Lyrics

Paarthene Mookuthi Amman Song Lyrics Tamil | மூக்குத்தி அம்மன் பார்த்தேனே பாடல் வரிகள்

Paarthene Mookuthi Amman Song Lyrics Tamil

மூக்குத்தி அம்மன் பார்த்தேனே பாடல் வரிகள் (Paarthene mookuthi amman) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடலின் காணொளியும் இதில் இடம் பெற்றுள்ளது… இந்த பாடல் மூக்குத்தி அம்மன் படத்தில் இடம் பெற்றது.. இந்த பாடலை எழுதியவர் திரு. பா.விஜய் அவர்கள் மற்றும் பாடியவர் திரு.ஜெய்ராம் பாலசுப்ரமணியன். Paarthene Mookuthi Amman Song Lyrics in English 

பார்த்தேனே உயிரின் வழியே
யார் கண்ணும் காணா முகமே….
கல் என்று நினைத்தேன் உனையே….
நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா….

எதில் நீ இருந்தாய்….
எங்கோ மறைந்தாய்….
உன்னைத் தேடி அலைந்தேன்….
எனக்குள்ளேத் தெரிந்தாய்….

இது போதும் எனக்கு….
வேறு வரங்கள் நூறு வேண்டுமா….
இறைவா இது தான் நிறைவா….
உணர்ந்தேன் உனையே உனையே….
மறந்தேன் எனையே எனையே….

பார்த்தேனே உயிரின் வழியே….
யார் கண்ணும் காணா முகமே….
ஓ…. ஓ…. கல் என்று நினைத்தேன் உனையே….
நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா….

வேதங்கள் மொத்தம் ஓதி….
யாகங்கள் நித்தம் செய்து….
பூஜிக்கும் பக்தி அதிலும்….
உன்னைக் காணலாம்….

பசி என்று தன் முன் வந்து….
கை ஏந்தி கேட்கும் போது….
தன் உணவைத் தந்தால் கூட….
உன்னைக் காணலாம்….

உன்னைக் காண பல கோடி….
இங்கு வாரி இறைக்கிறார்கள்….
எளிதாக உன்னை சேர….
இங்கு யார் நினைக்கிறார்கள்….

அலங்காரம் அதில் நீ இல்லை….
அகங்காரம் மனதில் இல்லை….
துளிக் கள்ளம் கபடம் கலந்திடாத….
அன்பில் இருக்கிறாய்….
உணர்ந்தேன் உனையே உனையே….
மறந்தேன் எனையே எனையே….

அகம் நீ ஜகம் நீ….
அணுவான உலகின் அகலம் நீ….
எறும்பின் இதய ஒளி நீ….
களிரின் துதிக்கைக் கணமும் நீ….

ஆயிரம் கை உண்டு என்றால்….
நீ ஒரு கை தரக் கூடாதா….
ஈராயிரம் கண் கொண்டாய்….
உன் ஒரு கண் என்னைப் பாராதா….
உன்னில் சரண் அடைந்தேன்….
இனி நீ கதியே….

பார்த்தேனே உயிரின் வழியே….
யார் கண்ணும் காணா முகமே….
கல் என்று நினைத்தேன் உனையே….
நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா….

108 அம்மன் போற்றி

35 காயத்ரி மந்திரங்கள்

அம்மன் பாடல்கள் தொகுப்பு

மூக்குத்தி அம்மன் பாடல் காணொளி

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    சந்திரனுக்குக் கிடைத்த சாபம் | Chandran Vinayagar Story Tamil

    சந்திரனுக்குக் கிடைத்த சாபம் | Chandran Vinayagar Story Tamil சந்திரனுக்குக் கிடைத்த சாபம்! ஒருமுறை, சந்திரன் கயிலைக்குச் சென்றிருந்தபோது,… Read More

    11 hours ago

    விநாயகர் பற்றிய 100 அரிய குறிப்புகள் | Vinayaga 100 special information

    Vinayaga 100 special information விநாயகர் சதுர்த்தி விரதம் சிறப்பு பதிவு. விநாயகர் பற்றிய 100 அரிய குறிப்புகள் .… Read More

    2 days ago

    விநாயகர் அகவல் பாடல் வரிகள் | Vinayagar Agaval Lyrics in Tamil | Vinayagar songs

    Vinayagar Agaval Lyrics in Tamil விநாயகர் அகவல் (Vinayagar Agaval) - ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர்… Read More

    2 days ago

    கணபதியே கணபதியே பாடல் வரிகள்

    ஓம் கணநாதனே போற்றி போற்றி ஓம் ஞான முதல்வனே போற்றி ஓம் வெள்ளை கொம்பனே போற்றி கணபதியே கணபதியே… கணபதியே… Read More

    5 days ago

    Vinayaka Chathurthi Pooja Procedure in Tamil | சதுர்த்தியன்று பூஜை செய்யும் முறை

    Vinayaka Chathurthi Pooja Procedure Tamil விநாயகர் சதுர்த்தி (7/9/2024) வழிபடும் முறைகள் (Vinayagar Chathurthi Pooja Procedure in… Read More

    6 days ago

    வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்?

    Vinayagar Statue directions வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்? ⭐ விநாயகர் சதுர்த்தி, விநாயகரின் முக்கியமான விழாவாகும்.… Read More

    5 days ago