மீனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Meena rasi guru peyarchi palangal 2024-25
மீனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 – 2025
மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்பவர்களே…!
எளிய மக்களை அதிகம் நேசிக்கும் அன்பர் நீங்கள்.
குடும்ப குரு – மீனம்
குரு பகவானின் அருள் பெற்ற மீன ராசி அன்பர்களே.
01.05.2024 முதல் 13.04.2025 வரை
குருபகவானின் நட்சத்திர பயணம்:
1.5.2024 முதல் 13.6.2024 வரை சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் செலவுகளும், பயணங்களும் அதிகரிக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். பிரச்சினைகளை பேசித் தீர்ப்பது நல்லது. வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
13.6.2024 முதல் 19.8.2024 வரை மற்றும் 28.11.2024 முதல் 10.4.2025 வரை சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் பிள்ளை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து ஒருபடி உயரும். வேலை கிடைக்கும். பிரபலங்களால் ஆதாயமுண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். புது ஆடை, ஆபரணம், வாகனம் வாங்குவீர்கள். சொத்து சேரும். வீடு மாறுவீர்கள்.
20.8.2024 முதல் 27.11.2024 வரை மற்றும் 10.4.2025 முதல் 13.4.2025 வரை செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் தந்தை வழியில் நிம்மதியுண்டு. ஓரளவு பணம் வரும். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பழைய நண்பர்களால் ஆதாயமுண்டு. ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.”
அருகில் இருப்பவர்களின் குறை, நிறைகளை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு செல்வாக்கையும், செல்வ செழிப்பையும் தந்த குருபகவான் 01.05.2024 முதல் 13.04.2025 வரை ராசிக்கு 3-ம் வீட்டில் மறைகிறார். 3-ம் இடத்து குரு முடக்கிவிடுமே என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். உங்களுடைய ராசிநாதன் குரு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. பணவரவு தொடரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புது வாகனமும் வாங்குவீர்கள். இடம் மாறுவீர்கள். உங்களிடம் எழுத்துத் திறமை அதிகரிக்கும். ரசனைக்கேற்ப வீடு அமையும். கணவருக்கு வேலைக் கிடைக்கும். குருபகவான் மாங்கல்ய ஸ்தானமான 7-ம் வீட்டை பார்ப்பதால் கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சிலர் தனிக் குடித்தனம் செல்வீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு நல்ல விதத்தில் முடியும். உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. 3-ம் இடத்தில் அமரும் இந்த குருவால் திட்டமிடாத விஷயங்களில் அலைச்சல் ஏற்படும். சின்ன சின்ன வேலைகளைக் கூட முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடித் தான் முடிக்க வேண்டி வரும். மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். இளைய சகோதர வகையில் பகைமை வரக்கூடும். கூடாப்பழக்க வழக்கத்தை தவிர்ப்பது நல்லது.”
“மாமனார், மாமியார் வகையில் மனத்தாங்கல் வரம். குரு 7-ம் வீட்டை பார்ப்பதால் கணவர் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார். குரு 9-ம் வீட்டை பார்ப்பதால் சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். குரு லாப வீட்டை பார்ப்பதால் மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். குழந்தை பாக்கியம் உண்டு. சிலர் புதிதாக முதலீடு செய்து புது தொழில் தொடங்குவீர்கள். நாத்தனாருக்கு நல்ல இடத்தில் திருமணம் முடியும்.
“உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசத்தை நீங்களே செலவு செய்து முன்னின்று முடிப்பீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ளுங்கள். உடம்பில் இரும்பு, சுண்ணாம்புச் சத்து குறையும்.
மருத்துவரின் ஆலோசனை யின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். தினசரி நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் சட்டப்படி ஆவணங்களையெல்லாம் தயாரித்து வழக்கறிஞர் மூலமாக இறங்குவது நல்லது. வெற்றுத் தாளில் கையொப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள்.
வியாபாரத்தில் பழைய தவறுகள் நிகழ்ந்துவிடாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள். இழப்புகளை சரி செய்வீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். பதிப்பகம், போர்டிங், லாட்ஜிங், ஸ்பெகுலேஷன், ஏற்றுமதி- இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் பங்குதாரராக அறிமுகமாவார்.
உத்தியோகத்தில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். தடைப்பட்டிருந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். கேட்ட இடத்துக்கே மாற்றம் கிடைக்கும். உங்களுடைய ஆளுமைத் திறன் பாராட்டிப் பேசப்படும். பொய் வழக்கிலிருந்து விடுபடுவீர்கள். இந்த குரு மாற்றம் சின்னச் சின்ன அலைச்சலையும், செலவுகளையும் தந்தாலும் உங்களை தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்க உதவும்.
மீனம் ராசி குருப்பெயர்ச்சி பரிகாரம்: தஞ்சாவூர் – திருகருகாவூர் வழியில் உள்ள தென்குடித் திட்டையில் உள்ள சிவாலயத்தில் ராஜகுருவாக அருள்பாலிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வணங்குங்கள். அனாதை ஆசிரமங்களுக்கு உதவுங்கள்.
குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-25
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்
குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்
சந்திரனுக்குக் கிடைத்த சாபம் | Chandran Vinayagar Story Tamil சந்திரனுக்குக் கிடைத்த சாபம்! ஒருமுறை, சந்திரன் கயிலைக்குச் சென்றிருந்தபோது,… Read More
Vinayaga 100 special information விநாயகர் சதுர்த்தி விரதம் சிறப்பு பதிவு. விநாயகர் பற்றிய 100 அரிய குறிப்புகள் .… Read More
Vinayagar Agaval Lyrics in Tamil விநாயகர் அகவல் (Vinayagar Agaval) - ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர்… Read More
ஓம் கணநாதனே போற்றி போற்றி ஓம் ஞான முதல்வனே போற்றி ஓம் வெள்ளை கொம்பனே போற்றி கணபதியே கணபதியே… கணபதியே… Read More
Vinayaka Chathurthi Pooja Procedure Tamil விநாயகர் சதுர்த்தி (7/9/2024) வழிபடும் முறைகள் (Vinayagar Chathurthi Pooja Procedure in… Read More
Vinayagar Statue directions வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்? ⭐ விநாயகர் சதுர்த்தி, விநாயகரின் முக்கியமான விழாவாகும்.… Read More
Leave a Comment