Lyrics

108 Guru Potri in Tamil | 108 குரு பகவான் போற்றி | Guru Bhagavan 108 Potri

108 Guru Potri in Tamil

நவக்கிரகங்களில் முழுமையான சுப கிரகமாக திகழ்பவர், குரு பகவான். மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தருபவர் என்பதால், எந்த கிரகத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு குருவிற்கும், குருவின் பார்வைக்கும் உண்டு. எனவேதான் ஜோதிட சாஸ்திரம் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று கூறுகிறது.  வியாழக்கிழமை அல்லது தினமும் இந்த 108 குரு பகவான் (108 Guru Potri) போற்றிகளை படித்து குரு பகவானின் அருளை பெறுவோம்…

1. ஓம் அன்ன வாகனனே போற்றி
2. ஓம் அங்கிரஸ புத்ரனே போற்றி
3. ஓம் அபய கரத்தனே போற்றி
4. ஓம் அரசு சமித்தனே போற்றி
5. ஓம் அயன் அதிதேவதையனே போற்றி
6. ஓம் அலைவாயில் அருள்பவனே போற்றி
7. ஓம் அறிவனே போற்றி
8. ஓம் அறிவுக்கதிபதியே போற்றி
9. ஓம் அறக் காவலே போற்றி
10. ஓம் அரவகுலம் காத்தவனே போற்றி

11. ஓம் ஆண் கிரகமே போற்றி
12. ஓம் ஆணவமழிப்பவனே போற்றி
13. ஓம் இந்திரன் ப்ரத்யதிதேவதையனே போற்றி
14. ஓம் இருவாகனனே போற்றி
15. ஓம் ஈசனருள் பெற்றவனே போற்றி
16. ஓம் ஈரெண்ணாண்டாள்பவனே போற்றி
17. ஓம் உதித்தியன் சோதரனே போற்றி
18. ஓம் உபகிரகமுடையவனே போற்றி
19. ஓம் எண்பரித் தேரனே போற்றி
20. ஓம் எளியோர்க் காவலே போற்றி

21. ஓம் ஐந்தாமவனே போற்றி
22. ஓம் ஏடேந்தியவனே போற்றி
23. ஓம் கருணை உருவே போற்றி
24. ஓம் கற்பகத் தருவே போற்றி
25. ஓம் கடலை விரும்பியே போற்றி
26. ஓம் கமண்டலதாரியே போற்றி
27. ஓம் களங்கமிலானே போற்றி
28. ஓம் கசன் தந்தையே போற்றி
29. ஓம் கந்தனருள் பெற்றவனே போற்றி
30. ஓம் கடகராசி அதிபதியே போற்றி

31. ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி
32. ஓம் காக்கும் தேவனே போற்றி
33. ஓம் கிரகாதீசனே போற்றி
34. ஓம் கீர்த்தியருள்வோனே போற்றி
35. ஓம் குருவே போற்றி
36. ஓம் குருபரனே போற்றி
37. ஓம் குணசீலனே போற்றி
38. ஓம் குரு பகவானே போற்றி
39. ஓம் சதுர பீடனே போற்றி
40. ஓம் சஞ்சீவினி அறிந்தவனே போற்றி

41. ஓம் சான்றோனே போற்றி
42. ஓம் சாந்த மூர்த்தியே போற்றி
43. ஓம் சிறுமையழிப்பவனே போற்றி
44. ஓம் சின்முத்திரை ஹஸ்தனே போற்றி
45. ஓம் கராச்சாரியனே போற்றி
46. ஓம் சுப கிரகமே போற்றி
47. ஓம் செல்வமளிப்பவனே போற்றி
48. ஓம் செந்தூரில் உய்ந்தவனே போற்றி
49. ஓம் தங்கத் தேரனே போற்றி
50. ஓம் தனுர்ராசி அதிபதியே போற்றி

