Temples

ஐயப்பனின் அறுபடை வீடுகள் | famous ayyappan temples

ஐயப்பனின் அறுபடை வீடுகள் | Famous ayyappan temples

தமிழ் கடவுளான முருகனைப் போல் தர்ம சாஸ்தாவான ஐயப்பனுக்கும் அறுபடை வீடுகள் உள்ளன. அவை:

1 ஆரியங்காவு
2 அச்சன்கோவில்
3 குளத்துப்புழா
4 எரிமேலி
5 பந்தளம்
6 சபரிமலை

சிறிது விளக்கமாக பார்ப்போம் :

1. ஆரியங்காவு

Aryankavu

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள கோயிலில் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக அய்யப்பன் காட்சி தருகிறார்.

2. அச்சன்கோவில்

செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இது அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்று விக்கப்பட்ட இந்த கோயிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக அமர்ந்த நிலையில் கையில் அமுதமும் கருப்ப னின் காந்தமலை வாளும் ஏந்திய திருக்கோலத்தில் அய்யப்பனை தரிசிக்கலாம். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போல் காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பனை ‘கல்யாண சாஸ்தா‘ என்று அழைக்கிறார்கள். இதனால், திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகம் வந்து வழிபடுகின்றனர்.

3. குளத்துப்புழா


செங்கோட்டையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது இது. இங்கு அய்யப்பன் குழந்தை வடிவில் குடி கொண்டுள்ள தால் ‘பால சாஸ்தா‘ என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்த கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டு உள்ளது.

4. எரிமேலி

கேரளாவில் உள்ள இத்தலத்தில் அய்யப்பன் கைகளில் வில், அம்பு ஏந்தி வேடன் போன்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். எருமேலியும் கேரளாவி லேயே உள்ளது.

5. பந்தளம்

இந்த தலத்தில் தான் பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் அய்யப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோயில் இங்கு உள்ளது. இங்கு சுவாமி ஐயப்பனுக்குரிய உரிய திருஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. பந்தளம் என்பது ஐயப்பன் வாழ்ந்ததாக கரு தப்படும் பந்தளம் அரண்மனை இருக்கும் இடம். இது அச்சன்கோவில் நதியின் கரையில் அமைந்துள்ளது. மகரவிளக்கின் போது இங்கிருந்து கொண்டு செல்லப்படும் ஆபரணங்கள் தான் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகின்றன. இதன் அருகில் செங்கனூர் ரயில் நிலையம் உள்ளது.

6. சபரிமலை

கேரளாவில் உள்ள இங்கு தர்மசாஸ்தாவான ஐயப்பன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி கேட்பவர்களுக்கு கேட்ட வரம் வாரி வழங்கும் வள்ளலாக காட்சி தருகிறார். சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், ஐயப்பனின் அறுபடை வீடுகளான இந்த 6 கோயில்களுக்கும் சென்று வழிபட்டால் சீரும் சிறப்பும் பெற்று வாழ்வார்கள் என்பது நம்பிக்கை….

அச்சன்கோவில் அரசே சரணம் ஐயப்பா…

ஆர்யங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா…

குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா…

பந்தள ராஜனே சரணம் ஐயப்பா….

சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா…….

ஸ்வாமியே சரணம் ஐயப்பா….

தேவ தேவனே சரணம் ஐயப்பா…

ஆனந்த தரிசனம் தர வேண்டும் ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன் ஆனந்த சித்தன் அய்யன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் பொன் ஐயப்பா…..

 

தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் காயத்ரி மந்திரம்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐயப்பன் காயத்ரியை தினமும் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும்.

ஓம் பூதநாதய வித்மஹே
மஹாசாஸ்தாய தீமஹி
தந்நோ ஐயப்ப ப்ரசோதயாத்…

https://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/thathvamasi-gayathri-mantra/

 

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
Tags: Lord Ayyappa
 • Recent Posts

  பசு வழிபாட்டின் மகத்துவம் | Benefits of worshipping cow Tamil

  பசு வழிபாட்டின் மகத்துவம். பசு வழிபாட்டின் மகத்துவம் - (Benefits of worshipping cow) இந்துக்களுக்குரிய வழிபாடுகளில் பசு வழிபாடு… Read More

  2 weeks ago

  வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits

  வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம்… Read More

  3 weeks ago

  108 Murugar Names tamil | 108 முருகர் போற்றி

  108 Murugar Names tamil | 108 முருகர் போற்றி 108 murugar names ஓம் அழகா போற்றி ஓம்… Read More

  1 month ago

  Kandha guru kavasam lyrics | கந்த குரு கவசம் பாடல் வரிகள்

  Kandha guru kavasam lyrics கந்த குரு கவசம் பாடல் வரிகள்... Kandha guru kavasam கலியுகத் தெய்வமே கந்தனுக்கு… Read More

  1 month ago

  அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya Tritiya benefits

  அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (20) நாள் 3.5.2021 செவ்வாய்க்க்கிழமை அட்சய திருதியை… Read More

  2 months ago

  Today rasi palan 29/6/2022 in‌‍‌ tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் புதன்கிழமை ஆனி – 15

  Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our WhatsApp group   *_📖 பஞ்சாங்கம்:… Read More

  6 hours ago