Arthamulla Aanmeegam

இன்று 25/11/2022 கார்த்திகை மாதம் மூன்றாம் பிறை காண தவறாதீர்கள் | Karthigai moondram pirai

*இன்று “மூன்றாம் பிறை பார்க்க தவறாதீங்க” புண்ணியம் ஏராளம்.*
🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜
கார்த்திகை மாதம் என்றாலே தீப ஒளி மட்டுமே நம் கண் முன் வந்து செல்லும் அல்லவா?
🌜
பெண்கள் சுமங்கலி பூஜை செய்வது முதல்,இம்மாத நன்நாளில் ஐயப்பனுக்கு மாலை இட்டு சபரி மலை செல்வது.
🌜
திருவண்ணாமலை தீபம் முதல்.. கார்த்திகை மாத பிறை வரை அனைத்தும் விசேஷமே அல்லவா….
🌜
கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை நாளான இன்று vபிறை பார்ப்பதால் எந்த அளவிற்கு புண்ணியம் கிடைக்கும் என்பதை கீழே உள்ளவற்றை படித்து பாருங்கள்….

*பிறை பார்ப்பதன் புண்ணியம்*
🌜
வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. ஊர்மக்கள் அவரவர் பங்காக மணலைக் கொட்டி, உடையும் கரையை அடைத்தார்கள்.மதுரை மாநகரில் பிட்டு விற்று வாழ்ந்து வந்த மூதாட்டியின் பங்கினை அடைக்க sயாருமில்லை. அவள் தினமும் வழிபடும் சொக்கநாதப் பெருமானை நினைத்து வருந்தினாள்.
🌜
அவளது உண்மையான அன்பிற்கு செவி சாய்த்த இறைவர், தாமே கூலி ஆளாக வந்து அவள் பங்கிற்கு வேலை செய்தார் என்பது திருவிளையாடற்புராணம் கூறும் செய்தியாகும்.
🌜
வந்திக் கிழவியின் பங்கினை அடைக்க சிவபெருமானே கூலி ஆளாக வரவேண்டுமா?
🌜
அப்பெருமான் தன்னிடம் உள்ள பூதக்கணங்களில் ஒன்றை அனுப்பி இருந்தாலே mபோதுமே! *அப்பெருமானே ஆளாக வரும் அளவிற்கு அந்த மூதாட்டியின் தகுதி என்ன என்பது பற்றி சிந்திப்போம்.*
🌜
திருவிளையாடற் புராணத்தை அருளிய பரஞ்சோதி முனிவர் திங்கள் ஆயிரம் தொழுதாள் என்று கூறுகின்றார். *ஆயிரம் பிறையைத் தரிசித்த மேலான புண்ணியம் தான் அவள் பெற்றிருந்த தகுதியாகும்.*
🌜
*பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும். பிறை, சிவபெருமான் திருமுடிமேல் இருப்பதல்லவா? பிறையை தரிசிக்கும் பொழுது பிறையணிந்த பெருமானை அல்லவா நாம் தரிசிக்கின்றோம்.*
🌜
பிறையை தொடர்ந்து வணங்குவதால் அளவிட முடியாத புண்ணியத்தை பெறலாம் என்பது ஐதீகம்…
🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜
*பிறை பார்க்கும் பயன்*
🌜
மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான்.
🌜
நான்கு பிறை தொடர்ந்து தரிசித்தால் நம்வினை நாசமாகும்.
🌜
ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசயோகம் பெறுவான்.
🌜
ஆறுபிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும்.
🌜
ஏழு பிறை தொடர்ந்து தரிசித்தால் ஏற்பட்ட கடன் தீரும்.
🌜
பத்து பிறை தொடர்ந்து தரிசித்தால் பாரில் புகழ் ஓங்கும்.
🌜
வருடம் முழுவதும் பிறை தொடர்ந்து தரிசிக்க வம்ச விருத்தியாகும்.
🌜
நீடித்த பிறை தரிசனம் நீடுலக வாழ்வு தரும் ( முத்திப்பேறு )
🌜
அவரவர்கள் இதனை அச்சிட்டு வழங்கி புண்ணியம் பெறலாம்.
🌜
*இதனை நன்கு உணர்ந்தவர்கள் நாளைய தினம் முதலே பிறை பார்க்கலாம்…..புண்ணியம் ஏராளமாம்.*

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
 • Recent Posts

  தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் – தைப்பூச விரதமுறை | Thai poosam

  தைப்பூசம் / thai poosam என்பது சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். நட்சத்திர வரிசையில், பூசம் எட்டாவது… Read More

  2 days ago

  Draupadi amman 108 potri tamil | திரௌபதி அம்மன் 108 போற்றி

  Draupadi amman 108 potri tamil திரௌபதி அம்மன் 108 போற்றி (Draupadi amman 108 potri tamil) -… Read More

  2 days ago

  திருக்கணிதப் படி சனிப்பெயர்ச்சி பலன்கள் 16-01-2023 to 28-03-2025 | Sani peyarchi 2023-2025

  Sani peyarchi palangal 2023-2025 மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கும் திருக்கணிதப் படி சனிப்பெயர்ச்சி பலன்கள், மதிப்பெண்,… Read More

  4 weeks ago

  பட்டினத்தார் திருக்கோயில் வரலாறு | pattinathar temple history tamil

  அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில், மாநில நெடுஞ்சாலை 114, திருவொற்றியூர் குப்பம், திருவொற்றியூர், சென்னை 600019 *இத்திருக்கோயில் திருவொற்றியூரில் எண்ணூர் விரைவு… Read More

  1 month ago

  வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம் | Thiruvilayadal Vanigar marriage story

  வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம் | Thiruvilayadal Vanigar marriage story வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்… Read More

  1 month ago

  சமணரைக் கழுவேற்றிய படலம் | Thiruvilayadal Samanar Story

  சமணரைக் கழுவேற்றிய படலம் | Thiruvilayadal Samanar Story சமணரைக் கழுவேற்றிய படலம் (Thiruvilayadal Samanar Story) இறைவனான சொக்கநாதரின்… Read More

  1 month ago