Subscribe for notification
Lyrics

108 Durgai Amman Potri | துர்க்கை அம்மன் 108 போற்றி

108 Durgai Amman Potri in Tamil

துர்க்கை அம்மன் 108 போற்றி (108 Durgai Amman potri) – அன்னை துர்க்கை தீய சக்திகளை அழிப்பதில் மஹிஷாஸுரமர்தினியாகவும் வேண்டியவர்களுக்கு கருணை மற்றும் அருளையும்,  ஸ்ரீ துர்கா தேவியின் இந்த போற்றிகளை உளமார படிப்பதால் நமது துன்பங்கள் அனைத்தும் நீங்கும். செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை அல்லது தினமும் ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுவதால் தீராத நோய்கள் தீரும், திருமண தடைகள் நீங்கும், குழந்தை பாக்கியம் உண்டாகும், இப்படி மேலும் பல நன்மைகளை உண்டாகும்… தோஷங்களை நீக்கும் துர்க்கை அம்மன் 108 போற்றி! பார்வதி தேவியின் ஆங்கார வடிவங்களுள் ஒன்றாக திகழும் துர்க்கை அம்மனை போற்றி வழிபடுவோரிடம் தீய சக்திகள் அண்டாது என்பது திண்ணம். துர்க்கை காயத்ரி மந்திரம் இந்த பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது… அதனை படித்து ஆதி சக்தியின் அருளை பெறுங்கள்…

துர்க்கை அம்மன் 108 போற்றி

1. ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
2. ஓம் அஷ்டமி நாயகியே போற்றி
3. ஓம் அபயம் தருபவளே போற்றி
4. ஓம் அசுரரை வென்றவளே போற்றி
5. ஓம் அன்பர்க்கு எளியவளே போற்றி
6. ஓம் அமரரைக் காப்பவளே போற்றி
7. ஓம் அறம் வளர்க்கும் தாயே போற்றி
8. ஓம் அருள்நிறை அன்னையே போற்றி
9. ஓம் அருளைப் பொழிபவளே போற்றி
10. ஓம் ஆதாரம் ஆனவளே போற்றி

11. ஓம் ஆலால சுந்தரியே போற்றி
12. ஓம் ஆதியின் பாதியே போற்றி
13. ஓம் இன்னருள் சுரப்பவளே போற்றி
14. ஓம் இணையில்லா நாயகியே போற்றி
15. ஓம் இல்லாமை ஒழிப்பாய் போற்றி
16. ஓம் இடபத்தோன் துணையே போற்றி
17. ஓம் ஈர மனத்தினளே போற்றி
18. ஓம் ஈடிணையற்றவளே போற்றி
19. ஓம் ஈஸ்வரன் துணையே போற்றி
20. ஓம் உக்ரரூபம் கொண்டவளே போற்றி

21. ஓம் உன்மத்தின் கரம் பிடித்தாய் போற்றி
22. ஓம் உள்ளொளியாய் ஒளிர்பவளே போற்றி
23. ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
24. ஓம் எண் கரம் கொண்டவளே போற்றி
25. ஓம் எலுமிச்சமாலை அணிபவளே போற்றி
26. ஓம் ஏழுலகும் வென்றவளே போற்றி
27. ஓம் ஏழ்மை அகற்றுபவளே போற்றி
28. ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
29. ஓம் ஒளிமணி தீபத்தாயே போற்றி
30. ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி

31. ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
32. ஓம் கவலையைத் தீர்ப்பவளே போற்றி
33. ஓம் காருண்ய மனம் படைத்தவளே போற்றி
34. ஓம் காளியே நீலியே போற்றி
35. ஓம் காபாலியை மணந்தவளே போற்றி
36. ஓம் காவல் நிற்கும் கன்னியே போற்றி
37. ஓம் கிரிராஜன் மகளே போற்றி
38. ஓம் கிருஷ்ண சகோதரியே போற்றி
39. ஓம் குமரனைப் பெற்றவளே போற்றி
40. ஓம் குறுநகை கொண்டவளே போற்றி

41. ஓம் குங்கும நாயகியே போற்றி
42. ஓம் குலம் விளங்கச் செய்தவளே போற்றி
43. ஓம் கிரியா சக்தி நாயகியே போற்றி
44. ஓம் கோள்களை வென்றவளே போற்றி
45. ஓம் சண்டிகேஸ்வரியே தாயே போற்றி
46. ஓம் சர்வ சக்தி படைத்தவளே போற்றி
47. ஓம் சந்தனத்தில் குளிப்பவளே போற்றி
48. ஓம் சர்வ அலங்காரப் பிரியையே போற்றி
49. ஓம் சாமுண்டி ஈஸ்வரியே போற்றி
50. ஓம் சங்கரன் துணைவியே போற்றி

51. ஓம் சங்கடம் தீர்ப்பவளே போற்றி
52. ஓம் சிவன்கரம் பிடித்தவளே போற்றி
53. ஓம் சிங்கார வல்லியே போற்றி
54. ஓம் சிம்மவாகனநாயகியே போற்றி
55. ஓம் சியாமள நிறத்தாளே போற்றி
56. ஓம் சித்தி அளிப்பவளே போற்றி
57. ஓம் செவ்வண்ணப் பிரியையே போற்றி
58. ஓம் ஜெய ஜெய துர்கா தேவியே போற்றி
59. ஓம் ஜோதி சொரூபமானவளே போற்றி
60. ஓம் ஞானம் அருளும் செல்வியே போற்றி

