Temples

Kadan Theera Tips in Tamil | சாரபரமேஸ்வரர் சிவன் 108 போற்றி

Kadan Theera Tips in Tamil

11 திங்கள் வழிபடுங்கள் படும் துயர் யாவும் ஓடிப்போகும்.. (Kadan theera tips) கடன் சுமை நீக்கும் ரிண விமோசன லிங்ககேஸ்வரர். எல்லோரும் எல்லா வித கடன் தொல்லை நீங்கி இன்புற்று வாழ பிரார்த்திக்கின்றோம்.

மூலவர் : சாரபரமேஸ்வரர், செந்நெறியப்பர்
அம்மன்/தாயார் : ஞானாம்பிகை, ஞானவல்லி
தல விருட்சம் : மாவிலங்கை
தீர்த்தம் : மார்க்கண்டேய தீர்த்தம், பிந்து சுதா தீர்த்தம், ஞான தீர்த்தம்
புராண பெயர் : உடையார் கோயில்
ஊர் : திருச்சேறை
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு

கடன் தீர பணம் சேர ரிண விமோச்சன லிங்கேஸ்வரா…

சாரபரமேஸ்வரர் சிவன் 108 போற்றி :

1. ஓம் தியானேஸ்வரனே போற்றி போற்றி

2. ஓம் பரமரகசியனே போற்றி போற்றி

3. ஓம் ஜெகத் ரட்சகனே போற்றி போற்றி

4. ஓம் சின்மய முத்திரையே போற்றி போற்றி

5. ஓம் மருத்துவப் பொருளே போற்றி போற்றி

6. ஓம் பொற்கழல் நாயகனே போற்றி போற்றி

7. ஓம் பிறப்பு அறுப்பவனே போற்றி போற்றி

8. ஓம் எண்ணிலா கருணையே போற்றி போற்றி

9. ஓம் சுடலை ஈசனே போற்றி போற்றி

10. ஓம் வேதப் பொருளே போற்றி போற்றி

11. ஓம் பிறைசூடிய பித்தா போற்றி போற்றி

12. ஓம் மௌன குருவே போற்றி போற்றி

13. ஓம் சிவ மருந்தே போற்றி போற்றி

14. ஓம் சிவ துதியே போற்றி போற்றி

15. ஓம் சிவ யோகமே போற்றி போற்றி

16. ஓம் சிவ நீதியே போற்றி போற்றி

17. ஓம் சிவ கயிலையே போற்றி போற்றி

18. ஓம் கஷ்டம் விலக்குபவனே போற்றி போற்றி

19. ஓம் தமிழ் வேதச் சரமே போற்றி போற்றி

20. ஓம் வினை தீர்ப்பாய் போற்றி போற்றி

21. ஓம் குறை பொறுத்தவா போற்றி போற்றி

22. ஓம் ஆருத்ரா போற்றி போற்றி

23. ஓம் அனைத்து உயிர் தாயே போற்றி போற்றி

24. ஓம் அனைத்து உயிர் தந்தையே போற்றி போற்றி

25. ஓம் கேட்டதை கேட்டபடி தருபவனே போற்றி போற்றி

26. ஓம் திரிசூல திரயம்பகனே போற்றி போற்றி

27. ஓம் பிக்க்ஷாடனரே போற்றி போற்றி

28. ஓம் அர்த்த நாரீஸ்வரா போற்றி போற்றி

29. ஓம் மெய்ஞான ரூபனே போற்றி போற்றி

30. ஓம் கருணை நாதா போற்றி போற்றி

31. ஓம் கொன்றை மலர் சூடியவா போற்றி போற்றி

32. ஓம் இன்சொல் அன்பனே போற்றி போற்றி

33. ஓம் சிவ குல கொழுந்தே போற்றி போற்றி

34. ஓம் பீஜாச்சரனே போற்றி போற்றி

35. ஓம் உள்ளொளி ஜோதியே போற்றி போற்றி

36. ஓம் நீக்கமற நின்றவா போற்றி போற்றி

37. ஓம் இசை பிரியனே போற்றி போற்றி

38. ஓம் பாடல் லயனே போற்றி போற்றி

39. ஓம் மெய் ஞான குருவே போற்றி போற்றி

40. ஓம் தத்துவப் பொருளே போற்றி போற்றி

41. ஓம் தத்புருஷா போற்றி போற்றி

42. ஓம் பதப்படுத்துபவனே போற்றி போற்றி

43. ஓம் மனதிடப்படுத்துபவனே போற்றி போற்றி

44. ஓம் நிகரற்றவா போற்றி போற்றி

45. ஓம் பிறை நிலவே போற்றி போற்றி

46. ஓம் பன்னிரு திருமறையே போற்றி போற்றி

47. ஓம் பராமரிப்பவனே போற்றி போற்றி

48. ஓம் வேதத்தை படைத்தவனே போற்றி போற்றி

49. ஓம் கருணை கொண்ட பாதமே போற்றி போற்றி

50. ஓம் சிதம்பர ரகசியமே போற்றி போற்றி

51. ஓம் மறையாத கீர்த்தியே போற்றி போற்றி

