Kannimoola ganapathiyai vendikittu lyrics in tamil
கன்னிமூல கணபதிய வேண்டிக்கிட்டு பாடல் வரிகள் இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… கன்னிமூல கணபதிய வேண்டிக்கிட்டு நாங்க கார்த்திகை முதல் தேதி மாலையிட்டோம் பாடல் வரிகள் . Kannimoola ganapathiyai vendikittu-naanga Ayyappa song Tamil Lyrics
கன்னிமூல கணபதியை வேண்டிக்கிட்டு நாங்க
கார்த்திகை முதல் தேதி மாலையிட்டோம்
(கார்த்திகை முதல் தேதி மாலையிட்டோம்)
ஐயப்பா ஐயப்பா என்றே சொல்லி நாங்க
ஆறு வாரம் தானே நோன்பு இருந்தோம்
(நாங்க ஆறு வாரம் தானே நோன்பு இருந்தோம்)
குருசாமி துணைக்கொண்டு அவர் பாதம் நம்பிக்கிட்டு
இருமுடியை சுமந்துக்கிட்டு வந்தோமய்யா
(இருமுடியை சுமந்துக்கிட்டு வந்தோமய்யா)
ஆறுபடை வீடுசென்று கந்தனையே வேண்டிக்கிட்டு
யாத்திரையாக வந்தோமைய்யா
(நாங்க யாத்திரையாக வந்தோமைய்யா)
குருவாயூர் கோவில் முதல் கன்னியாகுமரி வரை
தரிசனமே செய்துகிட்டு வந்தோமய்யா
(நாங்க தரிசனமே செய்துகிட்டு வந்தோமய்யா)
எருமேலி பேட்டை துள்ளி வாவரையே வேண்டிக்கிட்டு
பேரூர் தொட்டில் பொரி போட்டு வந்தோமய்யா
(பேரூர் தொட்டில் பொரி போட்டு வந்தோமய்யா)
காளை கட்டி அஞ்சல் வந்து அளுதாமலை ஏறிக்கிட்டு
கரிமலையின் உச்சியிலே வந்தோமய்யா
(கரிமலையின் உச்சியிலே வந்தோமய்யா)
பம்பையிலே குளித்துவிட்டு பாவங்களைத் தொலைத்துகிட்டு
பம்பையிலே குளித்துவிட்டு பாவங்களைத் தொலைத்துகிட்டு
நீலிமலை ஏறிக்கிட்டு வந்தோமய்யா
நீலிமலை ஏறிக்கிட்டு வந்தோமய்யா
பதினெட்டாம் படிதாண்டி பகவானே உனைவேண்டி
கற்பூர ஜோதிதனைக் கண்டோமய்யா
(கற்பூர ஜோதிதனைக் கண்டோமய்யா)
மகர ஜோதியைக் கண்டு மனமார சரணம் போட்டு
மணிகண்டா உன் மகிமை அறிந்தோமய்யா
சாமியே சரணம், ஐயப்பா சரணம், ஸ்வாமியே சரணம் சரணம் ஐயா….
சாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் ஐயா….
சாமியே ஐயப்போ
சாமியே ஐயப்போ
சாமியே ஐயப்போ
சாமியே ஐயப்போ
சாமியே… சரணம் ஐயப்பா
சரணமப்பா சரணமைய்யா சாமியே பாடல் வரிகள்
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்