ஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்திர சத நாமாவளி | 108 Krishnan names… வீட்டில் கிருஷ்ணருக்கு படைக்க 7 வகையான நிவேதனங்கள் செய்வது எப்படி என்று இந்த பதிவின் இறுதியில் உள்ளது.. .
ஓம் க்றுஷ்ணாய நமஹ:
ஓம் கமலனாதாய நமஹ:
ஓம் வாஸுதேவாய நமஹ:
ஓம் ஸனாதனாய நமஹ:
ஓம் வஸுதேவாத்மஜாய நமஹ:
ஓம் புண்யாய நமஹ:
ஓம் லீலாமானுஷ விக்ரஹாய நமஹ:
ஓம் ஶ்ரீவத்ஸ கௌஸ்துபதராய நமஹ:
ஓம் யஶோதாவத்ஸலாய நமஹ:
ஓம் ஹரியே நமஹ: || 10 ||
ஓம் சதுர்புஜாத்த சக்ராஸிகதா நமஹ:
ஓம் ஸம்காம்புஜா யுதாயுஜாய நமஹ:
ஓம் தேவாகீனம்தனாய நமஹ:
ஓம் ஶ்ரீஶாய நமஹ:
ஓம் னம்தகோப ப்ரியாத்மஜாய நமஹ:
ஓம் யமுனாவேகா ஸம்ஹாரிணே நமஹ:
ஓம் பலபத்ர ப்ரியனுஜாய நமஹ:
ஓம் பூதனாஜீவித ஹராய நமஹ:
ஓம் ஶகடாஸுர பம்ஜனாய நமஹ:
ஓம் னம்தவ்ரஜ ஜனானம்தினே நமஹ: || 20 ||
ஓம் ஸச்சிதானம்த விக்ரஹாய நமஹ:
ஓம் னவனீத விலிப்தாம்காய நமஹ:
ஓம் னவனீத னடனாய நமஹ:
ஓம் முசுகும்த ப்ரஸாதகாய நமஹ:
ஓம் ஷோடஶஸ்த்ரீ ஸஹஸ்ரேஶாய நமஹ:
ஓம் த்ரிபம்கினே நமஹ:
ஓம் மதுராக்றுதயே நமஹ:
ஓம் ஶுகவாக ம்றுதாப்தீம்தவே நமஹ:
ஓம் கோவிம்தாய நமஹ:
ஓம் யோகினாம் பதயே நமஹ: || 30
ஓம் வத்ஸவாடி சராய நமஹ:
ஓம் அனம்தாய நமஹ:
ஓம் தேனுகாஸுரபம்ஜனாய நமஹ:
ஓம் த்றுணீ க்றுத த்றுணா வர்தாய நமஹ:
ஓம் யமளார்ஜுன பம்ஜனாய நமஹ:
ஓம் உத்தலோத்தால பேத்ரே நமஹ:
ஓம் தமால ஶ்யாமலாக்றுதியே நமஹ:
ஓம் கோபகோபீஶ்வராய நமஹ:
ஓம் யோகினே நமஹ:
ஓம் கோடிஸூர்ய ஸமப்ரபாய நமஹ: || 40 ||
ஓம் இலாபதயே நமஹ:
ஓம் பரம்ஜ்யோதிஷே நமஹ:
ஓம் யாதவேம்த்ராய நமஹ:
ஓம் யதூத்வஹாய நமஹ:
ஓம் வனமாலினே நமஹ:
ஓம் பீதவாஸனே நமஹ:
ஓம் பாரிஜாதபஹாரகாய நமஹ:
ஓம் கோவர்தனாச லோத்தர்த்ரே நமஹ:
ஓம் கோபாலாய நமஹ:
ஓம் ஸர்வபாலகாய நமஹ: || 50 ||
ஓம் அஜாய நமஹ:
ஓம் னிரம்ஜனாய நமஹ:
ஓம் காமஜனகாய நமஹ:
ஓம் கம்ஜலோசனாய நமஹ:
ஓம் மதுக்னே நமஹ:
ஓம் மதுரானாதாய நமஹ:
ஓம் த்வாரகானாயகாய நமஹ:
ஓம் பலினே நமஹ:
ஓம் ப்றும்தாவனாம்த ஸம்சாரிணே நமஹ:
ஓம் துலஸீதாம பூஷனாய நமஹ: || 60 ||
ஓம் ஶமம்தக மணேர்ஹர்த்ரே நமஹ:
ஓம் னரனாரயணாத்மகாய நமஹ:
ஓம் குஜ்ஜ க்றுஷ்ணாம்பரதராய நமஹ:
ஓம் மாயினே நமஹ:
ஓம் பரமபுருஷாய நமஹ:
ஓம் முஷ்டிகாஸுர சாணூர நமஹ:
ஓம் மல்லயுத்த விஶாரதாய நமஹ:
ஓம் ஸம்ஸாரவைரிணே நமஹ:
ஓம் கம்ஸாரயே நமஹ:
ஓம் முராரயே நமஹ: || 70 ||
ஓம் னாராகாம்தகாய நமஹ:
ஓம் அனாதி ப்ரஹ்மசாரிணே நமஹ:
ஓம் க்றுஷ்ணாவ்யஸன கர்ஶகாய நமஹ:
ஓம் ஶிஶுபாலஶிச்சேத்ரே நமஹ:
