சகல ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர விரத பூஜை…
சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளிதரும் தீபாவளி திருநாளில் நாம் செய்யும் பூஜையின் மூலம் சகல ஐஸ்வர்யங்களையும் பெற முடியும். அதில் மிக முக்கியமான பூஜை லட்சுமி குபேர பூஜை. செல்வ வளங்களை வழங்கிடும் மகாலட்சுமியையும், நவநிதிகளையும் வைத்துள்ள குபேரரையும் ஒரு சேர பூஜை செய்வதன் மூலம் நமது செல்வ நிலை உயரும். தரித்திரம் நீங்கும். இதற்கு மிகவும் உன்னதமான நாள் தீபாவளி திருநாள்.
திருமகள் திருவருளால் செல்வம் பெருகும் :
மகா விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் மகாலட்சுமி தீபாவளி தினத்தில் நமது இல்லம் தேடி வந்து அருள் பாலிக்கிறாள். தீபாவளி தினத்தின் மாலை 6 மணிக்கு முன்பே லட்சுமி குபேர பூஜை செய்வது நல்லது. நமது இல்லம் மகாலட்சுமியை வரவேற்க அலங்காரம் அணிவகுப்பு செய்திட வேண்டும். வாசலில் வண்ண கோலமிட்டு பூஜையறையில் குபேர கோலம் இட வேண்டும். மகாலட்சுமியின் திருவருளால் அனைத்து செல்வங்களும் அதாவது தனம், தான்யம், மக்கட் செல்வம், வீடு, தைரியம், வீரம், அறிவு என அனைத்தையும் பெற முடியும்.
குறைவற்ற செல்வம் வழங்கும் குபேரன் :
திரேதா யுகத்தில் ஸ்ரீமுக ஆண்டு, தனுசு ராசி, பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர் குபேரர். தந்தையார் விஸ்வரஸ், தாயார் சுவேதாதேவி. சிறந்த சிவ பக்தனாகிய குபேரன் இந்திரனுக்கு இணையாக புஷ்பக விமானத்தில் பயணித்த பெருமை பெற்றவர். சிவனின் அருள்பெற்று அளகாபுரிக்கு அரணாக விளங்கிய குபேரன் வடதிசைக்கு அதிபதியாகவும் திகழ்கிறார்.
குபேரன் திருமுத்துகுடையான் கீழ் தாமரை மலர் மீதுள்ள ஆசனத்தில் ஒரு அபயமுத்திரையுடன் அமர்ந்திருக்கிறார். அவரது இருபுறமும் சங்க நிதி, பதும நிதி, என்ற தன தேவதைகள் வீற்றிருப்பர். அவர் தன் அருகே இரத்தினங்களை உதிரும் கீரிப்பிள்ளை வைத்திருப்பார். இத்தகைய சிறப்புமிக்க குபேரனை மகாலட்சுமியுடன் இணைந்து பூஜை செய்வதன் மூலம் குறைவற்ற செல்வநிதியை வாரி வழங்குவார்.
லட்சுமி குபேர பூஜை செய்யும்முறை :
சிறப்பாக முறையான லட்சுமி குபேர பூஜை என்பது வேத மந்திரங்கள் ஓத கலசம் வைத்து செய்யப்பட வேண்டும். சாதாரணமாக வீட்டில் நாமே செய்வது என்றால் பூஜை மாடத்தில் லட்சுமி குபேர படத்தினை வைத்து இருபக்கமும் குத்து விளக்கு ஏற்ற வேண்டும். இப்படத்திற்கு முன்பாக பெரிய வாழை இலை வைத்து அதில் நவ தானியங்களை தனித்தனியாக பரப்பி வைக்க வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து அதில் மஞ்சள் கலந்து பின் மாவிலை சொருகி அதன்மேல் ஓர் மட்டை தேங்காய் வைத்திட வேண்டும். அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரித்திட வேண்டும்.
பின் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையை ஆரம்பித்திட வேண்டியதுதான். நமக்கு தெரிந்த விநாயகர் துதி மற்றும் பாடல்களை பாடி பூஜையை செய்ய வேண்டும். பின் மகாலட்சுமியை வணங்கி போற்றி வழிபட வேண்டும். அதன்பின் குபேர மந்திரங்கள் (அ) “குபேராய நமஹ” “தனபதியே நமஹ” என 108 முறை சொல்லி தாமரை இதழ்கள் (அ) பூக்களால் பூஜிக்க வேண்டும். தாமரை மலர் லட்சுமி மற்றும் குபேரனுக்கு உகந்த மலர்.