61. ஓம் ஞானக்கனல் கொண்டவளே போற்றி
62. ஓம் ஞாலம் காக்கும் நாயகியே போற்றி
63. ஓம் தயாபரியே தாயே போற்றி
64. ஓம் திருவெலாம் தருவாய் போற்றி
65. ஓம் திரிபுர சுந்தரியே போற்றி
66. ஓம் தீமையை அழிப்பாய் போற்றி
67. ஓம் துஷ்ட நிக்ரஹம் செய்பவளே போற்றி
68. ஓம் துர்கா பரமேஸ்வரியே போற்றி
69. ஓம் நன்மை அருள்பவளே போற்றி
70. ஓம் நவசக்தி நாயகியே போற்றி

71. ஓம் நவகோணத்தில் உறைபவளே போற்றி
72. ஓம் நிமலையே விமலையே போற்றி
73. ஓம் நிலாப்பிறை சூடியவளே போற்றி
74. ஓம் நிறைசெல்வம் தருவாய் போற்றி
75. ஓம் நின்னடி பணிந்தோம் போற்றி
76. ஓம் பக்தர்க்கு அருள்பவளே போற்றி
77. ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
78. ஓம் பயிரவியே தாயே போற்றி
79. ஓம் பயத்தைப் போக்குபவளே போற்றி
80. ஓம் பயங்கரி சங்கரியே போற்றி

81. ஓம் பார்வதிதேவியே போற்றி
82. ஓம் புவனம் படைத்தவளே போற்றி
83. ஓம் புண்ணியம் மிக்கவளே போற்றி
84. ஓம் பூவண்ணன் தங்கையே போற்றி
85. ஓம் மகிஷாசுர மர்த்தினியே போற்றி
86. ஓம் மங்கல நாயகியே போற்றி
87. ஓம் மகேஸ்வரித் தாயே போற்றி
88. ஓம் மங்கையர்க்கரசியே போற்றி
89. ஓம் மகமாயித் தாயே போற்றி
90. ஓம் மாதர் தலைவியே போற்றி

91. ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி
92. ஓம் மாணிக்கவல்லியே போற்றி
93. ஓம் மாயோன் தங்கையே போற்றி
94. ஓம் முக்கண்ணி நாயகியே போற்றி
95. ஓம் முக்தியளிப்பவளே போற்றி
96. ஓம் முக்கண்ணன் தலைவியே போற்றி
97. ஓம் மூலப்பரம்பொருளே போற்றி
98. ஓம் மூவுலகம் ஆள்பவளே போற்றி
99. ஓம் யசோதை புத்திரியே போற்றி
100. ஓம் யமபயம் போக்குபவளே போற்றி

101. ஓம் ராகுகால துர்க்கையே போற்றி
102. ஓம் ரவுத்தரம் கொண்டவளே போற்றி
103. ஓம் வல்லமை மிக்கவளே போற்றி
104. ஓம் வாழ்வருளும் அம்மையே போற்றி
105. ஓம் விஷ்ணு துர்க்கையே போற்றி
106. ஓம் வீர நெஞ்சத்தவளே போற்றி
107. ஓம் வைஷ்ணவித்தாயே போற்றி
108. ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி

ஸ்ரீ துர்க்கை காயத்ரி மந்திரம்

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யா குமரீச தீமஹி
தந்நோ துர்க்கிப் ப்ரசோதயாத்

 

ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் பாடல் வரிகள்

நெறஞ்ச மனசு உனக்குதாண்டி மகமாயி

துர்க்கை அம்மன் – 20 வழிபாட்டு குறிப்புகள்

Share
ஆன்மிகம்

Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    Thirumeeyachur lalithambigai temple | திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பாள் திருக்கோயில்

    Thirumeeyachur lalithambigai temple பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தால் தான் வரமுடியும்... திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பாள் திருக்கோயில்... ஸ்ரீலலிதாம்பாள் எனும் இந்தத் திருநாமத்தில்… Read More

    1 week ago

    அன்பெனும் பிடியுள் பாடல் வரிகள் | Anbenum pidiyul lyrics in tamil

    Anbenum pidiyul lyrics in tamil வள்ளலாரின் புகழ் பெற்ற பாடல் வரிகள் அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும்… Read More

    2 weeks ago

    சென்னையின் நவக்கிரக ஸ்தலங்கள்

    சென்னையின் நவக்கிரக ஸ்தலங்கள்!!.. சென்னைக்கு அருகிலேயே பல ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் நவக்கிரக ஸ்தலங்களை அமைத்துள்ளனர். சென்னைக்கு அருகிலுள்ள… Read More

    2 weeks ago

    தை அமாவாசை தினத்தின் சிறப்பு | thai amavasai special

    தை அமாவாசை முன்னிட்டு  செய்ய வேண்டிய பித்ரு கடமைகள் thai amavasai special...   அமாவாசை தினம் நமது சமயத்தில்… Read More

    3 weeks ago

    தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி?

    தைப்பூசம் தைப்பூசம் அன்று முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி? 🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔… Read More

    4 weeks ago

    Today rasi palan 19/2/2025 in tamil | இன்றைய ராசிபலன் புதன்கிழமை மாசி – 7

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *மாசி - 07*… Read More

    18 hours ago