நோய்களைத் தீர்க்கும் பரிகார கோவில்கள் – ஸ்ரீ சிரிவர மங்கைத் தாயார் உடனாய ஸ்ரீ வானமாமலை பெருமாள் திருக்கோவில்
திருவரமங்கை என்னும் வானமாமலை என்று அழைக்கப்படும் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும் .சுயம்பு மூர்த்தியாக உள்ள எட்டு தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
திருவரமங்கை என்னும் இத்தலத்திற்கு வானமாமலை, நாங்குநேரி, தோத்தாத்ரி, திருவரமங்கை நகர் என்ற பல்வேறு பெயர்களும் உண்டு. பிரம்மாண்ட புராணம், ஸ்கந்த புராணம், நரசிம்ம புராணம் போன்றவற்றில் இத்தலம் பேசப்படுகிறது. உரோம முனிவர் தவஞ்செய்து திருமாலைக் கண்டதால் உரோமசேத்திரம் என்றும், ஸ்ரீவரமங்கையாக திருமகள் இவ்விடத்தில் வந்து வளர்ந்து பிறகு எம்பெருமானை மணந்து கொண்டதால் ஸ்ரீவரமங்கை (சீரிவரமங்கல நகர்) எனவும், ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகணை சேரி எனவும், மரங்கள் நிறைந்த வனமும் மலையும் சூழ்ந்த இடமாதலின் வானமாமலை எனவும் இங்குள்ள திருக்குளத்தை நான்கு ஏரிகளாக வெட்டியதால் நான்கு + ஏரி= நான்குநேரிஎனவும்,அந்த நான்கு ஏரிகளின் கூர்மையான முனைகள் சந்திக்கும் மையப் பகு தியில் அமைந்ததால் நான் + கூர் + நேரி என்பது காலப்போக்கில் நாங்குநேரி என பேச்சு வழக்காயிற்று.
இக்கோயிலில் வானமாமலைப் பெருமாள், திருவரமங்கை தாயார் சன்னதிகள் உள்ளன. இங்குக் கோயில் கல்வெட்டு உள்ளது. இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் ஏழு கோபுரங்கள் உள்ளன.
இங்கு இறைவனுக்கு தினந்தோறும் தைலக்காப்பு சாற்றும் நிகழ்வு நடைபெறும். அந்த எண்ணெயை எடுத்து இங்குள்ள நாழிக்கிணற்றில் ஊற்றி வருகின்றனர். இந்த நாழிக்கிணற்றில் உள்ள எண்ணெயை நம்பிக்கையுடன் உண்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை ஆகும்.
நம்பிக்கையுடன் தினமும் சொல்ல வேண்டிய பாடல் :
தெய்வ நாயகன் நாரணன் திரிவி கிரமன் அடியிணை மீசை
கொய்கொள் பூம்பொழில் சூல்குரு கூர்செட கோபன்
செய்த ஆயிரத் துள்ளிவை தன்சீரி வரமங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார் வானோர்க்கார அமுதே .
வழித்தடம் :
திருநெல்வேலி – நாகர்கோவில் சாலையில் திருநெல்வேலியிலிருந்து 25 கி மீ ல் உள்ளது.
பெருந்தேவி தாயார் உடனுறை ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் . காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், திருமாலின் 108 திவ்ய தேசங்களில் 43 வது திவ்ய தேச தலமாக போற்றப்படுகிறது. இத்தலம் ஹஸ்தகிரி, திருக்கச்சி, வேழமலை, அத்திகிரி ஆகிய பெயராலும் அழைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில், காமாட்சி அம்மன் கோவிலுடன் இந்த கோவிலும் சேர்த்து மும்மூர்த்திவாசம் என குறிப்பிடுகிறார்கள்.
வைணவத்தில் ஸ்ரீரங்கம், திருப்பதி, கர்நாடகாவில் உள்ள திருநாராயணபுரம் மற்றும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய நான்கு தலங்களில் வழிபட்டால் அவருக்கு வைகுண்ட பதவி நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தலம் விஷ்ணு காஞ்சி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.சரஸ்வதி தேவி அளித்த சாபத்தால் இப்பகுதியில் யானையாக அலைந்து திரிந்தார் தேவர்களின் தலைவனான இந்திரன். யானைக்கு, ஹஸ்தகிரியின் மீது காட்சி தந்து சாப விமோசனம் அளித்தார் பெருமாள். சாப விமோசனம் பெற்ற இந்திரன் இத்தலத்தில் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன இரண்டு பல்லிகளை பிரதிஷ்டை செய்ததாக சொல்லப்படுகிறது.
மற்றொரு சமயம் பிரம்ம தேவர், இத்தலத்தில் யாகம் ஒன்றை நடத்தினார். அப்போது வேகவதி நதி என்ற பெயரில் நதியாக பாய்ந்து ஓடிய சரஸ்வதி தேவியால் யாகம் தடைபடும் நிலை ஏற்பட்டது. அப்போது பிரம்மன், இத்தல பெருமாளை வேண்டினார். உடனடியாக பெருமாளே, நதியின் குறுக்கே சயன கோலத்தில் கிடந்து வேகவதி நதியை தடுத்து நிறுத்தி, பிரம்மாவின் யாகத்தை காப்பாற்றினார். ஆயிரம் சூரியன்கள் இணைந்த பிரகாசத்துடன் பிரம்ம தேவருக்கு காட்சி கொடுத்ததால் இத்தல பெருமாளுக்கு வரதராஜ சுவாமி என்ற பெயர் உண்டாயிற்று.
கோவில் தனிச்சிறப்புக்கள் :
கோவில் பற்றிய விபரங்கள் :
மூலவர் : தேவராஜ பெருமாள்
உற்சவர் : பேரருளாளன் (தேவராஜன், தேவ பெருமாள்)
தாயார் : பெருந்தேவி தாயார்
தீர்த்தம் : வேகவதி நதி, அனந்தசரஸ், சேஷ தீர்த்தம், வராக தீர்த்தம், பத்ம தீர்த்தம், அக்னி தீர்த்தம், குசேல தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்
கோலம் : நின்ற திருக்கோலம்
த்வமித்த முத்தாபித பத்மயோனி
அநந்த பூமா மம ரோகராசிம்
நிருந்த்தி வாதலயவச விஷ்ணோ