பின் நைவைத்தியமாக இனிப்புகள் மற்றும் பால் பாயாசம் போன்றவை வைத்து பூஜை முடித்திட வேண்டும். பூஜையில் தட்சணையாக காசுகள் வைக்கப்பட வேண்டும். அதனை பூஜை முடிந்தவுடன் எடுத்து நமது பெட்டகங்களில் வைத்துவிடலாம். சிலர் தாம்பூலங்களையும், காசுகளையும் தானமாக வழங்கிடுவர். லட்சுமி குபேர பூஜை தீபாவளி தினத்தில் செய்யும்போது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதுடன் குபேரன் சகல ஐஸ்வர்யத்தையும் வாரி வழங்கிடுவார்…
குபேர மந்திரம் 1🙏
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் குபேராய ஐஸ்வர்யாய குபேர ராஜாய சங்க ரூபாய வியாபார வ்ருத்திம் குரு குரு ஸ்வாஹா!🙏
🙏குபேர மந்திரம் 2🙏
ஓம்க்லீம் ஸ்ரீம் குபேராய தனாகர்ஷணாய தனராஜாய மம வ்யாபார ஸ்தலே தனங்ருத்திம் குரு ஸ்வாஹா!🙏
🙏குபேர மந்திரம் 3🙏
ஓம் ஸ்ரீ வர்ரீம் க்லீம் ஐம் ஓம் தனதான்யாய க்லீம் நமோ குபேர ராஜ யட்சேசாய அஸ்ய யஜமானஸ்ய வ்யாபார அனுகூலம் வர்தய வர்தய ஸ்வாஹா.!!🙏🙏🙏
ஸ்ரீலக்ஷ்மிகுபேர வழிபாடு
பூஜிக்கும் முறை!!🙏
குபேர பூஜை துவங்குவதற்கு முன்னால் எப்போதும் போல் விநாயகரை தியானித்து அவரைப் பூஜிக்க வேண்டும். தொடர்ந்து லட்சுமி தேவியை விளக்கு வடிவிலோ அல்லது படமாகவோ அல்லது கலசத்தில் ஆவாஹனம் செய்து, ஸ்ரீசூக்த பாராயணத்துடன் தூபதீபம் போன்ற பதினாறு உபசரணைகள் செய்து பூஜிக்கவேண்டும். தன்னிடம் இருக்கும் செல்வ வளத்தை மற்றவர்களுக்கும் அடியவர்களுக்கும் வரமாக வழங்கும் வரத்தை குபேரனுக்கு அருளியவள் திருமகளே. ஆகவே, திருமகளை வழிபட்டபிறகு குபேரனை வழிபடுவது சிறப்பு.!!
செல்வம் பெறுக மஹாலக்ஷ்மி ஸ்லோகங்கள்
Maruvathoor om sakthi song lyrics tamil மருவத்தூர் ஓம் சக்தி பாடல் வரிகள் | Maruvathur om sakthi… Read More
Sani peyarchi palangal 2025-2027 சனிப்பெயர்ச்சி 2025-2027 பலன்கள் (Sani Peyarchi Palangal 2025) இந்த மாற்ற நிலை 29.03.2025… Read More
காரடையான் நோன்பு -விளக்கம்-விரத முறை *காரடையான் நோன்பு* 🙏🙏 *காரடையான் நோன்பு* *சிறப்பு பதிவு* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *14.03.2025* *வெள்ளிக் கிழமை*… Read More
Mesham sani peyarchi palangal 2025-27 மேஷராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் (Mesham sani peyarchi) மேஷ ராசி (… Read More
Rishabam sani peyarchi palangal 2025-27 சனிப்பெயர்ச்சியால் யோகங்களை பெற உள்ள ரிஷப ராசி (Rishabam rasi sani peyarchi… Read More
கடகம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.. Kadagam sani peyarchi palangal 2025-27 சனி பகவான் 2025 புத்தாண்டில் மார்ச் 29,… Read More