52. ஓம் சர்வ வியாபியே போற்றி போற்றி

53. ஓம் என் குறை தீர்ப்பாய் போற்றி போற்றி

54. ஓம் எனக்கென்று செவிசாய்த்தாய் போற்றி போற்றி

55. ஓம் பேசும் தெய்வமே போற்றி போற்றி

56. ஓம் பிராண நாதா போற்றி போற்றி

57. ஓம் மன்னித்து காப்போனே போற்றி போற்றி

58. ஓம் இலையில் மருந்தானவா போற்றி போற்றி

59. ஓம் சிவதீட்சை தந்த சிவமே போற்றி போற்றி

60. ஓம் சிவனடியார் வழிகாட்டியே போற்றி போற்றி

61. ஓம் அன்பு வசம் ஆனவனே போற்றி போற்றி

62. ஓம் உலக முதல்வா போற்றி போற்றி

63. ஓம் குருவாகி வந்த ரூபனே போற்றி போற்றி

64. ஓம் சிவ அடியார்க்கு அடிமையானவனே போற்றி போற்றி

65. ஓம் உலகை ஆட்டி வைப்பவனே போற்றி போற்றி

66. ஓம் சூரியனை படைத்தவா போற்றி போற்றி

67. ஓம் சந்திரனால் குளிர்ச்சித்தவா போற்றி போற்றி

68. ஓம் பரவெளியில் புலப்படாதவா போற்றி போற்றி

69. ஓம் சித்தத்தில் சிவமாக அமர்ந்தவா போற்றி போற்றி

70. ஓம் நரை, திரை, மூப்பு இல்லாதவா போற்றி போற்றி

71. ஓம் எம காலனிடம் காக்க வல்ல தவமே போற்றி போற்றி

72. ஓம் பிணி தீர்த்தாய் போற்றி போற்றி

73. ஓம் மனம் கூடினால் கூடுபவனே போற்றி போற்றி

74. ஓம் உன்னை வேண்ட உன்னை தருவாய் போற்றி போற்றி

75. ஓம் எல்லாவற்றிலும் உறைந்தாய் போற்றி போற்றி

76. ஓம் விதைக்குள் உயிரானவா போற்றி போற்றி

77. ஓம் உழவனின் உழைப்பானவா போற்றி போற்றி

78. ஓம் என் நினைவில் அகலாதவா போற்றி போற்றி

79. ஓம் என் பிறப்பறுக்க மனதை ஆட்கொள்வாய் போற்றி போற்றி

80. ஓம் வேண்டும் வரம் அளிக்கும் பரமனே போற்றி போற்றி

81. ஓம் இனம் அற்றவா போற்றி போற்றி

82. ஓம் ஐம் பூத நாயகனே போற்றி போற்றி

83. ஓம் ஞான திருஷ்டி தந்தனரே போற்றி போற்றி

84. ஓம் மோத நாடி உடைத்தருள்வாய் போற்றி போற்றி

85. ஓம் அண்ணாமலையரே போற்றி போற்றி

86. ஓம் ஜோதி மலையனே போற்றி போற்றி

87. ஓம் குண்டலிபதியானவரே போற்றி போற்றி

88. ஓம் மந்திர வலிமை தருபவனே போற்றி போற்றி

89. ஓம் தலை உச்சியின் உள் இறங்குபவரே போற்றி போற்றி

90. ஓம் எல்லாம் துறந்த சிவசொரூபனரே போற்றி போற்றி

91. ஓம் உடல் எங்கும் வியாபிப்பவரே போற்றி போற்றி

92. ஓம் வில்வத்தால் வினைபோக்கச் செய்தவரே போற்றி போற்றி

93. ஓம் மோனசக்தியில் சிவசத்து தந்தனரே போற்றி போற்றி

94. ஓம் அண்ணாமலையானவரே போற்றி போற்றி

95. ஓம் ஆத்ம ஞானனே போற்றி போற்றி

96. ஓம் சித்தனாக உலகில் உலா வருபவரே போற்றி போற்றி

97. ஓம் பாறைக்குள் தேரைக்கு உணவு தந்தவரே போற்றி போற்றி

98. ஓம் கௌரி நாதனே போற்றி போற்றி

99. ஓம் சங்கத் தமிழ் தந்தவா போற்றி போற்றி

100. ஓம் கௌரி கண்ட மூர்த்தியரே போற்றி போற்றி

101. ஓம் மௌன மௌளீஸ்வரரே போற்றி போற்றி

102. ஓம் முப்பால் கடந்தவரே போற்றி போற்றி

103. ஓம் சிவபுரத்தவரே போற்றி போற்றி

104. ஓம் தேவர்களின் தெய்வமே போற்றி போற்றி

105. ஓம் நீதி கடவுளானவரே போற்றி போற்றி

106. ஓம் மானசீக பூஜை ஏற்பவரே போற்றி போற்றி

107. ஓம் தெய்வத்திற்கு எல்லாம் தெய்வம் தட்சிணாமூர்த்தியே போற்றி போற்றி

108. ஓம் எல்லாம் விலகி நின்மனதில் சிவ தரிசனம் கண்டனரே போற்றி போற்றி

சிவாயநம திருச்சிற்றம்பலம்….

அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கடன் நிவர்த்தி செய்யும் ரிண விமோசன லிங்கேஸ்வரர் இங்கு சிறப்பு. இத்தலத்தில் மட்டுமே மூன்று துர்க்கைகள் அமைந்துள்ளன. சிவ துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என மூன்று வடிவங்களாக ஒரே சன்னதியில் காட்சியளிப்பது சிறப்பாகும். இங்குள்ள பைரவருக்கு அப்பர் தனியாக தேவார பாடல் பாடியுள்ளார். மற்றும் இடதுமேல் கரத்தில் சூலம் போட்ட மணியுடன் உள்ளது வேறு எங்கும் இல்லாத தனி சிறப்பாகும். ஆண்டுதோறும் மாசி மாதத்து 13, 14, 15 தேதிகளில் காலையில் இங்கே சூரியனது கிரகணங்கள் இத்தலத்து இறைவன் மீதும், அம்பிகையின் பாதங்களிலும் நேரடியாக படுகின்றன.இங்கு தலவிருட்சமான மாவிலங்கை வருடத்தின் நான்கு மாதங்கள் வெறும் இலைகளாகவும், அடுத்த நான்கு மாதங்கள் வெள்ளை வெளேரென்று பூக்களாகவும், அதற்கடுத்த நான்கு மாதங்கள் பூ, இலை எதுவுமின்றி காணப்படும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 158 வது தேவாரத்தலம் ஆகும்.

Saraparameswarar temple timings:

காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

Saraparameswarar temple address:

அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை அஞ்சல் 612 605 கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.


கடன் சுமையை தீர்த்து வைக்கும் மைத்ரேய முகூர்த்தம்

108 லிங்கம் போற்றி

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
Tags: Lord Shiva
  • Recent Posts

    பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் எளிய கதை | Ramakrishnar bird life story

    Ramakrishnar bird life story பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் எளிய கதைகளில் ஒன்று. கர்ம வினையும் அதைக் கடந்து போகும்… Read More

    36 mins ago

    பெருமாளை ஏன் கோவிந்தா என்று தெரியுமா? Govindha name history and meaning

    பெருமாளை ஏன் கோவிந்தா என்று தெரியுமா? Govindha name history and meaning *புரட்டாசி சிறப்பு பகிர்வு* *கோவிந்தா! கோவிந்தா!!*… Read More

    1 week ago

    நவராத்திரி 2024 சிறப்பு பதிவு | Navaratri festival 2024

    நவராத்திரி 2024 சிறப்பு பதிவு கொலு வைக்க உகந்த நேரம்: 03.10.2024 புரட்டாசி 17 ஆம் தேதி வியாழக்கிழமை முதல்… Read More

    2 weeks ago

    Today rasi palan 14/10/2024 in tamil | இன்றைய ராசிபலன் புரட்டாசி – 28 திங்கட்கிழமை

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *புரட்டாசி - 28*… Read More

    15 hours ago

    கார்த்திகேய ப்ரபாவம் எனும் சண்முக போற்றி மந்திரம் | Shanmuga Potri Mantram Tamil

    கார்த்திகேய ப்ரபாவம் எனும் சண்முக போற்றி மந்திரம் | Shanmuga mantram lyrics tamil மஹா பாரதத்தில் வன பர்வத்தில்… Read More

    3 weeks ago

    ஆத்மா, அனாத்மா, பரமாத்மா | Athma and Anathma

    Athma and Anathma ஆத்மா, அனாத்மா, பரமாத்மா பற்றிய அழகிய விளக்கம் - Athma and Anathma ஆத்மா, அனாத்மா,… Read More

    3 weeks ago