பல பேரின் குலதெய்வம் ஒப்பில்லாத பெருமான் நம் ஒப்பில்லியப்ப பெருமாள் பாடல் வரிகள் (Oppilatha perumal song lyrics)
ஒப்பிலாத பெருமாள் நம் ஒப்பில்லியப்பத் திருமால்
ஒப்பிலாத பெருமாள் நம் ஒப்பில்லியப்பத் திருமால்
உலகினிலே பல கலையும் உயர் பொருளும் உதவிடுவார்
உலகினிலே பல கலையும் உயர் பொருளும் உதவிடுவார்
நம் ஒப்பிலாத பெருமாள் நம் ஒப்பில்லியப்பத் திருமால்
எப்பொழுதும் அருள்வார் அவர் எப்பதமும் தருவார்
எப்பொழுதும் அருள்வார் அவர் எப்பதமும் தருவார்
எழுந்து மலர்ந்து எழிலுடனே நிமிர்ந்து நிற்பார் பொலிவுடனே
எழுந்து மலர்ந்து எழிலுடனே நிமிர்ந்து நிற்பார் பொலிவுடனே
எதிர் வருவார் துயர் களை வார்
பதம் பணிவோம் பணி புரிவோம்
எதிர் வருவார் துயர் களை வார்
பதம் பணிவோம் பணி புரிவோம்
என்றென்றும் புகழ் பாடி இன்புற்றே வாழ்ந்திருப்போம்
என்றென்றும் புகழ் பாடி இன்புற்றே வாழ்ந்திருப்போம்
நம் ஒப்பிலாத பெருமாள் நம் ஒப்பிலியப்பத் திருமால்
ஏழுமலை இங்கிருக்க ஏகாந்தம் எதிரிருக்க
ஏழுமலை இங்கிருக்க ஏகாந்தம் எதிரிருக்க
ஏது குறை ஏது வினை ஏது பயம் என்றிருப்போம்
ஏது குறை ஏது வினை ஏது பயம் என்றிருப்போம்
இருளை களைந்து ஒளி தருவார் அருளை அடைந்து வழி பெறுவோம்
இருளை களைந்து ஒளி தருவார் அருளை அடைந்து வழி பெறுவோம்
இன்பமெல்லாம் தந்திடுவார் அன்பு மனம் கொண்டிடுவார்
இன்பமெல்லாம் தந்திடுவார் அன்பு மனம் கொண்டிடுவார்
எம்பெருமான் நம் பெருமான் இணை அடியே துணை நமக்கு
எம்பெருமான் நம் பெருமான் இணை அடியே துணை நமக்கு
எங்கள் பிரான் தயவிருக்க எது வரினும் நாம் அஞ்சோம்
எங்கள் பிரான் தயவிருக்க எது வரினும் நாம் அஞ்சோம்
எப்பொழுதும் நாம் மறவோம் ஒப்பில்லியப்பத்தானை
எப்பொழுதும் நாம் மறவோம் உப்பிலியப்பத்தானை
இருளை களைந்து ஒளி தருவார் அருளை அடைந்து வழி பெறுவோம்
நம் ஒப்பிலாத பெருமாள் நம் உப்பிலியப்பத் திருமால்
உலகினிலே பல கலையும் உயர் பொருளும் உதவிடுவார்
நம் ஒப்பிலாத பெருமாள் நம் உப்பிலியப்பத் திருமால்
நம் உப்பிலியப்பத் திருமால்.
ஓம் நமோ நாராயணா
ஒவ்வொரு மாதமும் சிரவணத் திருநாளில் நீராடி விரதம் இருந்து உப்பில்லாத உணவை இறைவனுக்கு படைத்த பின்னர், அதனை உண்டு விரதம் முடிப்பதே சிரவண விரதமாகும்.
தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும். ஆகாச நகரம், திருவிண்ணகர் என்ற பெயர்களும் இத்தலத்துக்கு உண்டு. பக்தர்கள் நினைத்ததை நடத்தி வைப்பவர் உப்பிலியப்பன்.
