இந்திய நேரப்படி சூரிய கிரகணம் ஜூன் 21 அன்று காலை 9.15 மணிக்கு தொடங்கி மதியம் 2:30 மணிக்கு முடிவடையும். கிரகணம் உச்சம் அடையக் கூடிய நேரம் நண்பகல் 12:18 மணி….
அமாவாஸ்யை தர்ப்பணம் பண்ண வேண்டிய தினம் 20-06-2020.சனிக்கிழமை
*சூரிய கிரகணம் 2020..*
இந்த சூரிய கிரகணம் காலை 9.15 மணிக்கு தொடங்குகிறது.மிதுன ராசியில் உள்ள மிருகஷீரிடம் நட்சத்திரத்தில் ஏற்படுகிறது. சூரிய கிரகணம் இந்தியாவில் மட்டுமல்லாமல் மத்திய ஆபிரிக்க குடியரசு, காங்கோ, எத்தியோப்பியா, பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட ஆப்பிரிக்காவிலும் தெரியும்.
சாஸ்திரப்படி கிரகண காலத்தில் செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்
1. சூரிய கிரகணம் ஏற்படுவதற்கு நான்கு யாமத்துக்கு, அதாவது 12 மணி நேரத்துக்கு முன்பும், சந்திர கிரகணத்துக்கு முன்பு மூன்று யாமத்துக்கு, அதாவது 9 மணி நேரத்துக்கு முன்பும் உணவு உட்கொள்வதை நிறுத்திவிடவேண்டும். 7 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 70 வயதுக்குட்பட்ட பெரியவர்களுக்கு அந்த விதியில்லை. முடியாதவர்கள் திரவ உணவுகளை உட்கொள்ளலாம். கிரகண காலத்துக்கு முன் சமைத்த உணவுகளை கிரகணத்துக்குப் பின் உண்ண வேண்டாம் என்கின்றன சாஸ்திரங்கள்.
2. நீர், வேகவைக்காத உணவுப் பொருள்களில் ஓரிரு தர்ப்பை புல்லைப் போட்டுவைக்க வேண்டும். இவை கிரகண தோஷம் ஏற்படாதவாறு தடுக்கும்.
3. கிரகண நேரத்தில் உறங்கக் கூடாது.
4. கிரகணத்தை நேரடியாகக் கண்ணால் காணக் கூடாது. இன்று அறிவியலாளர்களும் இதே கருத்தைச் சொல்கிறார்கள்.
5. கர்ப்ப ஸ்திரிகள் சூரியக் கிரணங்கள் மேனியில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
6. கிரகணம் தொடங்கும்போதும் முடிந்த பின்னும் கட்டாயம் குளிக்க வேண்டும்.
7. கிரகண காலத்தில் தர்ப்பணங்கள் செய்வது விசேஷம். தகப்பனார் இல்லாதவர்கள் இந்த நேரத்தில் தர்ப்பணம் செய்வதன் மூலம் அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுபடுவர். பிறப்பு, இறப்புத் தீட்டு இருப்பவர்களும் கிரகணத்தின்போது தர்ப்பணங்கள் செய்யலாம்.
8. கிரகண நேரத்தில் இறைவனை ஸ்தோத்திரம் செய்ய வேண்டியது அவசியம். இந்தக் காலத்தில் ஒரு முறை செய்யும் மந்திர ஜபம் பன்மடங்கு பலனைத் தரும் என்கிறது சாஸ்திரம். எனவே, அமைதியாக அமர்ந்து ஜபம் செய்ய வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் தனிமையில் அமர்ந்து இறைவனின் நாமத்தை சொல்லிக்கொண்டிருப்பது கருவில் இருக்கும் குழந்தைக்கு மிகவும் நன்மை பயக்கும்.
