Subscribe for notification
Siththarkal

7 சக்கர சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது.

7 சக்கர சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது | 7 chakras in our human body

சித்தர்கள் அருளிய சிறப்பான தகவல்கள்.   நம் உடம்பினில் உள்ள 7 சக்கரங்களை பற்றிய பதிவு ..

மனிதர்கள் இயங்குவதற்கு ஆதாரமாக 7 ஆற்றல் சக்கரங்கள் உள்ளன. சூரிய ஒளியோடு தொடர்புடைய இந்த 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கண்டறிந்துள்ளனர்.

அவை 1. மூலாதாரம், 2. சுவாதிஷ்டானம், 3. மணிபூரகம், 4.  அனாகதம், 5. விசுத்தி, 6. ஆக்கினை, 7. தூரியம் ஆகியவை ஆகும்.

மூலாதாரம்:

முதுகெலும்பின் அடிப்பாகத்தில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம்.  அமைப்பில் நான்கு இதழ் தாமரை போல் சிவப்பு நிறத்தில் உள்ளது.

உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது. உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல  காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது. சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம்  தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

சுவாதிஷ்டானம்:

இது பாலியல் உணர்வுகளை தூண்டும் சக்கரம். தொப்புளுக்கு சற்று கீழே ஆறு இதழ் தாமரை போல் ஆரஞ்சு நிறத்தில்  அமைந்துள்ளது. பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. ஈகோவுக்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது.
மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களை அடக்கி அறிகின்ற சக்தியும் இதிலிருந்து தொடர்கிறது. பாலியல் சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலுத்துகிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள்  இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

மணிபூரகம்:

நாபி என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. தொப்புளுக்கு சற்று மேலே பத்து இதழ் தாமரை அமைப்பில் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது. உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும்  விநியோகிக்கப்படுகிறது. கட்டுக்கடங்காத உணர்ச்சியும் இங்குதான் கருக்கொள்கிறது. அதனால்தான் அதிர்ச்சியோ பய  உணர்ச்சியோ ஏற்படுகின்ற போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இருக்கமடைந்து விடுகின்றன. கணையம் என்கிற சுரப்பி  இதனுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. மண்ணீரல், இரைப்பை, கல்லீரல், பித்தப்பை, ஆகியவை இதன்  கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன.

அனாகதம்:

இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் பன்னிரண்டு இதழ்  தாமரை அமைப்பில் பச்சை நிறத்தில் இருக்கிறது. அன்பு, பாசம், இரக்கம், சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து  நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும். தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இதயம், நுரையீரல், ரத்த ஓட்டம் ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன.

விசுத்தி:

இதற்கு குரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. இது பதினாறு இதழ்கள் கொண்ட தாமரையாக நீல நிறத்தில்  இருக்கிறது. தொடர்பு கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டவை. நம்முடைய புலன்களுக்கு அப்பால் அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான் அறிகிறோம். தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில்  செயல்படுகின்றன.

ஆக்கினை:

இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக கருநீல நிறத்தில் இரண்டு இதழ் தாமரை சின்னத்தில் அமைந்திருக்கிறது. தொலை உணர்தல் (டெலிபதி) தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன்  மூலமாகத்தான் கிடைக்கின்றன. அறிவு சங்கல்பம், மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது. இதன் மூலம்தான்  விஷயங்களை உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது. இந்தக் கண் திறக்கின்ற போது ஆன்மிகக் கண் திறப்பதாக ஞானிகள்  சொல்கிறார்கள். பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள், மூக்கு,  காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை.
தூரியம்:

இதற்கு சகஸ்ரஹாரம், தாமரைச் சக்கரம் என்ற பெயர்கள் உண்டு. இது உச்சந்தலை பகுதியில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் அமைந்திருக்கிறது. இந்தச் சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப்  பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும், நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவு படுத்துகின்ற சக்கரம் இது. என்ன நடக்கப் போகிறது என,  அல்லது எதைச் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான் கிடைக்கிறது. பீனியல் சுரப்பி இதன்  கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல்பகுதி இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.

சித்தர்கள் என்றும் நம்மை வியக்க வைக்கும் பெரும் சக்தி என்பது இதில் தெளிவாக தெரிகிறது…

Share
ஆன்மிகம்

Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    Thirumeeyachur lalithambigai temple | திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பாள் திருக்கோயில்

    Thirumeeyachur lalithambigai temple பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தால் தான் வரமுடியும்... திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பாள் திருக்கோயில்... ஸ்ரீலலிதாம்பாள் எனும் இந்தத் திருநாமத்தில்… Read More

    1 week ago

    அன்பெனும் பிடியுள் பாடல் வரிகள் | Anbenum pidiyul lyrics in tamil

    Anbenum pidiyul lyrics in tamil வள்ளலாரின் புகழ் பெற்ற பாடல் வரிகள் அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும்… Read More

    2 weeks ago

    சென்னையின் நவக்கிரக ஸ்தலங்கள்

    சென்னையின் நவக்கிரக ஸ்தலங்கள்!!.. சென்னைக்கு அருகிலேயே பல ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் நவக்கிரக ஸ்தலங்களை அமைத்துள்ளனர். சென்னைக்கு அருகிலுள்ள… Read More

    2 weeks ago

    தை அமாவாசை தினத்தின் சிறப்பு | thai amavasai special

    தை அமாவாசை முன்னிட்டு  செய்ய வேண்டிய பித்ரு கடமைகள் thai amavasai special...   அமாவாசை தினம் நமது சமயத்தில்… Read More

    3 weeks ago

    தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி?

    தைப்பூசம் தைப்பூசம் அன்று முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி? 🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔… Read More

    4 weeks ago

    Today rasi palan 19/2/2025 in tamil | இன்றைய ராசிபலன் புதன்கிழமை மாசி – 7

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *மாசி - 07*… Read More

    10 hours ago