ஓம் துர்யோதனகுலாம்தகாய நமஹ:
ஓம் விதுராக்ரூர வரதாய நமஹ:
ஓம் விஶ்வரூபப்ரதர்ஶகாய நமஹ:
ஓம் ஸத்யவாசே நமஹ:
ஓம் ஸத்ய ஸம்கல்பாய நமஹ:
ஓம் ஸத்யபாமாரதாய நமஹ: || 80 ||
ஓம் ஜயினே நமஹ:
ஓம் ஸுபத்ரா பூர்வஜாய நமஹ:
ஓம் விஷ்ணவே நமஹ:
ஓம் பீஷ்மமுக்தி ப்ரதாயகாய நமஹ:
ஓம் ஜகத்குரவே நமஹ:
ஓம் ஜகன்னாதாய நமஹ:
ஓம் வேணுனாத விஶாரதாய நமஹ:
ஓம் வ்றுஷபாஸுர வித்வம்ஸினே நமஹ:
ஓம் பாணாஸுர கராம்தக்றுதே நமஹ:
ஓம் யுதிஷ்டிர ப்ரதிஷ்டாத்ரே நமஹ: || 90 ||
ஓம் பர்ஹிபர்ஹாவதம்ஸகாய நமஹ:
ஓம் பார்தஸாரதியே நமஹ:
ஓம் அவ்யக்தாய நமஹ:
ஓம் கீதாம்றுத மஹொததியே நமஹ:
ஓம் காளீய பணிமாணிக்ய ரம்ஜித
ஶ்ரீ பதாம்புஜாய நமஹ:
ஓம் தாமோதராய நமஹ:
ஓம் யஜ்னபோக்ர்தே நமஹ:
ஓம் தானவேம்த்ர வினாஶகாய நமஹ:
ஓம் னாராயணாய நமஹ:
ஓம் பரப்ரஹ்மணே நமஹ: || 100 ||
ஓம் பன்னகாஶன வாஹனாய நமஹ:
ஓம் ஜலக்ரீடா ஸமாஸக்த நமஹ:
ஓம் கோபீவஸ்த்ராபஹாராகாய நமஹ:
ஓம் புண்யஶ்லோகாய நமஹ:
ஓம் தீர்தக்றுதே நமஹ:
ஓம் வேதவேத்யாய நமஹ:
ஓம் தயானிதயே நமஹ:
ஓம் ஸர்வதீர்தாத்மகாய நமஹ:
ஓம் ஸர்வக்ரஹ ருபிணே நமஹ:
ஓம் பராத்பராய நமஹ: 🌀108
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
கோகுலாஷ்டமி ஸ்பெஷல்
*🔯அஷ்டகம் என்ற எட்டு ஸ்லோகத்தால் தெய்வங்களைத் துதித்து வணங்குதல் சிறப்பு.*
அந்த வகையில்
ஸ்ரீகிருஷ்ணனைத்_துதிக்க உதவும் எட்டு ஸ்லோகங்களின் தொகுப்பு – கிருஷ்ணாஷ்டகம். ‘நினைத்துப் பார்க்க முடியாத நல்ல பலன்களை எல்லாம் கொடுக்கக் கூடியது இந்த கிருஷ்ணாஷ்டகம்‘ என்பதை இதன் கடைசி ஸ்லோகமான பலஸ்ருதி சொல்கிறது.
இந்த அஷ்டகத்தைச் சொல்லி சகல பலன்களையும் பெறுவோம்!
*ஸ்ரீகிருஷ்ணாஷ்டகம்*
1. வசுதேவ ஸூதம் தேவம் கம்ஸ சாணூர மர்த்தனம் தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
பொருள் வசுதேவரின் குமாரன்; கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன்; தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்க வேண்டும்.
பொருள் சுருட்டைத் தலைமுடியுடன் கூடிய அழகு பொருந்தியவன்; முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவன்; பளீர் என ஒளி விடும் குண்டலங்கள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.
பொருள் மந்தாரப் பூக்களின் நறுமணத்துடன் கூடியவன்; அழகான புன்னகை கொண்டவன்; நான்கு கைகள் உடையவன்; மயில் தோகையை தலையில் அணிகலனாகச் சூடியவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.
