🌟 வரலட்சுமி விரதம் என அழைக்கப்படும் இவ்விரதத்தை விவாகமாகி சுமங்கலியாக வாழும் சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் மகாவிஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியை குறித்து அனுஷ்டிக்கும் மிகச் சிறப்பான விரதமாகும். ஆடி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
🌟 கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கின்றனர்.
🌟 உள்ளத் தூய்மையுடனும், உடல் தூய்மையுடனும் அஷ்ட இலக்குமியாக விளங்கும் அம்பிகையை வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்துவிடும். இந்த விரதத்தை அனுஷ்டிப்பதனால், இல்லத்தில் செல்வம் செழித்துக் களித்தோங்கும். கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வதால் மனைவியர் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கப் பெறுகின்றனர். அத்துடன் பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் ‘பாக்கிய லட்சுமியின்” அருளினால் மக்கள்பேறு பெறுகின்றனர். அதனால் இந்த விரதத்தை சுமங்கலி பெண்கள் எல்லோரும் விரும்பி அனுஷ்டிக்கின்றனர்.
🌟 வரலட்சுமி என்பது வரன் தரும் லட்சுமி, வரக்கூடிய லட்சுமி. மகாலட்சுமி எனப்படும் பெரிய சக்தியாக சொல்லப்படுகிறது. அந்த லட்சுமி நோன்பு விரதம் இருக்கும் போது எதை நாம் கேட்டாலும் கிடைக்கும். அது சத்புத்திரன், அதாவது சந்தான பாக்கியம். ஆண் குழந்தை வேண்டும் என்று கேட்டாலும் சரி, அல்லது வீடு வேண்டும் என்று கேட்டாலும் சரி.
எட்டு வகையான செல்வங்களை வாரி வழங்குபவள் அன்னை லட்சுமி. மஞ்சள் பட்டு உடுத்தி மகாவிஷ்ணுவின் திருமார்பில் குடியிருப்பவள் லட்சுமி தேவி. மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்ட லட்சுமிகளாக வழிபடுவர். இவ்வாறு அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்கிறது சாஸ்திரம். எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைத்து வழிபடுகின்றனர்.
வரலட்சுமி விரதத்தின் மேன்மையைச் சொல்லும் புராணக் கதைகள் நிறைய உண்டு. சௌராஷ்டிர நாட்டின் ராணியாக இருந்த சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால் ஒருமுறை மகாலட்சுமியை அவமதித்தாள். கர்வம் கொண்டு அன்னை லட்சுமியை அவமதித்ததால், செல்வம் அனைத்தும் இழந்து வாடினாள். ராணி சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வாதீனமாக ஒருமுறை வரலட்சுமி விரதம் பற்றி அறிந்தாள். அதுமுதல் அந்த விரதத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினாள். சாருமதியின் இந்த விரதத்தால் மகிழ்ந்த அன்னை லட்சுமி, அவளுக்கு நலன்கள் அனைத்தும் அருளினாள். தன் மகளின் நிலையைப் பார்த்து, அவள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தை தானும் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றாள் சுசந்திரா. அவள் வாழ்வு மீண்டும் வளம் நிறைந்ததாக ஆனது என்கிறது புராணகதை.
சென்னை நகரில் இந்த விரதம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வரலட்சுமி விரதத்தை ஒட்டி வியாழக்கிழமை மாலையே அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. வீடுகளில் கும்பத்தில் தேங்காய் வைத்து அதில் மஞ்சளில் முகம் உருவாக்கி வைத்திருந்தனர். அம்மனுக்கு நகைகள், பூமாலைகள் அணிவித்து பிரமாண்டமாக அலங்காரம் செய்து வைத்திருந்தனர். அம்மனுக்கு பிடித்தமான பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு போன்ற பல பொருட்களை நிவேதனமாக படைத்திருந்தனர். ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை உள்ளிட்ட நிவேதனப் பொருள்களை கலசத்துக்கு முன்னர் வைத்து வழிபட்டனர். பின்னர் பூஜையில் கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம், மஞ்சள் கயிறு, பிரசாதம் வழங்கப்பட்டது. வெள்ளிக்கிழமை முழுவதும் பூஜையில் இருக்கும் அம்மன் அலங்காரம் சனிக்கிழமை காலையில் வடக்கு திசையில் சற்று நகர்த்தி வைக்கப்படும். இரவில் அம்மன் முகத்தை எடுத்து அரிசி பானையில் வைத்து விட்டு அலங்காரத்தை கலைப்பார்கள்.
வரலட்சுமி விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த விரதத்தை தமிழ்நாடு மட்டுமல்லாது வடஇந்தியமக்களும் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
பலன்கள் :
🌟 இவ்விரதத்தின் மூலம் குழந்தை பாக்கிய தடைகள் நீங்கி சற்புத்திர யோகம் உண்டாகும்.
🌟 ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும்.
🌟 கணவன் – மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும்.
🌟 இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.
🌟 இந்த நன்னாளில் அம்மன், கோவில்களுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி, பக்தர்களுக்கு தயிர்சாதம், சர்க்கரை பொங்கல் பிரசாதம் தரலாம். இல்லாதோர், இயலாதோருக்கு தானம் செய்ய, புண்ணிய பலன்கள் அதிகரிக்கும்.
🌟 மகாலட்சுமியை வழிபட்டு அவள் அருளால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம்.
விரதம் என்பது ஒரே எண்ணத்தில் இடைவிடாது ஒரே சிந்தனையில், மனதை ஒன்றின் மீதே நிலை நிறுத்துதல் ஆகும்.
You might be interested in:
வரலட்சுமி விரதம் பூஜை செய்யும் முறை
பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our 3rd WhatsApp group … Read More
வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம்… Read More
செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி::°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா… Read More
🌻🙏ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல் (4/5/23, வியாழக் கிழமை) 🌻🕉️ 🍒ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🌹 ஸ்ரீ லக்ஷ்மி… Read More
அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (10) நாள் 23.4.2023 ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை… Read More
Leave a Comment