51. ஓம் தாரை மணாளனே போற்றி
52. ஓம் த்ரிலோகேசனே போற்றி
53. ஓம் திட்டைத் தேவனே போற்றி
54. ஓம் தீதழிப்பவனே போற்றி
55. ஓம் தூயவனே போற்றி
56. ஓம் துயர் துடைப்பவனே போற்றி
57. ஓம் தெளிவிப்பவனே போற்றி
58. ஓம் தேவ குருவே போற்றி
59. ஓம் தேவரமைச்சனே போற்றி
60. ஓம் தேவர்குலக் காவலனே போற்றி

61. ஓம் நற்குணனே போற்றி
62. ஓம் நல்லாசானே போற்றி
63. ஓம் நற்குரலோனே போற்றி
64. ஓம் நல்வாக்கருள்பவனே போற்றி
65. ஓம் நலமேயருள்பவனே போற்றி
66. ஓம் நாற்சக்கரத் தேரனே போற்றி
67. ஓம் நாற்கோணப் பீடனே போற்றி
68. ஓம் நாற்கரனே போற்றி
69. ஓம் நீதிகாரகனே போற்றி
70. ஓம் நீதிநூல் தந்தவனே போற்றி

71. ஓம் நேசனே போற்றி
72. ஓம் நெடியோனே போற்றி
73. ஓம் பரத்வாஜன் தந்தையே போற்றி
74. ஓம் பாடியில் அருள்பவனே போற்றி
75. ஓம் பிரஹஸ்பதியே போற்றி
76. ஓம் பிரமன் பெயரனே போற்றி
77. ஓம் பீதாம்பரனே போற்றி
78. ஓம் புத்ர காரகனே போற்றி
79. ஓம் புனர்வசு நாதனே போற்றி
80. ஓம் புஷ்பராகம் விரும்பியே போற்றி

81. ஓம் பூரட்டாதிபதியே போற்றி
82. ஓம் பொற்குடையனே போற்றி
83. ஓம் பொன்னாடையனே போற்றி
84. ஓம் பொன்மலர்ப் பிரியனே போற்றி
85. ஓம் பொன்னிற த்வஜனே போற்றி
86. ஓம் மணம் அருள்பவனே போற்றி
87. ஓம் மகவளிப்பவனே போற்றி
88. ஓம் மஞ்சள் வண்ணனே போற்றி
89. ஓம் மமதை மணாளனே போற்றி
90. ஓம் முல்லைப் பிரியனே போற்றி

91. ஓம் மீனராசி அதிபதியே போற்றி
92. ஓம் யானை வாகனனே போற்றி
93. ஓம் யோகசித்தி சோதரனே போற்றி
94. ஓம் ரவிக்கு உற்றவனே போற்றி
95. ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
96. ஓம் வடதிசையனே போற்றி
97. ஓம் வடநோக்கனே போற்றி
98. ஓம் வள்ளலே போற்றி
99. ஓம் வல்லவனே போற்றி
100. ஓம் வச்சிராயுதனே போற்றி

101. ஓம் வாகீசனே போற்றி
102. ஓம் விசாக நாதனே போற்றி
103. ஓம் வேதியனே போற்றி
104. ஓம் வேகச் சுழலோனே போற்றி
105. ஓம் வேண்டுவன ஈவோனே போற்றி
106. ஓம் ஹ்ரீம் பீஜ மந்திரனே போற்றி
107. ஓம் ஹரயே போற்றி
108. ஓம் வியாழனே போற்றி போற்றி…

