Ullam Uruguthaiyaa Lyrics in Tamil
உள்ளம் உருகுதய்யா முருகர் பாடல் வரிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடலில் TM சௌந்தரராஜன் அவர்களின் பக்தி பரவசம் மேலோங்கி இருக்கும்… கேட்க கேட்க தெவிட்டாத இந்த பாடலின் பாடல் வரிகள் இந்த பதிவில் உள்ளது.. இந்த பாடலின் காணொளி இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது…
உள்ளம் உருகுதய்யா
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே
அள்ளி அணைதிடவே
அள்ளி அணைதிடவே, எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா
உள்ளம் உருகுதய்யா……
பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா
பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா
பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேரி
ஆடும் மயிலேரி
ஆடும் மயிலேரி முருகா, ஓடி வருவாயப்பா….
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா…. உள்ளம் உருகுதய்யா
பாசம் அகன்றதய்யா, பந்த பாசம் அகன்றதய்யா உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே
ஈசன் திருமகனே
ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததப்பா….
உள்ளம் உருகுதய்யா
ஆறு திருமுகமும்… ஆறு திருமுகமும் அருளை வாரி வழங்குதய்யா
ஆறு திருமுகமும்…. (உன்) அருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும், வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா….
உள்ளம் உருகுதய்யா….
கண்கண்ட தெய்வமய்யா… கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா…
கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா…
பாவியென்றிகழாமல்… பாவியென்றிகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா….
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா….
உள்ளம் உருகுதய்யா
உள்ளம் உருகுதய்யா……
உள்ளம் உருகுதய்யா பாடல் காணொளி…
அழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள்
நீயல்லால் தெய்வமில்லை பாடல் வரிகள்