Categories: Siththarkal

ஸ்ரீ குதம்பை சித்தர் வரலாறு | Kuthambai Siddhar History

Kuthambai Siddhar

அருள்மிகு ஸ்ரீ குதம்பை சித்தர் (Kuthambai siddhar)

பிறந்த மாதம் : ஆடி
பிறந்த நட்சத்திரம் : விசாகம்
வாழ்ந்த காலம் : 14-15 ம் நூற்றாண்டு
ஜீவ பீடம் : மயிலாடுதுறை
உகந்த நாள் : வெள்ளி கிழமை

அம்மா! உடலைக் கட்டுப்படுத்தி வைக்க வெங்காயம்(பால்காயம்) இருக்கிறது.மிளகு இருக்கிறது. சுக்கு இருக்கிறது. இவற்றைக் கலந்து மருந்தாக்கி உட்கொண்டால், ஒரு பெண்ணின் காயம் (உடல்)நமக்கு எதற்கு தேவைப்படப் போகிறது? பெண் இன்பத்தால் சித்திக்காதோ, என்று கேட்டார் குதம்பைச் சித்தர். குதம்பை என்றால் என்ன? காதிலே அணியும் ஒரு வகை தொங்கட்டான் போன்ற அணிகலன்.இவர் தஞ்சாவூர் பக்கம் பிறந்திருக்க வேண்டும்.பிறந்த ஊர் தெரியவில்லை.ஆனால் இவர் யாதவர் வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் ,பசுக்களை மேய்க்கும் தொழில் செய்து வந்த தம்பதியருக்கு பிறந்தவர் என்பதும் சில நூல்கள் மூலம் தெரிய வருகிறது.இவரது அன்னைக்கு ஆண் குழந்தை மீது மிகுந்த பாசம். ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தை போல அதிக அழகு. அந்த அழகை மிகைப்படுத்த குழந்தையின் காதிலே ஒரு தொங்கட்டான் அணிவித்தாள் அந்த புண்ணியவதி. அது ஆடும் அழகைப் பார்த்து குழந்தையிடம் மனதைப் பறிகொடுப்பாள்.அந்த அணிகல பெயரால் குதம்பை என்றே மகனை அழைக்க ஆரம்பித்துவிட்டாள். அவரது பெயரே அவருக்கு நிலைத்து விட்டது. கண நேரம் கூட குழந்தையைப் பிரியமாட்டாள். அப்படி ஒரு பேரன்பு! மகனுக்கு 16 வயதானது.அதுவரை அம்மா பிள்ளையாகத் தான் இருந்தார் குதம்பையார். ஒரு நாள், ஒரு சித்திரை அவர் சந்தித்தார் .குழந்தாய் குதம்பை! நீ சாதிக்கப் பிறந்தவன் .உனக்கு உன் தாய் திருமணம் முடிக்க இருக்கிறாள். ஆனால் ,அது நடக்காது, காரணம், நீ கடந்த பிறவியில் ஒரு காட்டில் இறை தரிசனம் வேண்டி தவமிருந்து வந்தாய். ஆனால், இறைவனைக் காண முடியாத படி விதி தடுத்து விட்டது. உன் ஆயுளுக்கு குறிக்கப்பட்ட நேரத்தில், நீ எந்த காட்டில் தங்கியிருந்தாயோ, அங்கே ஒரு நாள் பெரும் புயலடித்தது. ஒரு மரத்தின் அடியில் தவநிலையில் இருந்தபடியே நீ உயிர் விட்டாய். விட்ட தவத்தை தொடரவே, நீ பிறந்திருக்கிறாய் .தவம் என்றால் என்ன தெரியுமா?என்றவர், தவத்தின் மேன்மை, யோக சாதனைகள் பற்றி குதம்பையாருக்கு எடுத்துச் சொன்னார்.
குதம்பையார் மிகுந்த பணிவுடன் அவற்றை எல்லாம் கேட்டு,தன்னை ஆசிர்வதித்து, இப்பிறவியிலும் தவம் தொடர ஆசி வேண்டினார்.அந்த சித்தர் அவருக்கு ஆசியளித்து வணங்கி விட்டு தாயாரிடம் சென்றார்.அம்மா அவருக்கு பல இடங்களில் பெண் பார்த்து வைத்திருந்தார்.அப்போது தான் இந்தக் கதையின் துவக்கத்தில் வந்த வரிகளை அம்மாவிடம் குதம்பையார் அம்மாவுக்கு அதிர்ச்சி. என்னடா !சித்தன் போல் பேசுகிறாயே !இல்லறமே துறவத்தை விட மேலானது.உன்னைப் பெற்றதால் நான் மகிழ்ந்தேன். நீ பெரும் குழந்தைகளாலும் நான் மகிழ வேண்டும்.ஒரு தாயின் நியாயமான ஆசை இது.அதை நிறைவேற்றி வை.அம்மாவின் கண்ணீர் குதம்பையாரை வருந்தச் செய்யவில்லை.அவரது எண்ணமெல்லாம் ,முந்தைய பிறவியின் தொடர்ச்சியாக தவம் செய்வதிலேயே இருந்தது.அன்றிரவு அம்மாவும்,அப்பவும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர்.குதம்பையார் கதவைத் திறந்து வெளியே வந்தார்.சந்திர ஒளியில் மிக வேகமா நடந்தார்.மனதின் வேகத்தை விட அதிக வேகம் அது!அந்த வேகத்ததுடன் சென்றவர் காட்டில் போய் தான் நின்றார்.பூராவ் ஜென்மத்தில் அவர் மீது சாய்ந்த மரம் இருந்த பகுதி அது .ஆனால்,குதம்பையாருக்கு அது தெரியவில்லை.அங்கு நின்ற அத்தி மரத்தில் ஒரு பெரிய போனது இருந்தது.அதற்குள் குதம்பையார் அமர்ந்தார்.ஒரு வேளை ,தாய் தந்தை காட்டுக்குள் தேடி வந்து நம் தவத்தைக் கலைத்து அழைத்தது சென்றுவிட்டால் என்னவது என்ற முன்னெச்சரிக்கையில் இப்படி செய்தார்.தவம்….தவம்….தவம்.. எத்தனையோ ஆண்டுகள் உணவில்லை.கண்கள் மூடவில்லை.இறைவனின் சிந்தனையுடன் இருந்தார்.இறைவா!உன்னை நேரில் கண்டாக வேண்டும்.என்னைக் காண வா ! அல்லது உன் இருப்பிடத்திற்கு கூட்டிச் செல்.ஏ பரந்தாமா !எங்கிருக்கிறாய் !கோபாலா வா வா வா ,இது மட்டுமே மனக்கூட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.அப்போது பரந்தாமன் உருவமற்ற நிலையில் அசரீரியாக ஒலித்தான்.

