Guru bhagavan temples
குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்…
குருப் பெயர்ச்சியின் மூலம் ஒவ்வொரு ஆண்டும், மனிதர்களின் பொருளாதார வாழ்வில் ஏற்ற, இறக்கத்தை ஏற்படுத்தி உலக பொருளாதாரத்தையே, முழு கட்டுப்பாட்டில் வைப்பவர் குரு பகவான்.
வழிப்பட வேண்டிய குரு தலங்கள் சிலவற்றை காணலாம்.
ஆலங்குடி :
குருபகவானுக்குரிய விஷேசத் தலமாக ஆலங்குடி விளங்குகிறது. வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணிவித்து முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து இந்தக் குரு பகவானை வழிபடுவது சிறப்பு.
பட்டமங்கலம்:
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இக்கோவிலில், குரு பகவான் கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்த கோலத்தோடு காட்சி தருகிறார்.
மயிலாடுதுறை :
இங்கு தட்சிணாமூர்த்தியாக அருள் பொழியும் குரு பகவானையும், உத்திர மாயயூரம் என்று அழைக்கப்படும் வள்ளர் கோவிலில் தட்சிணாமூர்த்தியாக ரிஷப தேவருக்கு உபதேசம் செய்யும் மேதா தட்சிணாமூர்த்திப் பெருமாளையும் வழிபட குரு தோஷங்கள் நிவர்த்தியாகும்.
திருச்செந்தூர்:
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவதான திருச்செந்தூர் திருத்தலம், குருபகவானின் பரிகாரத்துக்கு அவசியம் தரிசிக்கப்பட வேண்டிய தலம் இது.
தென்குடி திட்டை:
கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் உள்ளது. இங்குள்ள குரு, ராஜயோக குருவாக தனிச்சன்னிதியில் காட்சி அளிக்கிறார்.
தக்கோலம் :
அரக்கோணத்தில் இருந்து காஞ்சீபுரம் செல்லும் வழியில் உள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி கலைநயத்தோடு காணப் படுகிறார்.
கும்பகோணம்
கும்பகோணத்தில், கோபேஸ்வரர் ஆலயம் குரு பரிகாரத்திற்கு ஏற்ற ஆலயமாகக் கருதப்படுகிறது. குருபகவான் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று.
அயப்பாக்கம்
சென்னை அயப்பாக்கத்தில் அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தி 16 அடி உயர பிரம்மாண்ட மூர்த்தி. குருபகவானின் இயல்புபடியே இவர் கல்விச்செல்வம் வழங்குவதில் தன்னிகரற்றவர் என்பது பக்தர்கள் அனுபவம்.
திருவலிதாயம்:
தற்போது சென்னைக்கு அருகில் உள்ள ‘பாடி’ என்னும் இடமே ‘திருவலிதாயம்’ என்னும் தலம் ஆகும். இங்கு குருபெயர்ச்சி வெகு விமர்சியாக கொண்டாடப்படுகின்றது… குரு பகவானுக்கு தனி ஒரு சந்நிதி அமைந்து உள்ளது. இத்திருத்தலத்தில் குரு பகவானுக்கு விசேஷ பூஜைகள் ஒவ்வொரு வியாழக்கிழமைகளில் நடைபெறும்…
குச்சனூர்
தேனி மாவட்டம் குச்சனூர் குருபகவான் வடக்கு திசை நோக்கி யானை வாகனத்துடன் ராஜதோரணையில் அருள்கிறார். இவரை வழிபட்டால், பித்ரு தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.
திருவொற்றியூர்
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு முன்பு தட்சிணாமூர்த்திக்கு தனிக் கோவில் உள்ளது. சுமார் 10 அடி உயரத்தில் அற்புதமான வடிவழகுடன் அருள் ததும்பும் திருமுகத்தோடு வீற்றிருக்கிறார். ஆலமரம் இவருக்கு குடை பிடிப்பதுபோல அமைந்துள்ளது.
இன்னும் தமிழகத்தின் பல இடங்களிலும் குருபகவான் அருள்பாலிக்கிறார். அனைத்து ஊர்களிலும் உள்ள சிவாலயங்களிலும் நவக்கிரகத்தில் குரு பகவான் வீற்றிருப்பார். தட்சிணாமூர்த்தியாகவும் தனி சன்னிதியில் வீற்றிருப்பார்.
1/5/2024 அன்று நடைப்பெற இருக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்…
*குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-2025*
*1-5-2024 – புதன் கிழமை*
மேஷம் – https://bit.ly/mesham-gp-24-25
ரிஷபம் – https://bit.ly/rishabam-gp-24-25
மிதுனம் – https://bit.ly/mithunam-gp-24-25
கடகம் – https://bit.ly/kadagam-gp-24-25
சிம்மம் – https://bit.ly/simmam-gp-24-25
கன்னி- https://bit.ly/kanni-gp-24-25
துலாம் – https://bit.ly/thulam-gp-24-25
விருச்சிகம் – https://bit.ly/viruchigam-gp-24-25
தனுசு – https://bit.ly/thanusu-gp-24-25
மகரம் – https://bit.ly/magaram-gp-24-25
கும்பம் – https://bit.ly/kumbam-gp-24-25
மீனம் – https://bit.ly/meenam-gp-24-25
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் *பஞ்சாங்கம் ~ க்ரோதி ~ ஐப்பசி… Read More
Lakshmi kubera pooja சகல ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர விரத பூஜை... சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளிதரும் தீபாவளி திருநாளில்… Read More
Diwali celebrations தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம்? நாம் எல்லோரும் எதிர்ப்பார்த்திருக்கும் ஒரு முக்கிய பண்டிகை தீபாவளி. அதாவது தீபங்களின் வரிசைகள்,… Read More
Yema Deepam தீபாவளிக்கு முந்தைய நாள் அன்று யம தீபம் ஏற்றுங்கள் ! யம தீபம் - 30/10/2024 -------------------… Read More
Lord mururgar different darshan temples குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அபூர்வ தோற்றத்தில் முருகன் காட்சி… Read More
ஏன் காலையில் சுப்ரபாதம் பாடுகிறோம் என்று தெரியுமா? விஸ்வாமித்திரரின் யாகத்தினை ஒருமுறை காக்க சென்ற போது, கங்கைக்கரையில், ராம லட்சுமணர்கள்… Read More
Leave a Comment