Lyrics

ஸ்ரீ விநாயகர் துதிகள் பாடல்கள் | Vinayagar thuthi padal tamil lyrics

ஓம் ஸ்ரீ விநாயகர் துதிகள் பாடல்கள்!! Vinayagar thuthi padal tamil lyrics 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌷 வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!🙏

🌷பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!🙏

🌷ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!🙏

🌷விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!🙏

🌷பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர் கடிகணபதி வர அருளினன் மிகு கொடை வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!🙏

🌷திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்அகட சக்கர விண்மணியாவுறை விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!🙏

🌷மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக் கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!🙏

🌷அல்லல்போம், வல்வினைபோம் அன்னை வயிற்றில்
பிறந்ததொல்லை போம், போகாத் துயரம் போம் நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!🙏

🌷முன்னவனே யானை முகத்தவனே! முத்திநலம் சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே! மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!🙏

🌷யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம் வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என் உள்ளக் கருத்தின் உளன்!🙏

🌷ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும் மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல் செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை முக்கட் கடாயானை முன்!🙏

🌷களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன் ஒளியானைப் பாரோர்க் குதவும் – அளியானைக் கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள் நண்ணுவதும் நல்லார் கடன்!🙏

🌷மொழியின் மறைமுதலே முந்நயனத் தேறே கழியவரும் பொருளே, கண்ணே – செழிய கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை அலாலயனே, சூழாதென் அன்பு!🙏

🌷மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும் பொருப்பையடி போற்றத் துணிந்தால் – நெருப்பை
அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை வருத்த எண்ணுகின்ற மலம்!🙏

🌷நாரணன் முன் பணிந்தேத்த நின்று எல்லை நடாவிய அத் தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே, காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,
ஆரண நுண்பொருளே, என்பவர்க்கில்லை அல்லல்களே!🙏

🌷திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும் கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும் பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும் பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்!🙏

🌷மங்களத்து நாயகனேமண்ணாளும் முதல் இறைவா! பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே! சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும் எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!🙏

🌷அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே!🙏

🌷பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித் தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன் உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!🙏

🌷இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!🙏

🌷வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம் தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க வளரொளி விநாயகனே வா!🙏

🌷திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை!🙏

🌷அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம் பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட வரமழை உதவி செவ்வந்து யானையின் திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்!🙏

🌷முக்கண் ஒருத்தன் மற்றென்னுள வாரி முயங்குதலான் மிக்க வெண்கோடொன்று மேசிதையா நிற்கும் வெள்ளறிவை உக்க கருமத மேகரு மாசை ஒழிக்கும் அருள் புக்கம் செம்மேனி மனஞ் செம்மையாகப் புணர்த்திடுமே!🙏

🌷தலைவாரி கடுக்கைமாலைத் தனிமுதல் சடையிற் சூடும் குழவி வெண்திங்கள் இற்றகோட்டது குறையென்றெண்ணிப்
புழைநெடுங்கரத்தாற் பற்றிப் பொற்புற இனைந்து நோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்!🙏

🌷வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்! வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும் வெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே! அப்பமும் பழம் அமுதும் செய்தருளிய தொப்பையப்பனை தொழ வினையறுமே!🙏

🌷தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக் கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்! கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதிஎன்றிடக் கருமமில்லையே!🙏

🌷உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத் தள்ளரிய அன்பென்னுந்தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுகட்பாசக் கள்ளவினைப்பசுபோதக்கவளமிடக் களித்துண்டு கருணையென்னும் வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்!🙏

🌷அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால் பகருமொரு முதலாகி வேறும் ஆகிப் பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப்
போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!🙏

🌷வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே அஞ்சரண மூன்றானை மறை சொல்லுநால்
வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்!🙏

🌷பண்ணியம்,ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும் அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச்
சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்!🙏
🌷நீடாழிஉலகத்து மறை நாலொடைந்தென்று நிலை நிற்கவே வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள் ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர் எழுந்தாணிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.
முருகார் மலர்த்தாம் முடியானை அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மதயானைவதனச் செழுங்குன்றினைப்
பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி புத்தேளிரும்
ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்!🙏
🌷ஆணிலேஅன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியைஇப்பெருங்
கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே வீணிலே உழைப்பே அருள் ஐயனே
விளங்கு சித்தி விநாயக வள்ளலே..!🙏
🙏🍁🙏🍁🙏🍁🙏🍁🙏🍁🙏🍁🙏🍁🙏🍁
ஓம் ஸ்ரீ விநாயகா போற்றி போற்றி போற்றி..!
🙏🍃🙏🍃🙏🍃🙏🍃🙏🍃🙏🍃🙏🍃🙏🍃

Share
ஆன்மிகம்

Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    வாக்கிய பஞ்சாங்கம் vs திருக்கணித பஞ்சாங்கம் – முக்கியமான வேறுபாடுகள்

    வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் – எந்தது சிறந்தது? வாக்கிய பஞ்சாங்கம் vs திருக்கணித பஞ்சாங்கம் – வேறுபாடுகள்… Read More

    21 hours ago

    Today rasi palan 27/03/2025 in tamil | இன்றைய ராசிபலன் வியாழக்கிழமை பங்குனி – 13

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _* _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *பங்குனி - 13* *மார்ச்… Read More

    6 hours ago

    கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் | Kandha Sasti Kavasam Tamil Lyrics

    Kandha Sasti Kavasam Tamil Lyrics கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் (Kandha sasti kavasam tamil lyrics)… Read More

    1 day ago

    மருவத்தூர் ஓம் சக்தி பாடல் வரிகள் | Maruvathoor om sakthi song lyrics tamil

    Maruvathoor om sakthi song lyrics tamil மருவத்தூர் ஓம் சக்தி பாடல் வரிகள் | Maruvathur om sakthi… Read More

    1 week ago

    Sani peyarchi palangal 2025-2027 | சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027

    Sani peyarchi palangal 2025-2027 சனிப்பெயர்ச்சி 2025-2027 பலன்கள் (Sani Peyarchi Palangal 2025) இந்த மாற்ற நிலை 29.03.2025… Read More

    1 day ago

    பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க காரடையான் நோன்பு 14/3/2025 | karadaiyan nombu 2025

    காரடையான் நோன்பு -விளக்கம்-விரத முறை *காரடையான் நோன்பு* 🙏🙏 *காரடையான் நோன்பு* *சிறப்பு பதிவு* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *14.03.2025* *வெள்ளிக் கிழமை*… Read More

    2 weeks ago