திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே பாடல் வரிகள் (Thirupparkadalil song lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் 1975 ஆம் ஆண்டு ஸ்வாமி ஐயப்பன் திரைப்படத்தில் இடம் பெற்றது… இந்த பாடலை இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஆவார்…. இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் திரு.தேவராஜன் அவர்கள் மற்றும் பாடலை பாடியவர் திரு. கே.ஜே. ஜேசுதாஸ்…
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா – அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா …ஆ….ஆ….ஆ…..
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா – அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா
உலகினைப் பாய் போல் உண்டவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா – அன்று
உரலுடன் நடந்த கண்ணனும் நீயே
ஸ்ரீமந் நாராயணா
இரணியன் அகந்தை அழித்தவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா – அன்று
இந்திர வில்லை முறித்தவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா ………ஆ……ஆ……ஆ…….
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா – அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா
கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே
அறியாயோ நீயே? – அவள்
கொடுமையை ஒழிக்க மறந்து விட்டாயோ?
ஸ்ரீமந் நாராயணா
தேவர்கள் உந்தன் குழந்தைகளன்றோ
மறந்தாயோ நீயே? – உன்
தெய்வ முனிவரைக் காப்பதற்கென்றே
வருவாயோ நீயே……ஏ…..ஏ…..ஏ……..
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா – அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா
தோளிலந்த சாரங்கம் எடுத்து
வரவேண்டும் நீயே – கணை
தொடுத்திட வேண்டும் அரக்கியின் வாழ்வை
அழித்திடுவாய் நீயே
அனந்த சயனத்தில் பள்ளியெழுந்து
வாராய் திருமாலே உன்
அன்பரை யெல்லாம் துன்பத்திலிருந்து
காப்பாய் பெருமாளே ……………
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா – அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா
ரதங்கள் படைகளென எழுந்து எழுந்து
இன்று வீறுடன் வாருங்கள்
நாராயணனெனும் தலைவனின் துணையால்
போர்க்களம் வாருங்கள்
வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்
வேல் கொண்டு வாருங்கள் – இனி
வருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம்
தேவர்கள் வாருங்கள்
ஸ்ரீமந் நாராயணா ஸ்ரீபதி ஜெகந்நாதா
வருவாய் திருமாலே………
துணை தருவாய் பெருமாளே…………..!
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே பாடல் வரிகள் காணொளி:
You can find this song by searching for thiruppar kadalil song lyrics in tamil or perumal songs in tamil
அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (20) நாள் 3.5.2021 செவ்வாய்க்க்கிழமை அட்சய திருதியை… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our WhatsApp group II. *🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉* *பஞ்சாங்கம்… Read More
Guru Peyarchi Palangal 2022-23 Parigarangal குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 (Guru Peyarchi Palangal 2022-23)… Read More
Mesha rasi guru peyarchi palangal 2022-23 குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22 Mesha rasi guru peyarchi palangal 2022-23… Read More
Rishaba Rasi Guru Peyarchi Palangal 2022-23 ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் Rishaba Rasi Guru Peyarchi Palangal… Read More
Mithuna rasi Guru peyarchi palangal 2022-23 மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Mithuna rasi guru peyarchi palangal… Read More
Leave a Comment