Blogs

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் போக்குவரத்து மாற்றங்கள் | Srirangam route updates

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா 29.12.2017 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, வரும் 28-ம் தேதி இரவு 08.00 மணி முதல் 29-ம் தேதி மதியம் 2 மணி வரை கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றது என திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அறிவித்துள்ளது. (Srirangam route)

அதன் முழு விவரங்கள் இதோ, மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் வரும் நகரப் பேருந்து வழித்தடங்கள்

அண்ணாசிலை – ஓடத்துறை பாலம் – தேசிய நெடுஞ்சாலை – லு ரோடு சந்திப்பு – சோதனைச் சாவடி எண்.6 – பஞ்சக்கரை ரோடு – நெல்சன் ரோடு – சிங்க பெருமாள் கோயில் பேருந்து நிறுத்தம் – நெல்சன் ரோடு – காந்திரோடு – ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் – அம்மாமண்டபம் – மாம்பழச்சாலை –  அண்ணாசிலை – சத்திரம் பேருந்து நிலையம்.

Srirangam route

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடி, மணச்சநல்லூர் மார்க்கம் செல்லும் நகரப் பேருந்து வழித்தடங்கள்.

அண்ணாசிலை – ஓடத்துறை பாலம் – தேசிய நெடுஞ்சாலை – லு ரோடு சந்திப்பு – சோதனைச் சாவடி எண்.6 – கொள்ளிடம் பாலம் வழியாக செல்ல வேண்டும். திரும்பி வரும்போது கொள்ளிடம் பாலம்  – பஞ்சக்கரை ரோடு – நெல்சன் ரோடு – சிங்க பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தம் – நெல்சன் ரோடு – காந்திரோடு – ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் – அம்மாமண்டபம் – மாம்பழச்சாலை –  அண்ணாசிலை – சத்திரம் பேருந்து நிலையம்.

பெரம்பலூர், அரியலூர், துறையூர் மற்றும் கடலூர் மார்க்கம் சென்று வரும் புறநகர பேருந்துகள் வழக்கமான பாதை வழியாகவே சென்று வர வேண்டும்.

பக்தர்களின் வாகனங்கள் வந்து செல்ல வேண்டிய வழித்தடங்கள்

முக்கிய நபர்களின் வாகனங்கள்:

அண்ணாசிலை – மாம்பழச்சாலை – அம்மாமண்டபம் ரோடு – ராகவேந்திரா ஆர்ச் –  பீட்-42 – திருவள்ளுவர் தெரு – மேற்கு சித்திரை வீதி வந்து வாகனங்களை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்துக்குச் செல்ல வேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் செல்ல வேண்டும்.

வாகன அனுமதிச்சீட்டு உள்ள வாகனங்கள் :

ஓடத்துறை பாலம் – தேசிய நெடுஞ்சாலை – லு ரோடு சந்திப்பு – சோதனைச் சாவடி எண்.6 – பஞ்சக்கரை ரோடு – வடக்கு மொட்டை கோபுரம் – வடக்கு சித்திரை வீதி வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்துக்குச் செல்ல வேண்டும். பின்னர் மூலத்தோப்பு – ராகவேந்திரா ஆர்ச் – அம்மாமண்டபம் – மாம்பழச்சாலை – காவேரி பாலம் வழியாக செல்ல வேண்டும்.

வாகன அனுமதிச்சீட்டு இல்லாத வாகனங்கள்:

கரூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் சுற்றுலாப் பேருந்துகள்

காவல் சோதனைச்சாவடி எண்.7 – அன்பிலார்சிலை சந்திப்பு – அண்ணாசிலை வழியாக தேசிய மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நிறுத்திவிட்டுச் செல்லவேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் பேருந்துகளை எடுத்துச் செல்ல வேண்டும்.

கரூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்குவரும் பக்தர்களின் கார் மற்றும் வேன்கள்

காவல் சோதனைச்சாவடி எண்.7 – அன்பில் தர்மலிங்கம் சிலை சந்திப்பு – அண்ணாசிலை – ஓடத்துறை பாலம் – தேசிய நெடுஞ்சாலை – ‘லு” ரோடு சந்திப்பு – பஞ்சக்கரை ரோடு – தசாவதார சன்னதி – மேலூர் ரோடு – மூலத்தோப்பு மற்றும் முத்துநகர் வாகனம் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் மூலத்தோப்பு – ராகவேந்திரா ஆர்ச் – அம்மாமண்டபம் – மாம்பழச்சாலை – காவேரி பாலம் வழியாக செல்ல வேண்டும்.

மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் சுற்றுலாப் பேருந்துகள்

பால்பண்ணை – சஞ்சீவிநகர் சந்திப்பு – ‘லு” ரோடு சந்திப்பு – காவல் சோதனை சாவடி எண்.6 – பஞ்சக்கரை ரோடு வழியாக கொள்ளிடக்கரை வாகன நிறுத்துமிடத்தில் (யாத்ரீ நிவாஸ் எதிர்புறம்) வாகனத்தை நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் செல்ல வேண்டும்.

மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கார் மற்றும் வேன்கள்

பால்பண்ணை – சஞ்சீவிநகர் சந்திப்பு – ‘லு” ரோடு சந்திப்பு – பஞ்சக்கரை ரோடு – தசாவதார சன்னதி – மேலூர் ரோடு வழியாக மூலத்தோப்பு மற்றும் முத்துநகர் வாகனம் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டுச் செல்ல வேண்டும். பின்னர் மூலத்தோப்பு – ராகவேந்திரா ஆர்ச் – அம்மாமண்டபம் – மாம்பழச்சாலை – காவேரி பாலம் வழியாக செல்ல வேண்டும்.