குதம்பை நீ வைகுண்டம் வர வேண்டாம். உன்னால் இந்த உலகத்துக்கு இன்னும் நன்மைகள் நடக்க வேண்டியிருக்கிறது.நீ இப்போது இருப்பது விந்திய மலைப்பகுதியில் , இங்கே பல யானைகள் இருக்கின்றன.இந்த யானைகளுக்கு மந்திரங்களை ஈர்க்கும் சக்தியுண்டு. உனக்கு மழை பெய்வதற்குரிய வருண மந்திரத்தை உபதேசிக்கிறன். இந்த மந்திரத்தை இங்குள்ள யானைகளின் காதில் விழும்படியாக நீ உச்சாடனம் செய்.அவை பிளிறும்போது அந்த ஓசை மந்திரமாக வெளிப்படும்.அப்போது பூமியில் அமுதம் போல் மழை கொட்டும்.அந்த மழையால் உலகம் செழிப்படையும் என்றான்.குதம்பையாருக்கு வருணமந்திரமும் உபதேசிக்கப்பட்டது.குதம்பையாரும் காட்டில் இருந்தபடியே அதை உச்சாடனம் செய்தார்.மழை பொழிந்து காடு செழித்து.யார் வாசியோகம் என்ற கலையைப் பயின்று .ஆழ்ந்து நிலையில் இறைவனை வணங்குகிறரோ ,அவர்களெல்லாம் குதம்பைச் சித்தரை மானசீக குருவாக ஏற்று மழை வேண்டி வணங்கினால் இன்றும் மழை பெய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது.யோக வித்துவான்கள் வாசியோகம் (பிராணாயாமம் போன்றது)பற்றி இளைய தலைமுறைக்கு கற்றுக் கொடுத்து அதன் மூலம் எதிர் காலத்தில் தண்ணீர் கஷ்டமின்று வாழ ஏற்பாடு செய்ய வேண்டும்.இந்த அறிய வரத்தை நமக்கு அருளும் குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையில் சித்தியடைந்தார்.மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் சிவன்சன்னதி சுற்றுப் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி அருகில் குதம்பை சித்தர் ஜீவ சமாதி உள்ளது.இங்கு இவருக்கு தனி சன்னதியும் உள்ளது.மழை வேண்டி இவருக்கு விசேஷ பூஜை செய்தால்,பெய்யெனப் பெய்யும் மழை!

