Lyrics

Ganesha Pancharatnam Lyrics in tamil | ஸ்ரீ கணேச பஞ்சரத்னம்

Ganesha Pancharatnam Lyrics in tamil

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் ( Sri Ganesha Pancharatnam ) – ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய கணேச பஞ்சரத்ன ஸ்லோக வரிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… அனைவரும் இந்த ஸ்லோகத்தை துதித்து விநாயகரின் அருளை பெறுவோமாக… இந்த பாடலின் பொருளும் இந்த பதிவின் பாடல் வரிகள் முடிந்த பின்பு உள்ளது…

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் ஸ்லோக வரிகள்

முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
களாதராவதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்
அனாயகைக னாயகம் வினாஶிதேப தைத்யகம்
னதாஶுபாஶு னாஶகம் னமாமி தம் வினாயகம் (1)

னதேதராதி பீகரம் னவோதிதார்க பாஸ்வரம்
னமத்ஸுராரி னிர்ஜரம் னதாதிகாபதுத்டரம்
ஸுரேஶ்வரம் னிதீஶ்வரம் கஜேஶ்வரம் கணேஶ்வரம்
மஹேஶ்வரம் தமாஶ்ரயே பராத்பரம் னிரன்தரம் (2)

ஸமஸ்த லோக ஶங்கரம் னிரஸ்த தைத்ய குஞ்ஜரம்
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம்
க்றுபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யஶஸ்கரம்
மனஸ்கரம் னமஸ்க்றுதாம் னமஸ்கரோமி பாஸ்வரம் (3)

அகிஞ்சனார்தி மார்ஜனம் சிரன்தனோக்தி பாஜனம்
புராரி பூர்வ னன்தனம் ஸுராரி கர்வ சர்வணம்
ப்ரபஞ்ச னாஶ பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோல தானவாரணம் பஜே புராண வாரணம் (4)

னிதான்த கான்தி தன்த கான்தி மன்த கான்தி காத்மஜம்
அசின்த்ய ரூபமன்த ஹீன மன்தராய க்றுன்தனம்
ஹ்றுதன்தரே னிரன்தரம் வஸன்தமேவ யோகினாம்
தமேகதன்தமேவ தம் விசின்தயாமி ஸன்ததம் (5)

மஹாகணேஶ பஞ்சரத்னமாதரேண யோ‌உன்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்றுதி ஸ்மரன் கணேஶ்வரம்
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயு ரஷ்டபூதி மப்யுபைதி ஸோஉசிராத் (6)..

Ganesha Pancharatnam song meaning

மனம் மகிழ்ந்து, கையில் மோதகம் ஏந்தி, எப்பொழுதும் மோட்சம் நல்குபவரான விநாயகரை வணங்குகிறேன். அவர் சந்திரப்பிறை அணிந்தவர். அமைதிகொண்டோரைக் காப்பவர். துணையற்றவருக்கு துணையானவர். யானையரக்கனைக் கொன்றவர். வணங்கியவரை குறைதீர்த்துக் காப்பவர். அவரை வணங்குகிறேன்.

வணங்காதவருக்கு விநாயகர் பயமானவர். உதித்தெழும் சூரியன் போல் விளங்குகின்றார் அவர். தேவரும் அசுரரும் அவரை வணங்க, வணங்கியவரின் தீயதைப் போக்கி, தேவர்களுக்கும், நவநிதிகளுக்கும், கஜாஸுரனுக்கும், கணங்களுக்கும் தலைமை தாங்கி பரம்பொருளாய் நிற்கும் அவரை எக்கணமும் சரணமடைகிறேன்.

கஜாஸுரனை அழித்து அகில உலகுக்கும் ÷க்ஷமத்தைச் செய்தவர் விநாயகர். மேலும் அவர் பருத்த தொந்தியும், சிறந்த யானைமுகமும் கொண்டவர். கருணை புரிபவர். பொறுமையானவர். மகிழ்ச்சி தோன்ற புகழ்சேர்ப்பவர். வணங்கியவருக்கு நல் மனம் தந்து விளங்கும் அவரை வணங்குகின்றேன்.

ஏழைகளின் துன்பத்தைத் துடைத்து உபநிஷதங்கள் போற்ற நிற்பவர். பரமசிவனின் மூத்த மகனாய் அசுரர்களின் கர்வத்தை அடக்கியவர். பாம்பை ஆபரணமாகக் கொண்டவர். மதஜலம் பெருகும் பழம்பெரும் வாரணமுகத்தவனை வணங்குகிறேன்.

மிக அழகான தந்தங்களைக் கொண்டவர். யமனை அடக்கிய பரமசிவனின் புதல்வர். எண்ணுதற்கரிய உருவம் கொண்டவர். முடிவில்லாதவர். இடையூறுகளைத் தகர்ப்பவர். யோகிகளின் மனதில் குடிகொண்டவரான அந்த ஏகதந்தரை எப்பொழுதும் தியானம் செய்கிறேன்.

இந்த கணேச பஞ்சரத்னத்தை எவர் தினமும் காலையில் கணபதியை மனதில் தியானித்துக் கொண்டு பாராயணம் செய்கிறாரோ, அவன் நோயின்றி குறையேதுமின்றி, நல்ல கல்விகளையும், நன்மக்களையும், அஷ்டைச்வர்யமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.

ஸ்ரீ விநாயகர் துதிகள் பாடல்கள்

விநாயக பெருமானின் சக்தி வாய்ந்த 12 ஸ்லோகங்கள்

விநாயகர் அகவல் பாடல் வரிகள்

Share
ஆன்மிகம்

Leave a Comment

View Comments

Published by
ஆன்மிகம்
Tags: Lord Ganesha
  • Recent Posts

    Girivalam benefits | திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள் | கிரிவலம் வரலாறு

    பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More

    5 days ago

    வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits

    வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம்… Read More

    6 days ago

    செல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி | Chitra Pournami

    செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி::°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா… Read More

    1 month ago

    ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல்

    🌻🙏ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல் (4/5/23, வியாழக் கிழமை) 🌻🕉️ 🍒ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🌹 ஸ்ரீ லக்ஷ்மி… Read More

    1 month ago

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya Tritiya benefits

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (10) நாள் 23.4.2023 ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை… Read More

    2 months ago