9. கிரகண நேரத்தில் தானம் அளிப்பது மிகவும் நன்மை பயக்கும். சூரிய கிரகணத்தின்போது கேதுவுக்குப் பிரியமான தானங்களை அளிப்பது விசேஷம். கோதுமை, கொள் அல்லது உளுந்து, தேங்காய், பழம் ஆகியவற்றைத் தானம் செய்வது நல்லது.
10. கிரகணம் எந்த நட்சத்திரக்காரர்களைப் பாதிக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப பரிகாரம் செய்வது அவசியம்.
ஸூர்ய க்ரஹணம்.
21/06/2020.ஞாயிற்றுக்கிழமை.
சூடாமணி க்ரஹணம்.
௨௮ ௺ வாக்ய(பாம்பு)பஞ்சாங்கப்படி
க்ரஹண ஆரம்பம் 10 22 Am.
க்ரஹண மத்யமம் 11 59 Am.
க்ரஹண மோக்ஷம் 1 42 Pm.
தர்ப்பணம் செய்யும் நேரம்.
10 30 Am முதல் 12 00 Pm வரை.
ஸ்நானம் தாநம் ஜபம் ஹோமம் யாவும் க்ரஹணகாலம் முழுவதும் செய்யலாம்.
ஆனி ( மிதுன ) மாத க்ருஷ்ண பக்ஷ ப்ரதமை திதி ச்ராத்தம் 21/06/2020.ஞாயிறன்று க்ரஹணம் முடிந்தவுடன் செய்ய வேண்டும்.
ரோஹிணீ.ம்ருகசீர்ஷம்.திருவாதிரை. சித்திரை.அவிட்டம்.ஆகிய நக்ஷத்ரம் உடையவர்கள் (ஸ்நானம் தாநம் ஜபம் செய்து) பரிஹாரம் செய்து கொள்ள வேண்டும்.
20/06/2020 இரவு 10மணிக்குள் எல்லோரும் போஜநம் செய்ய வேண்டும்.
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எந்த நியமமும் கிடையாது.
கர்ப்பிணிப்பெண்கள்.
(சர்க்கரை வ்யாதி. ரத்தகொதிப்பு. தவிர)
வ்யாதியுள்ளவர்கள்
80 வயதுக்கு மேற்பட்டவர்கள்
இவர்கள் யாவரும் தேவைப்பட்டால் பால் அருந்தலாம்.க்ரஹணகாலத்தில் இதுவும் தள்ளுபடி.
க்ரஹணம் முடிந்தவுடன் மோக்ஷ ஸ்நானம் கட்டாயம் அனைவரும் செய்ய வேண்டும்.
க்ரஹண காலத்தில் சொல்ல வேண்டிய ச்லோகம்.
இந்த்ரோநலோ தண்டதரஸ்ச ருக்ஷ:
ப்ரசேதஸோ வாயு குபேர ஈச: ।
மஜ்ஜன்ம ருக்ஷே மமராசி ஸம்ஸ்த்தே
ஸூர்யோபராகம் ஸமயந்து ஸர்வே.।।
ப்ரம்மோபதேசம் ஆனவர்கள் (1008) காயத்ரீ ஜபத்தை அவச்யம் செய்ய வேண்டிய விஷயம்.
*ஓம் நமச்சிவாய..*
அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (20) நாள் 3.5.2021 செவ்வாய்க்க்கிழமை அட்சய திருதியை… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our WhatsApp group _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°°°°°… Read More
Guru Peyarchi Palangal 2022-23 Parigarangal குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 (Guru Peyarchi Palangal 2022-23)… Read More
Mesha rasi guru peyarchi palangal 2022-23 குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22 Mesha rasi guru peyarchi palangal 2022-23… Read More
Rishaba Rasi Guru Peyarchi Palangal 2022-23 ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் Rishaba Rasi Guru Peyarchi Palangal… Read More
Mithuna rasi Guru peyarchi palangal 2022-23 மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Mithuna rasi guru peyarchi palangal… Read More
Leave a Comment