Kuthambai siddhar Mantra in tamil:

சூலம் ஏந்திய சுந்தர மூர்த்தியே

அத்திமரம் அமர்ந்து

ஆயசித்தி அனைத்தும் பெற்ற சத்திய சித்திரே

கும்பிட்ட எமக்கு நம்பிக்கையுடன் நல்லாசி தருவாய் குதம்பை பெருமானே….

காலம் :குதம்பைச்சித்தர் ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார்.இவர் வாழ்ந்த காலம் 1800 ஆண்டுகள் 16 நாள் ஆகும்.

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
 • Recent Posts

  வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits

  Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம் - முருகனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கும் வைகாசி… Read More

  6 days ago

  ஆதி சங்கரர் முழு வாழ்க்கை வரலாறு | Aadhi Sankarar History in Tamil

  ஆதிசங்கரர் பற்றிய முழு வாழ்க்கை வரலாறு | Aadhi Sankarar History in Tamil (சற்று நீண்ட பதிவு பொறுமையாக… Read More

  2 weeks ago

  இல்லாத ஒன்றிற்கு ஆசைப்பட்டால் – கருத்து கதைகள்

  இல்லாத ஒன்றிற்கு ஆசைப்பட்டால்.. பேராசைக்கு முன்னுரை அளித்தால் அதுவே பேரழிவுக்கு காரணமாகும். சிலருக்குத் தேவைக்கு அதிகமாகப் பணம் இருந்தும் மனக்… Read More

  2 weeks ago

  63 நாயன்மார்கள் சுருக்கமான வரலாறு | 63 Nayanmaargal Life story

  63 நாயன்மார்கள் வரலாறு சுருக்கம்... 63 Nayanmaargal Life story 1. திருநீலகண்ட நாயனார்: கூடா நட்பின் விளைவால், மனைவியை… Read More

  2 weeks ago

  நேர்மை கூட ஒரு போதை தான் | Honesty Moral Story

  நேர்மை கூட ஒரு போதை தான் ஒரு வியாபாரி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் ஒன்று வாங்கி வர சந்தைக்குப்… Read More

  3 weeks ago

  சிவபெருமானின் பாதம் பார்க்க வேண்டுமா? | Sivaperuman Patham Story

  சிவபெருமானின் பாதம் பார்க்க வேண்டுமா? மதுரை மீனாட்சி அன்னை உடனுறை சொக்கநாத பெருமான் ஆலய சன்னிதியில் உள்ள வெள்ளியம் பல… Read More

  3 weeks ago