற்றி
35. ஓம் இன்னல்கள் களைவாய் போற்றி
36. ஓம் இனிமையே நிறைப்பாய் போற்றி
37. ஓம் இனியவர் மனத்தாய் போற்றி
38. ஓம் இனிய செந்தமிழே போற்றி
39. ஓம் இலக்கியச் செல்வா போற்றி
40. ஓம் இறைவனே போற்றி போற்றி
41. ஓம் ஈசனே போற்றி போற்றி
42. ஓம் ஈசானத் திறையே போற்றி
43. ஓம் ஈடிலா பிரானே போற்றி
44. ஓம் ஈந்தருள் தேவே போற்றி
45. ஓம் ஈமத்தே குமிப்பாய் போற்றி
46. ஓம் உடுக்கையின் ஒலியே போற்றி
47. ஓம் உடைகரித் தோலாய் போற்றி
48. ஓம் உடையனே போற்றி போற்றி
49. ஓம் உணவொடு நீரே போற்றி
50. ஓம் உரைகடந் தொளிர்வாய் போற்றி
51. ஓம் உருவொடும் அருவே போற்றி
52. ஓம் உமையொரு பாகா போற்றி
53. ஓம் உலகின் முதலே போற்றி
54. ஓம் உள்ளொளிர் சுடரே போற்றி
55. ஓம் ஊக்கமே உணர்வே போற்றி
56. ஓம் ஊங்கார ஒலியே போற்றி
57. ஓம் ஊரெல்லாம் உவப்பாய் போற்றி
58. ஓம் ஊழினை விதிப்பாய் போற்றி
59. ஓம் எண்குண வடிவே போற்றி
60. ஓம் எம்பிரான் போற்றி போற்றி
61. ஓம் எரிதவழ் விழியாய் போற்றி
62. ஓம் எருதேறும் ஈசா போற்றி
63. ஓம் எல்லையில் எழிலே போற்றி
64. ஓம் ஏக நாயகனே போற்றி போற்றி
65. ஓம் ஏகம்பா இறைவா போற்றி
66. ஓம் ஏக்கமே களைவாய் போற்றி
67. ஓம் ஏந்துகூர் மழுவாய் போற்றி
68. ஓம் ஏந்தலே போற்றி போற்றி
69. ஓம் ஏத்துவார் ஏத்தே போற்றி
70. ஓம் ஏதிலார் புகழே போற்றி
71. ஓம் ஏர்முனைச் செல்வா போற்றி
72. ஓம் ஏற்றமே தருவாய் போற்றி
73. ஓம் ஐம்பூத வடிவே போற்றி
74. ஓம் ஐம்புலன் அவிப்பாய் போற்றி
75. ஓம் ஐயங்கள் களைவாய் போற்றி
76. ஓம் ஐயனே அரனே போற்றி
77. ஓம் ஓண்குழைக் காதா போற்றி
78. ஓம் ஒப்பிலா மணியே போற்றி
79. ஓம் ஒளியெறி நுதலாய் போற்றி
80. ஓம் ஒள்ளிழை பாகா போற்றி
81. ஓம் ஒப்பிலாய் போற்றி போற்றி
82. ஓம் கண்கள் மூன்றுடையாய் போற்றி
83. ஓம் கண்ணப்பர் முதலே போற்றி
84. ஓம் கருணைமா கடலே போற்றி
85. ஓம் கறைதிகழ் கண்டா போற்றி
86. ஓம் காமனை எரித்தாய் போற்றி
87. ஓம் காலனை கடிந்தாய் போற்றி
88. ஓம் கடவுளே போற்றி போற்றி
89. ஓம் சிவமெனும் பொருளே போற்றி
90. ஓம் செவ்வொளி வடிவே போற்றி
91. ஓம் தவநிலை முடிவே போற்றி
92. ஓம் தண்பதம் தருவாய் போற்றி
93. ஓம் பவலமெலாம் தவிர்ப்பாய் போற்றி
94. ஓம் பரமெனும் பொருளே போற்றி
95. ஓம் புலியூரான் உளத்தாய் போற்றி
96. ஓம் புரந்து அருள்வாய் போற்றி
97. ஓம் புண்ணியா போற்றி போற்றி
98. ஓம் புனர் ஜன்மம் தந்தோனே போற்றி
99. ஓம் புகழ் தருவோனே போற்றி
100. ஓம் பூமி நாயகனே இறைவா போற்றி
101. ஓம் மலையான் மருமானே போற்றி
102. ஓம் மலைவாழ் நாயகனே போற்றி
103. ஓம் மாதா வானவனே இறைவா போற்றி
104. ஓம் மகத்தா னாவனே போற்றி போற்றி
105. ஓம் வண்ண நீல வடிவானவனே போற்றி
106. ஓம் வடிவம் பல கொண்டவனே போற்றி
107. ஓம் வாழ வழி காட்டுபவனே போற்றி
108. ஓம் வாழும் இறைவா போற்றி போற்றி
வேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள்
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றி 50 குறிப்புகள் அருமையான பதிவு, முழுவதும் படியுங்கள் .. 1. மகாவிஷ்ணு எடுத்த… Read More
Mahalakshmi 100 Special Information in Tamil மகாலட்சுமி (Mahalakshmi prayer benefits) தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி,… Read More
108 Ayyappan Saranam in tamil 108 ஐயப்பன் சரண கோஷம் சபரிமலை செல்லும் ஐயப்பா பக்தர்கள் அனைவரும் அனுதினமும்… Read More
Sashti viratham கந்த சஷ்டி விரதம் 2025 பற்றி ஓர் பார்வை: கந்த சஷ்டி விரத மகிமைகள், கந்தசஷ்டி விரதம்… Read More
அன்னாபிஷேக பொருள் விளக்கம் மற்றும் பலன்கள் | Annabhishegam benefits ஐப்பசி அன்னாபிஷேகம் :🌼 சாம வேதத்திலே ஒரு… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈*… Read More