Lyrics

Thalelo thalelo song lyrics in tamil | தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ

Thalelo thalelo song lyrics in tamil

தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ (Thalelo thalelo song lyrics in tamil) ஸ்ரீ பாலா திரிபுரா சுந்தரி தேவி பற்றிய தமிழ் பக்தி பாடல் பாடியவர் எஸ்.பூர்வாஜா.

இந்த பாடல் பக்தியின் சரியான காட்சி மற்றும் தெய்வத்தை தூங்க வைக்க பாடப்பட்டது. இந்த பாடல் தனித்துவமானது மற்றும் கேட்பவரின் மனதில் அமைதியையும் தருகிறது.

தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ (2)

கண்மணியே .. தெள்ளமுதே
கட்டிக் கரும்பே செந்தேனே

கண்மணியே .. தெள்ளமுதே
கட்டிக் கரும்பே செந்தேனே

வாழ்விக்க வந்த வாலையே (2)
வரம் பல தருகின்ற தாயே நீயே!

தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ

தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ

புத்தகம் கைக்கொண்ட வித்தகச்செல்வி
எப்பொழுதும் இங்கு நீயே துணை

புத்தகம் கைக்கொண்ட வித்தகச்செல்வி
எப்பொழுதும் இங்கு நீயே துணை

அபயவரத கைகள் கொண்டு… அம்மா.. (2)
அபயமும் வரமும் தருகின்ற தாயே!

தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ

தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ

துள்ளிக் குதித்தோடும் புள்ளி மானே
தெள்ளுத் தமிழே தீஞ்சுவையே

துள்ளிக் குதித்தோடும் புள்ளி மானே
தெள்ளுத் தமிழே தீஞ்சுவையே

அள்ளிப் பருகும் அமுதம் நீயே அம்மா.. (2)
ஆடி வருகின்ற பாலே தாயே!

தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ

தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ

வண்ணப் பட்டாடைகள் அணிந்தவளே
எண்ணற்ற அணிகலன்கள் பூண்டவளே

வண்ணப் பட்டாடைகள் அணிந்தவளே
எண்ணற்ற அணிகலன்கள் பூண்டவளே

பொன் தொட்டில் பட்டு விரிப்பினிலே (2)
பால் அன்னம் உண்டக் களைப்பினில் உறங்கு!

தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ

தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ

கண்கள் மூடி கண்ணுறங்கு
கடை விழியால் எம்மைக் கண்டுறங்கு

கண்கள் மூடி கண்ணுறங்கு
கடை விழியால் எம்மைக் கண்டுறங்கு

காலம் எல்லாம் எம்மைக் காத்துறங்கு (2)
கண்ணே உறங்கு கண்மணி உறங்கு!

தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ

தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ

பச்சைக் கிளியே கண்ணுறங்கு
அனிச்ச மலரே கண்ணுறங்கு

பச்சைக் கிளியே கண்ணுறங்கு
அனிச்ச மலரே கண்ணுறங்கு

உச்சித் திலகமே கண்ணுறங்கு (2)
உயிரே உறங்கு உறவே உறங்கு!

தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ

தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ

அன்னை லலிதையின் மடியிருப்பாய்
உன்னை நினைக்கையிலே உடன் வருவாய்

அன்னை லலிதையின் மடியிருப்பாய்
உன்னை நினைக்கையிலே உடன் வருவாய்

கண்ணை இமையது காப்பது போல் (2)
எம்மைக் காப்பாய் உன்னடி சேர்ப்பாய்!

தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ

தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ

உதிக்கும் செங்கதிர் ஒத்தவளே
உத்தமியே எங்கள் புத்திரியே (2)
உவகைச் சேர்த்திட வந்தவளே (2)
உலகைக் காத்திட உறங்காமல் உறங்கு!

தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ

தாலேலோ தாலேலோ ஆராரோ ஆரிராரோ

லலிதா சஹஸ்ரநாமம்

Share
ஆன்மிகம்

Leave a Comment

View Comments

  • Excellent song I never hear about this song in my life till date. Could you please help me how to download the audio file. Kindly do the needful.

Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha lyrics in tamil

    odi odi utkalantha lyrics in tamil சித்தர் சிவவாக்கியர் பாடிய ஓடி ஓடி உட்கலந்த (Odi Odi Utkalantha)… Read More

    2 days ago

    Today rasi palan 06/05/2024 in tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் திங்கட்கிழமை சித்திரை – 23

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *சித்திரை - 23* *மே -… Read More

    19 hours ago

    Guru Peyarchi Palangal 2024-25 Parigarangal | குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-2025

    Guru Peyarchi Palangal 2024-25 Parigarangal குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - 2025 (Guru Peyarchi Palangal 2024-25)… Read More

    5 days ago

    Mesha rasi Guru peyarchi palangal 2024-25 | மேஷம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

    Mesha rasi guru peyarchi palangal 2024-25 குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-25 Mesha rasi guru peyarchi palangal 2024-25… Read More

    5 days ago

    Rishaba rasi Guru peyarchi palangal 2024-25 | ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

    Rishaba Rasi Guru Peyarchi Palangal 2024-25 ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் Rishaba Rasi Guru Peyarchi Palangal… Read More

    5 days ago

    Mithuna rasi Guru peyarchi palangal 2024-25 | மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

    Mithuna rasi Guru peyarchi palangal 2024-25 மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Mithuna rasi guru peyarchi palangal… Read More

    5 days ago