இத்தலத்திற்கு வந்து ஸ்ரீனிவாசனை சரணடைந்தோர் அவரது அருளை பரிபூரணமாய் பெறுவது திண்ணம். திருமணமாகாதவர்கள் இங்கு வந்து தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
செவ்வாய், வெள்ளி, சனிக் கிழமைகளில் திருவோண நட்சத்திரம் ஏகாதசி போன்ற நாட்களில் இந்த திருக்குளத்தில் நீராடி பெருமாளை தரிசிப்பவர் வைகுந்தம் செல்வதாக ஐதீகம். சாரங்க தீர்த்தம், சூரிய தீர்த்தம், இந்திர தீர்த்தம் என பல புண்ணிய தீர்த்தங்கள் கோவிலில் உள்ளன.
ஒப்பில்லியப்பனை துளசியால் அர்ச்சிப்பவர், ஒவ்வொரு இதழுக்கும் அசுவ மேத யாகம் செய்த பலனை அடைகிறார். சந்தனம், குங்குமம், பூ இவற்றை சமர்பிப்பதன் மூலம் பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபடுகிறார்கள். ஆடை, அணிகலன்களை சமர்ப்பிப்பவர்கள் பாவ விமோசனம் பெறுகின்றனர். புரட்டாசி அல்லது பங்குனி சிரவனத்தன்று காலையில் புஷ்கரணியில் நீராடி, தானங்களை செய்பவர்கள் பாவங்கள் அகன்று போகும்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஒப்பில்லியப்பன் கோயிலில் மாதாமாதம் சிரவணம் என்ற விழா பிரசித்தம். சிறப்பு என்னன்னா ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ'( என்னை சரணைந்தால் உன்னை நான் காப்பேன்). என்ற சரமச்லோகப்பகுதி, எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் சிரவணத் திருநாளில் பகல் 11 மணிக்கு சிரவண தீபம் தரிசனம் செய்யலாம். இத்திருநாளில் விரதம் இருந்து நீராடி, உப்பில்லாத உணவை இறைவனுக்கு படைத்த பின்னர், அதனை உண்டு விரதம் முடிப்பதே சிரவண விரதமாகும். பக்தர்கள் இந்த விரதத்தை தங்களது வீடுகளிலும் கடைப்பிடிக்கலாம். குருவாயூரைப் போன்று இங்கும் துலாபாரம் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் உப்பு தவிர தங்கள் வேண்டுதலுக்கேற்ப அனைத்து பொருட்களையும் காணிக்கையாக செலுத்தலாம்.
ஒப்பில்லியப்பனுக்குப் படைக்கப்படும் உப்பில்லாத உணவையே பிரசாதமாக உண்டு வருக்கிறார்கள் .பூமி நாச்சியார் பகவானுக்கு சமைக்கும்போது உப்புப் போட மறந்துவிட்டதால் பெருமாள் உப்பில்லாமலே படைப்பதாக ஐதீகம்.
ஒப்பில்லியப்பன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் சிரவண நக்ஷத்திரத்தன்று சிரவண தீபம் எடுத்து குறி சொல்வது விசேஷம். பெருமாளுக்கு நெய் தீபம் பிரகாரமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
கும்பகோணத்தில் இருந்து தெற்கில் 7 கிலோ மீட்டர் தூரத்திலும், காரைக்கால், திருநள்ளாறு செல்லும் சாலையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திலும், ராகு தலமான திருநாகேஸ்வரம் கோவிலுக்கு மிக அருகிலும் ஒப்பிலியப்பன் கோவில் அமைந்துள்ளது.
Thirumeeyachur lalithambigai temple பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தால் தான் வரமுடியும்... திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பாள் திருக்கோயில்... ஸ்ரீலலிதாம்பாள் எனும் இந்தத் திருநாமத்தில்… Read More
Anbenum pidiyul lyrics in tamil வள்ளலாரின் புகழ் பெற்ற பாடல் வரிகள் அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும்… Read More
சென்னையின் நவக்கிரக ஸ்தலங்கள்!!.. சென்னைக்கு அருகிலேயே பல ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் நவக்கிரக ஸ்தலங்களை அமைத்துள்ளனர். சென்னைக்கு அருகிலுள்ள… Read More
தை அமாவாசை முன்னிட்டு செய்ய வேண்டிய பித்ரு கடமைகள் thai amavasai special... அமாவாசை தினம் நமது சமயத்தில்… Read More
தைப்பூசம் தைப்பூசம் அன்று முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி? 🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *மாசி - 07*… Read More