ஒரே நாளில் மூன்று நரசிம்ம தரிசனம் (Three narasimhar temples)
பரிக்கல், பூவரசன்குப்பம், சிங்கிரிக்குடி ஆகிய மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கடன், குடும்பப் பிரச்சினைகள், அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பக்தன் பிரகலாதனுக்காக மகாவிஷ்ணு நரசிம்மராக அவதரித்து இரணியனை வதம் செய்த பிறகு, பிரகலாதனின் பிரார்த்தனையின்பேரில் இந்தியாவில் அஹோபிலம் உள்ளிட்ட பல திருத்தலங்களில் கோயில் கொண்டு அருள்கிறார். தமிழகத்தில் சோளிங்கர், நாமக்கல், பூவரசங்குப்பம், பரிக்கல், சிங்கிரிக்குடி, சிங்கபெருமாள்கோயில், அந்திலி, சிந்தலவாடி, ஆகிய 8 தலங்களும் அட்ட நரசிம்ம தலங்களாக உள்ளன. அவற்றில், ஒரே நாளில் தரிசிக்கக்கூடிய வகையில் மூன்று நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன.
பரிக்கல், பூவரசன்குப்பம், சிங்கிரிக்குடி ஆகிய மூன்று தலங்களே அவை. இந்த மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கடன், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பரிக்கல் :
விழுப்புரத்திலிருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் வழியில், விழுப்புரத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது பரிக்கல். பெருமாளின் திருநாமம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மர். தாயாரின் திருநாமம்: ஸ்ரீகனகவல்லி தாயார். திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.
பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால், அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பூவரசன்குப்பம் :
பரிக்கல்லில் இருந்து பூவரசன்குப்பம் 39 கி.மீ. பெருமாளின் திருநாமம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மர். தாயாரின் திருநாமம்: ஸ்ரீஅமிர்தவல்லி தாயார். தரிசன நேரம்: காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
பூவரசன்குப்பம் நரசிம்மரை வழிபட, உடற்பிணி மற்றும் சகலவிதமான தோஷங்களும் நீங்கும்.
சிங்கிரிக்குடி :
பூவரசன்குப்பத்தில் இருந்து சிங்கிரிக்குடி 26 கி.மீ. பெருமாளின் திருநாமம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மர் (உக்ர நரசிம்மர்). தாயாரின் திருநாமம்: ஸ்ரீகனகவல்லி தாயார். தரிசன நேரம்: காலை 7.00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை; மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
திருமணம் தடைப்படும் அன்பர்கள் இங்கு வந்து ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து வழிபட திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிகை. இங்குள்ள உக்ர நரசிம்மரை வழிபட எதிரிகளின் தொல்லைகள் இருக்காது.
காலையில் பரிக்கல், நண்பகலில் பூவரசன்குப்பம், மாலையில் சிங்கிரிக்குடி என்ற வரிசைப்படி தரிசிக்கவேண்டும்.
ஓம் நமோ உக்கர நரசிம்ஹாய நமஹ🙏
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றி 50 குறிப்புகள் அருமையான பதிவு, முழுவதும் படியுங்கள் .. 1. மகாவிஷ்ணு எடுத்த… Read More
Mahalakshmi 100 Special Information in Tamil மகாலட்சுமி (Mahalakshmi prayer benefits) தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி,… Read More
108 Ayyappan Saranam in tamil 108 ஐயப்பன் சரண கோஷம் சபரிமலை செல்லும் ஐயப்பா பக்தர்கள் அனைவரும் அனுதினமும்… Read More
Sashti viratham கந்த சஷ்டி விரதம் 2025 பற்றி ஓர் பார்வை: கந்த சஷ்டி விரத மகிமைகள், கந்தசஷ்டி விரதம்… Read More
அன்னாபிஷேக பொருள் விளக்கம் மற்றும் பலன்கள் | Annabhishegam benefits ஐப்பசி அன்னாபிஷேகம் :🌼 சாம வேதத்திலே ஒரு… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈*… Read More