Lyrics

Meenakshi Pancharatnam Lyrics in Tamil | ஸ்ரீ மீனாட்சி பஞ்சரத்னம்

Meenakshi Pancharatnam Lyrics in Tamil

ஸ்ரீ மீனாக்ஷீ பஞ்சரத்னம் (Meenakshi Pancharatnam) பாடல் வரிகள் மற்றும் பாடல் பொருளுடன் இந்த பதிவில் உள்ளது…

1.உத்யத்பானுஸஹஸ்ரகோடி ஸத்ருசாம் கேயூரஹாரோஜ்வலாம்
பிம்போஷ்டீம் ஸ்மிததந்த பங்க்திருசிராம் பீதாம்பராலங்க்ருதாம் I
விஷ்ணு ப்ரஹ்மஸுநேந்திர ஸேவிதபதாம் தத்வஸ்வரூபாம் சிவாம்
மீனாக்ஷீம் ப்ரணதோsஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம் நிதிம் II

ஆயிரம் ஆயிரம் சூர்யர்கள் உதித்ததுபோல் இருப்பவளும், தோள்வாளை, முக்தாஹாரம் இவற்றையணிந்தவளும், கோவைப்பழம் போன்ற உதடும், சுத்த வெள்ளை புன்முறுவல், பீதாம்பரம் இவற்றால் அழகியவளும், விஷ்ணு, பிரம்மா, இந்த்ரன் இவர்கள் ஸேவிக்கும் தத்வஸ்வரூபமுள்ள, மங்கள கருணைக் கடலை, ஸ்ரீ மீனாக்ஷியை நமஸ்கரிக்கிறேன்.

2.முக்தாஹார லஸத்கிரீட ருச்ராம் பூர்ணேந்து வக்த்ர ப்ரபாம்
சிஞ்ஜந்நூபுர கிங்கிணீ மணிதராம் பத்மப்ரபா பாஸுராம் I
ஸர்வாபீஷ்ட பலப்ரதாம் கிரிஸுதாம் வாணீ ரமாஸேவிதாம்
மீனாக்ஷீம் ப்ரணதோsஸ்மிஸந்தமஹம் காருண்யவாராம் நிதிம் II

முத்துமாலையும், கிரீடமும் அணிந்து பூர்ண சந்திரன் போன்ற முகப்பொலிவுடன் விளங்குகிறாள் மீனாக்ஷி. ஒளிக்கின்ற காற் சதங்கை மணிகளைக் கொண்டவளாய், தாமரை மலரையத்த ப்ரபையுடனும் இருக்கிறாள். அனைவரின் விருப்பத்தையும் நிறைவேற்றி, ஸரஸ்வதீ-லக்ஷ்மீ தேவியரால் சேவிக்கப்பட்டும், கருணைக்கடலாயும் மிளிர்கின்ற ஸ்ரீமீனாக்ஷியை நமஸ்கரிக்கிறேன்.

3.ஸ்ரீவித்யாம் சிவவாமபாக நிலயாம் ஹ்ரீங்கார மந்த்ரோஜ்வலாம்
ஸ்ரீசக்ராங்கித பிந்துமத்யவஸதிம் ஸ்ரீமத்ஸபாநாயகீம்
ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம் ஸ்ரீமத் ஜகன்மோஹினீம்
மீனாக்ஷீம் ப்ரணதோsஸ்மிஸந்தமஹம் காருண்யவாராம் நிதிம் II

ஸ்ரீவித்யையாகவும், சிவனின் இடது பாகத்தில் ஹ்ரீம் என்ற மந்த்ரத்தால் பிரகாசிப்பவளாயும், ஸ்ரீ சக்ரத்தில் பிந்து நடுவே வசிப்பவளாயும், ஸபாநாயகியாகவும், ஸ்ரீ ஷண்முகர், கணபதி ஆகியோரின் மாதாவாகவும், ஜகத்தை ஆகர்ஷிப்பவளாயும். கருணைக் கடலாயுமுள்ள ஸ்ரீமீனாக்ஷியை நமஸ்கரிக்கிறேன்.

4.ஸ்ரீமத் ஸுந்தரநாயகீம் பயஹராம் ஜ்ஞானப்ரதாம் நிர்மலாம்
ச்யாமாபாம் கமலாஸனார்சிதபதாம் நாராயணஸ்யானுஜாம் I
வீணாவேணு ம்ருதங்கவாத்ய ரஸிகாம் நாநாவிதா டம்பிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோsஸ்மிஸந்தமஹம் காருண்யவாராம் நிதிம் II

பயத்தைப் போக்கி ஜ்யானத்தையளிக்கும் நித்யசுத்த அழகம்மையாக கரிய திருமேனியுடன் காட்சி தருகிறாள். அவள் பிரம்மன் போற்றும் திருவடியுடையவள். ஸ்ரீ நாராயணரின் ஸஹோதர். வீணை, புல்லாங்குழல், மிருதங்கம் முதலிய வாத்யங்களை ரஸிப்பவள், பற்பல ஆடம்பரம் உடையவள். அந்த கருணைக்கடலான மீனாக்ஷியை நமஸ்கரிக்கிறேன்.

5.நாநாயோகி முனீந்த்ரஹ்ருந்நிவஸதிம் நாநார்த்தஸித்தி ப்ரதாம்
நாநாபுஷ்ப விராஜிதாங்க்ரியுகலாம் நாராயணே நார்சிதாம் I
நாதப்ரஹ்ம மயீம் பராத்பரதராம் நாநார்த்தத்வாத்மிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோsஸ்மிஸந்தமஹம் காருண்யவாராம் நிதிம் II

பற்பல யோகிகள் முனிவர்கள் ஆகியோரின் ஹ்ருதயத்தில் குடிகொண்டு பற்பல ஸித்தியருளுபவள். பலவித புஷ்பங்களால் திருவடியில் பூஜிக்கப்பட்டவள். ஸ்ரீ நாராயணரின் போற்றுதலுக்குறியவள். நாதப்ரஹ்மமானவள். பரத்திற்கும் பரமானவள். தத்ஸ்ரூபிணியுமானவள். அந்த மீனாக்ஷியை நமஸ்கரிக்கிறேன்.

அம்பிகையின் திருவடிகளில் சரணம் !

அபிராமி அந்தாதி பாடல் வரிகள்

லலிதா சஹஸ்ரநாமம் பாடல் வரிகள்

சகலகலாவல்லி மாலை பாடல் வரிகள்

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits

    வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம்… Read More

    5 hours ago

    செல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி | Chitra Pournami

    செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி::°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா… Read More

    4 weeks ago

    ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல்

    🌻🙏ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல் (4/5/23, வியாழக் கிழமை) 🌻🕉️ 🍒ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🌹 ஸ்ரீ லக்ஷ்மி… Read More

    4 weeks ago

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya Tritiya benefits

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (10) நாள் 23.4.2023 ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை… Read More

    1 month ago

    Guru Peyarchi Palangal 2023-24 Parigarangal | குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-2024

    Guru Peyarchi Palangal 2023-24 Parigarangal குரு பெயர்ச்சி பலன்கள் 2023 - 2024 (Guru Peyarchi Palangal 2023-24)… Read More

    1 month ago