5 .உத்புல்ல பத்ம பத்ராக்ஷம் நீல ஜீமூத ஸந்நிபம் யாதவானாம் சிரோ ரத்னம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
பொருள் மலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவன்; நீருண்ட மேகத்தைப் போன்றவன்; யாதவர்களின் ரத்னமாக முடிசூடா மன்னனாகத் திகழ்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.
பொருள் ருக்மிணி தேவியுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்பவன்; பீதாம்பரத்துடன் ஒளி பொருந்தியவனாகத் திகழ்பவன்; துளசியின் பரிமளத்தை உடையவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.
பொருள் ஸ்ரீவத்ஸம் எனும் மறுவை அடையாளமாகக் கொண்டவன்; அகன்ற மார்பை உடையவன்; வனமாலை சூடியிருப்பவன்; சங்கு சக்கரங்களைத் தரித்திருப்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன்.
யார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜயோகம் கைகூடுவதோடு , பிறவி முடிந்த பின்னும், மேலுலக இன்பங்களை அனுபவித்து, இறுதியில் நாராயணணின் திருவடிகளை அடையலாம்.
அந்த எளிமையானத் திருநாமங்களைக் காலையில் நீராடியவுடனும் , மாலையில் விளக்கேற்றியவுடனும் சொல்லலாம். தினமும் ஜபிக்கும்போது, துளசியும் ‘ சுத்தமான நீரும் நைவேத்தியமாக வைத்து , வழிபட்டால் போதும்.
*24 திருநாமங்கள்*
ஓம் கேசவாய நமஹ :
ஓம் சங்கர்ஷனாய நமஹ :
ஓம் நாராயணாய. நமஹ :
ஓம் வாசுதேவாய. நமஹ :
ஓம் மாதவாய. நமஹ
ஓம் ப்ரத்யும்னாய. நமஹ :
ஓம் கோவிந்தாய. நமஹ :
ஓம் அனிருத்தாய. நமஹ :
ஓம் விஷ்ணவே நமஹ
ஓம் புருஷோத்தமாய. நமஹ:
ஓம் மதுசூதனாய. நமஹ :
ஓம் அதோக்ஷஜாய. நமஹ :
ஓம் த்ரிவிக்ரமாய. நமஹ :
ஓம் லக்ஷ்மி நரசிம்ஹாய. நமஹ :
ஓம் வாமனாய. நமஹ :
ஓம் அச்சுதாய. நமஹ :
ஓம் ஸ்ரீதராய. நமஹ :
ஓம் ஜனார்தனாய நமஹ :
ஓம் ஹ்ரிஷீகேசாய. நமஹ :
ஓம் உபேந்த்ராய. நமஹ :
ஓம் பத்மநாபாய. நமஹ :
ஓம் ஹரயே நமஹ :
ஓம் தாமோதராய. நமஹ :
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பல இல்லங்களில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. வீட்டில் கிருஷ்ணருக்கு படைக்க 7 வகையான நிவேதனங்கள் செய்வது எப்படி என்று பார்க்கலாம்..
1. அவல் பாயசம்
தேவையான பொருட்கள் :
அவல் – ஒரு கப்,
காய்ச்சிய பால் – ஒரு கப்,
வெல்லத்தூள் – தேவையான அளவு,
ஏலக்காய்த்தூள் – சிட்டிகை,
நெய் – ஒரு டீஸ்பூன்,
முந்திரி, திராட்சை – தலா 10.
செய்முறை:
பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும்.
அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு உருக்கி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே நெய்யில் அவலை சேர்த்து வறுத்து எடுக்கவும்.
அதே பாத்திரத்தில் தண்ணீர் சிறிதளவு விட்டு கொதிக்க விடவும். இதனுடன் அவலை சேர்த்து வேக விடவும்.
பிறகு பால் ,ஏலக்காய்த்தூள், வெல்லக் கரைசல் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
மேலே வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம்.
2. இனிப்பு அவல் பிசறல்
தேவையான பொருட்கள் :
கெட்டி அவல் – 100 கிராம்,
ஏலக்காய்த் தூள் – கால் டீஸ்பூன்,
சர்க்கரை – கால் கப்,
தேங்காய்த் துருவல் – கால் கப்.
செய்முறை:
அவலுடன் தண்ணீர் விட்டு அலசி 5 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து எடுக்கவும்.
பாத்திரத்தில் ஊற வைத்த அவலுடன் ஏலக்காய்த்தூள், சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்து கலக்கவும்.
3. வெல்ல சீடை:
தேவையான பொருட்கள் :
பதப்படுத்திய அரிசி மாவு – ஒரு கப்,
வறுத்து அரைத்து சலித்த உளுத்த மாவு – ஒரு டீஸ்பூன்,
வெல்லத்தூள் – அரை கப்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
கறுப்பு எள் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
வெறும் வாணலியில் அரிசி மாவை வறுத்தெடுத்து சலிக்கவும்.
வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும்.
அதனுடன் ஏலக்காய்த்தூள், எள், அரிசி மாவு, உளுத்த மாவு, வெண்ணெய் சேர்த்து பிசையவும்.
ஆறிய பின் சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
வாணலியில் எண்ணெய் காய வைத்து உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
4. உப்பு சீடை:
தேவையான பொருட்கள் :
பதப்படுத்திய அரிசி மாவு – ஒரு கப்,
வெண்ணெய், வறுத்து அரைத்து சலித்த உளுத்த மாவு – 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு,
பெருங்காயத்தூள் – சிட்டிகை.
செய்முறை:
வெறும் வாணலியில் அரிசி மாவை வறுத்தெடுத்து சலிக்கவும்.
அரிசி மாவுடன் உளுத்த மாவு, உப்பு, பெருங்காயத்தூள், வெண்ணெய் சேர்த்து பிசறவும்.
இதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசையவும்.
பிறகு மாவை சிறிய உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெய் காய விட்டு உருட்டிய சீடைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
5. கோகனட் ரவா லட்டு
தேவையான பொருட்கள் :
ரவை, தேங்காய்த் துருவல் – தலா ஒரு கப்,
சர்க்கரை – ஒன்றரை கப்,
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்,
நெய் – அரை கப்,
உடைத்த முந்திரி, திராட்சை – தலா 10.
செய்முறை:
அடிகனமான வாணலியில் சிறிதளவு நெய் விட்டு உருக்கி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே நெய்யில் ரவை, தேங்காய்த் துருவலை தனித்தனியாக சேர்த்து வறுத்தெடுக்கவும்.
ஆறியதும் மிக்சியில் ரவையுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து அரைக்கவும்.
பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்து அரைத்தெடுக்கவும்.
அகலமான பாத்திரத்தில் அரைத்த பொருட்களுடன் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலக்கவும்.
வாணலியில் நெய் விட்டு சூடாக்கி சிறிது சிறிதாக அரைத்த கலவையுடன் சேர்த்து கலந்து உருண்டைகளாக்கவும்.
6. தட்டை
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு – ஒரு கப்,
உளுத்த மாவு – ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,
மிளகுத்தூள், வெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்,
ஊற வைத்த கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
அகலமான பாத்திரத்தில் அரிசி மாவுடன் உளுத்த மாவு, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், வெண்ணெய், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கலக்கவும்.
அதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.
பிறகு மாவை சிறிய உருண்டைகளாக்கி தட்டவும்.
வாணலியில் எண்ணெய் காய வைத்து தட்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
7. வெல்ல திரட்டுப்பால்
தேவையான பொருட்கள் :
காய்ச்சாத பால் – ஒரு லிட்டர்,
வெல்லத்தூள் – கால் கப்,
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்.
செய்முறை:
அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.
பிறகு சிறு தீயில் வைத்து கை விடாமல் கிளறி நன்கு சுண்டக் காய்ச்சவும். (ஓரங்களில் படியும் ஏடுகளையும் சேர்த்து கிளறி காய்ச்சவும்).
அதனுடன் வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
கிருஷ்ண ஜெயந்தி பற்றிய 30 தகவல்கள்
கிருஷ்ண ஜெயந்தி எதற்காக கொண்டாடுகிறோம்
மகாளய பித்ரு பக்ஷ கேள்வி பதில்கள் | Mahalaya Patcham Questions 18/09/24 - 03/10/24 - தர்ம சாஸ்த்ரம்… Read More
முன்னோரை ஆராதிப்பதற்கு ஏற்ற மகாளய அமாவாசை | Mahalaya Amavasya 🌚 புரட்டாசி மாதத்தில் வரும் எல்லா சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு… Read More
மஹாளய பட்சம் பற்றிய தகவல்கள் | Mahalaya patcham Tamil | Mahalaya paksha information *மஹாளய பட்சம்* (30.9.2023… Read More
Srardham procedure in tamil சிராத்தம் விதிமுறைகள் (Srardham procedure) பரலோகம் பித்ருலோகம் பித்ரு கர்மா நாம் ஒரு விஷயத்தை… Read More
ஞான சரஸ்வதி கோவில் ஆதிலாபாத் தெலுங்கானா பஸாரா ஞான சரஸ்வதி கோயில் - Basara Saraswathi temple பஸாரா ஞான… Read More
சந்திரனுக்குக் கிடைத்த சாபம் | Chandran Vinayagar Story Tamil சந்திரனுக்குக் கிடைத்த சாபம்! ஒருமுறை, சந்திரன் கயிலைக்குச் சென்றிருந்தபோது,… Read More
Leave a Comment