சென்னை, அரியலூர், சேலம், மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் சுற்றுலாப் பேருந்துகள்:

‘Y” ரோடு சந்திப்பு – பஞ்சக்கரை ரோடு வழியாக கொள்ளிடக்கரை வாகன நிறுத்துமிடத்தில் (யாத்ரீ நிவாஸ் எதிர்புறம்) வாகனத்தை நிறுத்திவிட்டுச் செல்லவேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் செல்ல வேண்டும்.

சென்னை, சேலம், அரியலூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கார் மற்றும் வேன்கள்

‘Y” ரோடு சந்திப்பு – பஞ்சக்கரை ரோடு – தசாவதார சன்னதி – மேலூர் ரோடு – மூலத்தோப்பு வாகனம் நிறுத்துமிடத்தில்  நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் மூலத்தோப்பு – ராகவேந்திரா ஆர்ச் – அம்மாமண்டபம் – மாம்பழச்சாலை – காவேரி பாலம் வழியாக செல்ல வேண்டும்.

வைகுண்ட ஏகாதசி பெருவிழாவுக்கு ஆட்டோவில் வருகை தரும் வயதானவர்கள் / மாற்றுத்திறனாளிகள்

திருவானைக்காவல் சந்திப்பு – காந்தி ரோடு – தேவி தியேட்டர் சந்திப்பு – வடக்கு தேவி ரோடு – கீழசித்திரவீதி வந்து அவர்களை இறக்கிவிட்டு பின்னர் வடக்கு தேவி ரோடு – தெற்கு தேவி ரோடு – வீரேஸ்வரம் – அம்மாமண்டபம் ரோடு – மாம்பழச்சாலை வழியாகச் செல்ல வேண்டும்.

உத்திரை வீதியில் குடியிருப்பவர் வாகனங்கள் :

உத்திரை வீதியில் குடியிருப்பவர்கள் 28-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை தங்களது வாகனங்களை வடக்கு சித்திரைவீதியில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

கனரக சரக்கு வாகனப் போக்குவரத்து மாற்றம்

28-ம் தேதி மதியம் 2 மணி முதல் 30-ம் தேதி காலை 6 மணி வரை )

கனரக, சரக்கு வாகனங்கள்

கரூர் மார்க்கத்திலிருந்து திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் கனரக, சரக்கு வாகனங்கள் குளித்தலை – முசிறி –
நம்பர் 1 டோல்கேட் – சென்னை புறவழிச்சாலை வந்தடைந்து தொடர்ந்து தஞ்சை புதுக்கோட்டை மார்க்கத்தில் செல்ல வேண்டும்.

புதுக்கோட்டை, தஞ்சாவூர் மார்க்கத்திலிருந்து கரூர் மார்க்கமாக செல்லும் கனரக, சரக்கு வாகனங்கள் மாநகர பகுதிக்குள் வராமல் “Y” ரோடு சந்திப்பு – NO.1 டோல்கேட் – முசிறி வழியாக செல்லவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது…

அனைவருக்கும் பகிருங்கள்.. எல்லோரும் பயன் அடையலாம்….

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    முருகப்பெருமானின் அபூர்வ தோற்றங்கள் | Lord mururgar different darshan temples

    Lord mururgar different darshan temples குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அபூர்வ தோற்றத்தில் முருகன் காட்சி… Read More

    22 hours ago

    காலையில் சுப்ரபாதம் ஏன் பாடுகிறோம் என்று தெரியுமா?

    ஏன் காலையில் சுப்ரபாதம் பாடுகிறோம் என்று தெரியுமா? விஸ்வாமித்திரரின் யாகத்தினை ஒருமுறை காக்க சென்ற போது, கங்கைக்கரையில், ராம லட்சுமணர்கள்… Read More

    2 days ago

    அபிராமிப்பட்டர் அம்பிகாதாசர் கதை | Abiramapattar story tamil

    திருக்கடவூர் என்றதும் நம் நினைவுக்கு வருபவர் அபிராமிப்பட்டர். அவரின் வம்சத்தில் வந்தவர்தான் அம்பிகாதாசர. வெகு காலம் பிள்ளை இல்லாமல் இருந்து,… Read More

    2 days ago

    கடன் தீர வேண்டுமா? விநாயகருக்கு கொள்ளு தீபம் ஏற்றுங்கள்

    கடன் தீர வேண்டுமா? விநாயகருக்கு கொள்ளு தீபம் ஏற்றுங்கள் வியாழக்கிழமை எமகண்ட நேரத்தில் வீட்டின் அருகில் இருக்கும் விநாயகர் கோயில்… Read More

    2 days ago

    திருப்தியாக எப்பொழுதும் இருக்கின்றோமா? | Satisfaction in Life Lessons

    திருப்தி - திருப்தியாக எப்பொழுதும் இருக்கின்றோமா? தநமது சூழ்நிலைகள் எப்பொழுதும் திருப்தியாக இருக்கின்றதா? சிலநேரங்களில் அதிருப்தி ஏற்படுவதற்கு என்னகாரணம்? மனம்… Read More

    6 days ago

    அனுமனை வணங்குவதால் கிடைக்கும் பயன்கள் | Hanuman prayer benefits

    Hanuman prayer benefits tamil ஜெய் ஶ்ரீ ராம்.. ராம பக்த அனுமனை வணங்குவதால் கிடைக்கும் பயன்கள் பற்றி இந்த… Read More

    1 week ago