4 Unknown Facts about Lord Vinayagar | விநாயகர் சிறப்புகள்
Lord Vinayagar Specialties
விநாயகர் சதுர்த்தி நாளில் கொழுக்கட்டை படைப்பது ஏன்?
கொழுக்கட்டையின் கூர்மையான முன் பகுதி, விநாயகர் கூரிய புத்தியை அருள்வார் என்பதைத் தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் வெள்ளை நிற வெளிப்பகுதி, எல்லோருக்கும் தௌpவான உள்ளம் தருவார் என்பதைத் தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் உட்புறத்தில் இனிப்பான பகுதியோ, கணபதி எப்போதும் இனிய அருள் வழங்குவார் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது.
விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றுவது ஏன்?
முன்னொரு சமயம் அனலாசுரன் என்ற ஒரு அரக்கன் தேவர்களையும், ரிஷிகளையும் மிகவும் துன்புறுத்தியதோடு யாகங்களுக்கும், நற்காரியங்களுக்கும் இடையு றாக இருந்து வந்தான். அவன் வாயிலிருந்து அக்னியை உமிழ்ந்து எதிரிகளை அருகில் வரவிடாமல் செய்வதால், இந்திரனால் அவனை போரிட்டு வெல்ல முடியவில்லை. வேறு வழியின்றி இந்திரன், தேவர்கள் புடைசு ழ கைலாயம் சென்று விநாயகப் பெருமானிடம் அனலாசுரனை வதம் செய்து தங்களைக் காக்க வேண்டுமென்று முறையிட்டார்கள். அவர்களது வேண்டுகோளை ஏற்ற விநாயகப்பெருமான் வெற்றி பெற முடியாமல், அவனை அப்படியே விழுங்கிவிட்டார். வயிற்றுக்குள் சென்ற அரக்கன் வயிற்றை வெப்பமடையச் செய்தான். விநாயகருக்கு அவனுடைய வெப்பத்தை தாங்க முடியாததால், அவருக்கு கங்கை நீரால் குடம் குடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லை கொண்டு வந்து விநாயகரின் தலைமேல் வைத்தார். அருகம்புல்லின் மகத்துவத்தால் அவரது எரிச்சலும் அடங்கியது. அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகிவிட்டான். ஆகவே தான் அவரின் வழிபாட்டில் அருகம்புல் முக்கிய இடம் பெறுகிறது.
விநாயகரை வணங்கும்பொழுது தலையிலே கொட்டுவது ஏன்?
முன்னொரு காலத்தில் காக்கை உருவெடுத்து விநாயகப் பெருமான் அகத்தியரின் கமண்டலத்தினைக் கவிழ்த்து அதிலிருந்த நீரைக் காவிரி நதியாக ஓடவைத்த பொழுது அகத்திய முனிவரானவர் கோபங் கொண்டு காக்கையினை விரட்டினார். அப்பொழுது காக்கையானது ஒரு சிறுவனாக வடிவம் கொண்டு ஓடியபொழுது முனிவரும் அச்சிறுவனைத் துரத்திச் சென்று அவனது தலையில் கொட்டினார். தலையில் கொட்டு வாங்கியதும் சிறுவனாக நின்ற விநாயகப் பெருமான் தனது திருச்சொரூபத்தினை அகத்தியருக்குக் காண்பித்தார். உடனே விநாயகப் பெருமானை வணங்கிய அகத்திய முனிவரானவர் தான் செய்த தவறை உணர்ந்து தனது இரண்டு கைகளினாலும் தனது தலையிலே கொட்டி தோப்புக்கரணம் போட்டு தன்னை மன்னித்தருளுமாறு விநாயகரை வேண்டியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இதன் பாவனையாகவே நாமும் தலையிலே கொட்டி தோப்புக்கரணமிட்டு விநாயகரை வணங்குகின்றோம். விநாயகரை வணங்கி ஆரம்பிக்கின்ற வேலைகள் யாவும் தடையின்றி நிறைவுபெறும் என்பதனால்தான் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் விநாயகர் வழிபாடு முதலிடத்தை வகிக்கின்றது.
விநாயகர் ஏன் எலியை வாகனமாக கொண்டுள்ளார்?
விநாயகரின் எலி, கடந்த ஜென்மத்தில் உபதேவதையாக இருந்தது. அதனை க்ரோன்ச்சா என அழைத்தனர். இந்திரனின் அரச சபையில் வாமதேவ முனிவர் என்ற மிகுந்த ஞானம் கொண்ட முனிவரின் கால்களை க்ரோன்ச்சா மிதித்து விட்டது. கோபம் கொண்டு எழுந்த வாமதேவ முனிவர், அதனை ஒரு எலியாக மாற சாபம் அளித்தார். இதன் விளைவாக, வாமதேவ முனிவரின் சாபத்தினால் க்ரோன்ச்சா எலியாக உருமாறி, மகரிஷி பரஷர் ஆசிரமத்தில் விழுந்தது. பல வகையான தொந்தரவுகளை அளித்தது. இந்நேரத்தில் தான் பரஷர் ரிஷியின் ஆசிரமத்திற்கு விநாயகர் அழைக்கப்பட்டார். அங்கு ராட்சஷ எலியை பற்றியும், அது உருவாக்கியுள்ள பயத்தை பற்றியும் கேள்விப்பட்ட விநாயகர் அதனை எதிர்கொள்ள முடிவெடுத்தார். தன் ஆயுதங்களின் ஒன்றான பாஷிவை (சுருக்கு) எடுத்த விநாயகர், க்ரோன்ச்சா இருக்கும் திசையில் அதனை பறக்க விட்டார். எலியை துரத்திய பாஷி அதன் கழுத்தை சுற்றிக் கொண்டது. அதை அப்படியே விநாயகரின் காலடியில் கொண்டு சேர்த்தது. இதனால் விநாயகரிடம் மன்னிப்பு கோரிய க்ரோன்ச்சா அவரின் வாகனமாக மாறியது.
View Comments
அருமையான பதிவு!!.
ஆனை முகனே போற்றி!!!
விநாயகர் மந்திரங்கள், பாடல்கள்