லட்சுமி காயத்ரி மந்திரம் | கடன் தொல்லையிலிருந்து விடுபட ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் கிரகங்களுக்கு ஏற்ற பரிகாரங்கள்!! Lakshmi Gayathri Slogam

லட்சுமி காயத்ரி மந்திரம்

ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே!!
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி!!
தன்னோ லக்ஷ்மீஹ்: ப்ரசோதயாத்!

#அஷ்டலட்சுமிக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வந்தால் வாழ்வில் வளம் அனைத்தையும் பெறலாம்!!🙏

ஸ்ரீவத்ஸ வக்ஷஸம் விஷ்ணும் சங்க சக்ர சமன்விதம் !
வாமோரு விலஸல் லக்ஷ்ம்யா லிங்கிதம் பீதவாஸஸம் !!
அஸ்ய ஸ்ரீ அஷ்டலக்ஷ்மீ மஹா மந்த்ரஸ்ய
தக்ஷப்ரஜாபதிருஷி : காயத்ரி சந்த:
மஹாலக்ஷ்மீர் தேவதா ஸ்ரீம் பீஜம் ஹ்ரீம்
சக்தி: நம: கீலகம்: மமஸர்வாபீஷ்ட
ஸத்யர்த்தே ஜபே !!🙏

வெள்ளிக்கிழமை கிழமை
மஹாலக்ஷ்மியை வழிபட வேண்டிய நாள் !!🙏

கடன் தொல்லையிலிருந்து விடுபட ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் கிரகங்களுக்கு ஏற்ற பரிகாரங்கள்!!

#மேஷம்!!🙏

தயிரை கொண்டு ஏதேனும் மஞ்சள் நிற இனிப்பு பண்டம் தயார் செய்து ஒவ்வொரு வெள்ளியும் மாலை வேளையில் பசுவிற்கு கொடுத்து வர கடன்கள் நீங்கி வளம் பெறலாம்!!🙏

#ரிஷபம்!!🙏

ஜவ்வரிசி கொண்டு இனிப்பு தயாரித்து அதை வெள்ளியன்று பசுவிற்கு மாலை வேளையில் கொடுத்து வர கடன்கள் அடைந்து சுகம் பெறலாம்!!🙏

#மிதுனம்!!🙏

தினசரி சிறிது தயிர் சேர்த்து குளித்து வரவும்-கடன்கள் நீங்கும். மாலை வேளையில் சூரிய தரிசனம் அஸ்தமனத்திற்கு முன் செய்து வரவும்!!🙏

#கடகம்!!🙏

ஒவ்வொரு ஞாயிறும் சிறிது வெல்லக்கட்டியை ஓடும் நீரில் விடவும்-ஞாயிறன்று அச்சு வெல்லக்கட்டியை குரங்குகளுக்கு கொடுத்து வரவும்!!🙏

#சிம்மம்!!🙏

ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு திரி கொண்டு 8 விளக்குகள் ஏற்றி வர கடன்கள் அடைய வழி பிறக்கும்!!🙏

#கன்னி!!🙏

சனிக்கிழமைகளில் உளுந்து வடை தானம் செய்யவும் (நீங்கள் உண்ண கூடாது) மேலும் துளசிக்கு தினசரி நீர் வார்த்து ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வைக்க ருண நிவாரணம் பெறலாம்!!🙏

துலாம் !!🙏

பெண்களுக்கு புடவைகள், ரவிக்கை துணி மற்றும் வளையல்கள் கொடுத்து வர கடன் தொல்லை தீரும்!!🙏

#விருச்சிக_ராசியினர்!!🙏

ஹோமத்திற்கு தேவைப்படும் செங்கற்களை கொடுக்கலாம். மேலும் இவர்கள் ஹோமத்தில் இட நவதானியங்கள் வாங்கி கொடுப்பதும் பலன் தரும். எலுமிச்சை அன்னதான உபயம் செய்யலாம்!!🙏

#தனுசு!!🙏

வீடிழந்தோருக்கு வீடு கட்ட செவ்வாய் கிழமைகளில் செங்கல்கள் முடிந்த அளவு வாங்கி கொடுக்க கடன்கள் அடைந்து நிம்மதி பெறலாம்!!🙏

#மகரம்!!🙏

சனிக்கிழமைகளில் எள்ளுருண்டை செய்து பலருக்கு தானமாய் கொடுத்து வர கடன் தொல்லை நீங்கும்!!🙏

#கும்பம்!!🙏

வியாழன் மாலை 5-6 மணிக்கு குங்குமப்பூ சேர்த்த பாதாம் கீர் செய்து மகாவிஷ்ணுவிற்கு நிவேதனம் செய்து முதலில் தான் அருந்திவிட்டு பின்பு மற்றோருக்கும் தானமாய் பிரசாதமாய் கொடுத்து வர கடன்கள் அடைபடும்!!🙏

#மீனம்!!🙏

தொழு நோயாளிகளுக்கு சப்பாத்தியை தானமாக செவ்வாய்கிழமை மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மணிக்குள் கொடுத்து வர கடன்கள் வேகமாக அடையப ஆரம்பிக்கும்-குறைந்தது 9 சப்பாத்திகள் கொடுப்பது நலம்!!🙏

தெரு நாய்களை அடித்து துன்புறுத்தாமல், அவைகளுக்கு உணவிடுவது பாப கிரகமான கேதுவை ப்ரீதி செய்யும். எல்லா காரியங்களிலும் வரும் தடையை நீக்கும்!!🙏

கழுதைக்கு உணவிடுவது, குறிப்பாக சனிக்கிழமைகளில் செய்து வரின், வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்படும். உடல் ரீதியான தொல்லைகள் நீங்கும்!!🙏

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க
நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க நித்ய சுமங்கலி பூஜையில் அழைக்க மத்துறு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்க பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா…🙏

கனக வ்ருக்க்ஷமாய் தனமழை தருக மணைகள் எங்கிலும் திரவியம் பெறுக கனக வ்ருக்க்ஷமாய் தனமழை தருக மணைகள் எங்கிலும் திரவியம் பெறுக தினகரன் கோடி உன் மேனியில் உருக ஜனகராஜன் திரு கண்மணி வருக பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா
என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா…🙏

சங்கநிதி முதல் நவநிதி தாராய் கங்கண கையால் மங்களம் செய்தாய் சங்கநிதி முதல் நவநிதி தாராய் கங்கண கையால் மங்களம் செய்தாய் குங்கும பூவாய் பங்கயப் பாவை வேங்கடரமனின் பூங்கொடி வாராய் பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா…🙏

அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம் நித்தம் மஹோத்சவம் நித்திய மங்களம் அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம் நித்தம் மஹோத்சவம் நித்திய மங்களம் சக்திக் ஏத்தபடி சாது போஜனம் சாப்பிட்டு தருவாய் அக்க்ஷதை சீதனம் பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா…🙏

சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த சுக்கிர வார பூஜையில் இருந்து சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த சுக்கிர வார பூஜையில் இருந்து அக்கறையோடு சந்தனம் குழைத்து சாற்றிட புரந்தர விட்டலனை அழைத்து பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..!🙏

Leave a Comment