Arthamulla Aanmeegam

வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்?

Vinayagar Statue directions
வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்?
⭐ விநாயகர் சதுர்த்தி, விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம்.
⭐ விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார். அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.
⭐ விநாயக சதுர்த்தி பல இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும். விநாயக சதுர்த்தி நாளில் விநாயகரை நம் வீட்டில் எத்திசையில் வைக்க வேண்டும்.
இடப்பக்கம் :
⭐ விநாயகரின் தும்பிக்கை எப்போதுமே இடது பக்கமாக தன் தாயான கௌரியை பார்த்த வண்ணம் விநாயகரை வைக்க வேண்டும். இந்நாளில் விநாயகருடன் சேர்த்து கௌரியையும் பலரும் வைப்பார்கள். விநாயகரின் தும்பிக்கை கௌரி தேவியை நோக்கி இடது பக்கமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
பின் புறம் :
⭐ விநாயகரின் சிலையை பின்புறம் வீட்டில் உள்ள எந்த ஒரு அறையையும் பார்த்தவாறு இருக்க கூடாது. விநாயகர், வளமையை தரும் கடவுளாகும். அவரின் பின்புறம் வறுமையை குறிக்கும். அதனால் தான் அவரின் பின்புறம் வீட்டிற்கு வெளிப்பக்கம் பார்த்தவாறு இருக்க வேண்டும்.
தென் திசை :
⭐ தென்புற திசையில் விநாயகர் சிலையை வைக்க கூடாது. வீட்டின் கிழக்கு அல்லது மேற்கு திசைகளில் தான் விநாயகர் சிலையை வைக்க வேண்டும். உங்கள் வீட்டின் பு+ஜை அறையும் கூட தெற்கு திசையில் இருக்க கூடாது.
கழிவறை :
⭐ கழிவறையுடன் இணைக்கப்பட்டுள்ள சுவற்றை நோக்கியும் விநாயகர் சிலையை வைக்க கூடாது.
உலோகம் :
⭐ விநாயகர் சிலை உலோகத்தில் செய்திருந்தால், வட கிழக்கு அல்லது தென் மேற்கு திசையில் வைக்க வேண்டும்.
மாடிப்படி :
⭐ மாடிப்படி இருக்கும் வீட்டில், கண்டிப்பாக மாடிப்படிக்கு அடியில் விநாயகர் சிலையை வைக்கக்கூடாது. இது உங்கள் வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

*எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்யலாம்*

மேஷம் – மஞ்சள் பொடி

ரிஷபம் – சானப்பொடி

மிதுனம் – எலுமிச்சை சாறு

கடகம் – பச்சரிசி மாவு

சிம்மம் – பஞ்சாமிருதம்

கன்னி – நார்தம் பழம் மற்றும் சத்துக்குடி

துலாம் – தேன்

விருச்சிகம் – இளநீர்

தனுசு – மஞ்சள் பொடி மற்றும் தேன்

மகரம் – சந்தனம்

கும்பம் – பஞ்சாமிருதம்

மீனம் – மஞ்சள் பொடி மற்றும் இளநீர்

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
Tags: Lord Ganesha
  • Recent Posts

    விநாயகர் பற்றிய 100 அரிய குறிப்புகள் | Vinayaga 100 special information

    Vinayaga 100 special information விநாயகர் சதுர்த்தி விரதம் சிறப்பு பதிவு. விநாயகர் பற்றிய 100 அரிய குறிப்புகள் .… Read More

    1 day ago

    விநாயகர் அகவல் பாடல் வரிகள் | Vinayagar Agaval Lyrics in Tamil | Vinayagar songs

    Vinayagar Agaval Lyrics in Tamil விநாயகர் அகவல் (Vinayagar Agaval) - ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர்… Read More

    18 hours ago

    கணபதியே கணபதியே பாடல் வரிகள்

    ஓம் கணநாதனே போற்றி போற்றி ஓம் ஞான முதல்வனே போற்றி ஓம் வெள்ளை கொம்பனே போற்றி கணபதியே கணபதியே… கணபதியே… Read More

    4 days ago

    Vinayaka Chathurthi Pooja Procedure in Tamil | சதுர்த்தியன்று பூஜை செய்யும் முறை

    Vinayaka Chathurthi Pooja Procedure Tamil விநாயகர் சதுர்த்தி (7/9/2024) வழிபடும் முறைகள் (Vinayagar Chathurthi Pooja Procedure in… Read More

    4 days ago

    நினைப்புகளைப் போக்குங்கோ – பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

    நினைப்பு ஸ்ரீ ரமண மகரிஷி. நேரம்ன்னா என்ன? அது கற்பனை. உங்களோட ஒவ்வொரு கேள்வியும் ஒரு நினைப்புதான். உங்களுடைய இயல்பே… Read More

    6 days ago

    விநாயகர் பற்றிய அரிய தகவல்கள்

    விநாயகர் பற்றிய 100 அரிய தகவல்கள் | 100 facts about vinayagar எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்னும் விநாயகர் வழிபாடு… Read More

    4 days ago