குரு பகவானுக்குரிய நிறம் – மஞ்சள்
குரு பகவானுக்குரிய குணம் – சாத்வீகம்
குரு பகவானுக்குரிய மலர் – முல்லை
குரு பகவானுக்குரிய ரத்தினம் – புஷ்பராகம்
குரு பகவானுக்குரிய சமித்து – அரசு
குரு பகவானுக்குரிய தேவதை – இந்திரன்
குரு பகவானுக்குரிய பிரத்யதி தேவதை – நான்முகன்
குரு பகவானுக்குரிய திசை – வடக்கு
குரு பகவானுக்குரிய ஆசன வடிவம் – செவ்வகம்
குரு பகவானுக்குரிய வாகனம் – யானை
குரு பகவானுக்குரிய தானியம் – கொண்டைக்கடலை
குரு பகவானுக்குரிய உலோகம் – பொன்
குரு பகவானுக்குரிய சுவை – இனிப்பு
குரு பகவானுக்குரிய ராகம் – அடானா
குரு பகவானுக்குரிய நட்பு – சூரியன், சந்திரன், செவ்வாய்
குரு பகவானுக்குரிய பகை – புதன், சுக்ரன்
குரு பகவானுக்குரிய சமம் – சனி, ராகு, கேது
குரு பகவானுக்குரிய ஆட்சி – தனுசு, மீனம்
குரு பகவானுக்குரிய மூலத்திரிகோணம் – தனுசு
குரு பகவானுக்குரிய உச்சம் – கடகம்
குரு பகவானுக்குரிய நீச்சம் – மகரம்
குரு பகவானுக்குரிய நட்சத்திரங்கள் – புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
குரு பகவானுக்குரிய தசா காலம் – 16 வருடங்கள்
குரு பகவானுக்குரிய பார்வை – 5, 7, 9-ம் இடங்கள்
குரு பகவானுக்குரிய பாலினம் – ஆண்
குரு பகவானுக்குரிய கோச்சார காலம் – 1 வருடம்
குரு பகவானுக்குரிய உருவம் – உயரம்
குரு பகவானுக்குரிய உபகிரகம் – எமகண்டன்

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

பல நன்மைகள் தரும் நவகிரக மந்திரங்கள்

108 நவகிரகங்கள் போற்றி

 

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    மகாளய பித்ரு பக்ஷ கேள்வி பதில்கள் | Mahalaya Patcham Questions

    மகாளய பித்ரு பக்ஷ கேள்வி பதில்கள் | Mahalaya Patcham Questions 18/09/24 - 03/10/24 - தர்ம சாஸ்த்ரம்… Read More

    4 hours ago

    முன்னோர்களின் ஆசியை பெற மகாளய அமாவாசை | மகாளய அமாவாசை சிறப்புகள்

    முன்னோரை ஆராதிப்பதற்கு ஏற்ற மகாளய அமாவாசை | Mahalaya Amavasya 🌚 புரட்டாசி மாதத்தில் வரும் எல்லா சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு… Read More

    1 day ago

    மஹாளய பட்சம் பற்றிய தகவல்கள் | Mahalaya patcham Tamil | Mahalaya paksha

    மஹாளய பட்சம் பற்றிய தகவல்கள் | Mahalaya patcham Tamil | Mahalaya paksha information *மஹாளய பட்சம்* (30.9.2023… Read More

    1 day ago

    Srardham procedure in tamil | சிராத்தம் விதிமுறைகள்

    Srardham procedure in tamil சிராத்தம் விதிமுறைகள் (Srardham procedure) பரலோகம் பித்ருலோகம்  பித்ரு கர்மா நாம் ஒரு விஷயத்தை… Read More

    1 day ago

    ஞான சரஸ்வதி கோவில் ஆதிலாபாத் தெலுங்கானா | basara saraswathi temple adilabad

    ஞான சரஸ்வதி கோவில் ஆதிலாபாத் தெலுங்கானா பஸாரா ஞான சரஸ்வதி கோயில் - Basara Saraswathi temple பஸாரா ஞான… Read More

    5 days ago

    சந்திரனுக்குக் கிடைத்த சாபம் | Chandran Vinayagar Story Tamil

    சந்திரனுக்குக் கிடைத்த சாபம் | Chandran Vinayagar Story Tamil சந்திரனுக்குக் கிடைத்த சாபம்! ஒருமுறை, சந்திரன் கயிலைக்குச் சென்றிருந்தபோது,… Read More

    7 days ago