மஹா வராகி வழிபாடு முறை | வாராஹி அம்மன் பாடல்கள் | Varahi amman vazhipadu

*🔯தமிழர்களின் பரம ரகசிய வழிபாடுகளில் முக்கியமானதும் முதன்மையானதுமாக இருப்பது வராகி உபாசனை! பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள்.*

இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள்.

வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும்.

இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.

*🔯பைரவ சுவாமியின் சக்தியாக இருப்பதால்,வராகி உபாசனை அல்லது வராகி வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக யாராவது பில்லி சூனியம் வைத்தால் வைத்தவர்களுக்கு பலவிதமான சிரமங்கள் உருவாகும்;*

அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி, சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள்.

எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள்.

கூப்பிட்ட குரலுக்கு வருவாள். ஆக வராகி வழிபாட்டால், வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம்,

எதிரிகளை அன்பால் வெல்லலாம். வராகியை வழிபடுவோம் வாழ்வில் ஏற்றம் காண்போம்.எதிரிகளால் பாதிப் படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராகி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.

இந்த பெயரை கேட்டாலே பலருக்கு பயம் வரும். அப்படியான ஒரு அம்பிகை நாமம் தான் வராகி.

சப்த கன்னிகள் என்னும் எழுவரில் *ஐந்தாமானவள். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும் ப்ராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்த்ராணி மற்றும் சாமுண்டி. சிவாலயங்களில் கன்னி மூலையில் இவர்களை காணலாம் ..*

“ ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில்
களிக்கும் இச் சிந்தையில் காரணமாம் காட்டித்
தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே ! ”– திருமூலர்

உலகையே ஒளிர்விக்கும் பராசக்தி என்ற அம்பிகை நம் மனதில் எழுந்தருளினால்,

உண்மைப் பொருள் விளங்கும் ; மனம் தெளிவு பெறும் . அவளை அறிந்து கொள்பவருக்கு அனைத்துச் செல்வங்களும் வாய்க்கும் என்று திருமூலர் கூறுகிறார்.

varahi amman vazhipadu

அருள்மிகு முத்தவடுகநாத சித்தர், அம்பிகையின் மறுவடிவமான வராஹி அம்மனிடம் சரணடைந்து சித்தி பெற்றார்.

அதுவும் தமது ஐந்தாம் வயதில்.
அபிராமி அந்தாதி :
நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”
“பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் ஆவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா

மண்டலி மாலினி சூலி, வாராஹி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!’
என அபிராமிபட்டர் துணையாகக் கொண்டாடிய அம்பிகையின் வடிவம் வாராஹி.
அன்னை வராகி

*🔯வழிபாடு :*

தேய்பிறை பஞ்சமி திதி இருக்கும் நாளில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை அன்னை வராகியை நமது வீட்டில் இருக்கும் பூஜையறையில் மந்திர ஜபத்தால் வழிபடலாம்;பூஜையறை இல்லாதவர்கள் வீட்டில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்கலாம்;

அன்னை வராகிக்கு பிடித்தமான நிறம் பச்சை! பச்சை நிறத் துண்டின் மீது அமர்ந்து இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி(கிழக்கு நோக்கி ஏற்றினால் வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;வடக்கு நோக்கி ஏற்றினால் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்..வேறு திசைகளில் ஏற்றினால் ஜபத்துக்குரிய பலன் நம்மை வந்து சேராது. ஸ்ரீ மகாவராஹியை ஆக்ஞா சக்கரத்தில் தியானிக்க வேண்டும்.

ஐந்து பஞ்சமி அல்லது ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு ஏற்றி வாராஹியை வழிபட, கோரிய பலன் கிட்டுவது உறுதி.

*🔯ஸ்ரீ வாராஹி அம்மன் துதி*

ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,
பண்டிதஸ்ய மனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!

*🔯தியான சுலோகம்*

முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

*🔯மந்திரம்.*

ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

*🔯காயத்ரி மந்திரம்*

ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

 

ஸ்ரீ வாராஹி மாலை பாடல் வரிகள்

Leave a Comment