Events

Chandra Grahan | chandra Grahan dates | சந்திர கிரகணம்

Chandra Grahan

சந்திர கிரகணம்

இன்று சந்திர கிரகணம் 7/8/2017

⭐ ஹேவிளம்பி ஆண்டு ஆடி மாதம் 22-ம் தேதி திங்கட்கிழமை (7-8-2017) சந்திர கிரகணம் இரவு 10.51 மணிக்கு ஆரம்பித்து, இரவு 12.49 மணிக்கு விடுகிறது.

Chandra Grahan timings⭐ சூரியன் பூமி சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இதில் சந்திரன் மறைக்கப்படும் போது சந்திரகிரகணமும், சூரியன் மறைக்கப்படும்போது சூரியகிரகணமும் நிகழ்கிறது.

⭐ பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும், அமாவசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும்.

⭐ சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும்.

⭐ சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், அரைகுறையாக⭐ கிரகணம் எல்லா நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் தென்படாது. மாறாக வெவ்வேறு நேரங்களிலேயே தென்படும். கிரகணத்தின் போது புவி மேற்பரப்பில் வெளிச்சம் குறைவதை காணலாம்.

சந்திர கிரகணம் பற்றி புராணக் கதை :

⭐ சந்திரன் அவர் செய்த பாவ காரணத்தால் அவருக்கு ராகு தோஷம் வந்துவிடுகிறது. இதனால் ராகு (பாம்பு) அவரை பிடித்து அவரை முடமாக்க நினைக்கிறார்.

⭐ ஆனால் சந்திரன், பகவானை பிரார்த்தித்து, ஸ்லோகங்கள் சொல்லவும், இறைவன் சந்திரனுக்கு அருள, சந்திரனுக்கு இருந்த ராகுதோஷம் நீங்குகிறது.

⭐ இதனால் கிரகணத்தின் போது பக்தியுடன் இறைவனை பிரார்த்தித்து வந்தால் அவரவர் செய்த பாவங்கள் தீரும். இறைவன் அருளும் கிடைக்கும்.

⭐ கிரகண காலத்தில் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது. இது பீடை காலம் என புராணங்கள் கூறுகிறது. ஆனால் சந்திரனின் கதிர்களின் கதிர்வீச்சில் ஏற்படும் மாற்றம் கர்ப்பிணி பெண்களை பாதிக்கும் என்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

⭐ கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்த வித உணவும் உட்கொள்ள கூடாது.

⭐ கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது.

⭐ ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.

⭐ செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும்.

⭐ கிரகணத்தின் போது நவகிரக துதியை பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திர கிரகணத்துக்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.

⭐ கிரகண விமோசன காலத்தில் அதாவது கிரகணம் முழுதும் முடிந்ததும் ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.

⭐ ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

⭐ கிரகணம் முடிந்ததும், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.

⭐ சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனை துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். கிரகணம் முடிந்ததும், ஆலய வழிபாடு செய்வது இன்னும் சிறப்புகளை கொடுக்கும்.

நன்றி

🔯சுவாமி காசிராஜன்🔯

 

இன்று சந்திர கிரகணம் : பரிகாரம் யாருக்கு?

ஆடி பவுர்ணமியான இன்று, சந்திரகிரகணம் நிகழ்வதையொட்டி பரிகாரம் நட்சத்திரத்தினர் குறித்த விபரம் பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ளது. மகர ராசியில் திருவோண நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் கேது கிரகத்தால் இரவு 10:51 – 12:49 மணி வரை சந்திர கிரகணம் உண்டாகிறது. ரோகிணி, அஸ்தம், உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரம், திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் கோயில் வழிபாடு செய்து உளுந்து தானம் செய்வது நன்மையளிக்கும். கர்ப்பிணிகள் இரவு 9:00 – 3:00 மணி வரை நிலாவை பார்ப்பது கூடாது. அதன் பின் அதிகாலையில் நீராடி விட்டுசந்திர தரிசனம் செய்யலாம்.

 

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha lyrics in tamil

    odi odi utkalantha lyrics in tamil சித்தர் சிவவாக்கியர் பாடிய ஓடி ஓடி உட்கலந்த (Odi Odi Utkalantha)… Read More

    2 days ago

    Today rasi palan 06/05/2024 in tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் திங்கட்கிழமை சித்திரை – 23

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *சித்திரை - 23* *மே -… Read More

    18 hours ago

    Guru Peyarchi Palangal 2024-25 Parigarangal | குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-2025

    Guru Peyarchi Palangal 2024-25 Parigarangal குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - 2025 (Guru Peyarchi Palangal 2024-25)… Read More

    5 days ago

    Mesha rasi Guru peyarchi palangal 2024-25 | மேஷம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

    Mesha rasi guru peyarchi palangal 2024-25 குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-25 Mesha rasi guru peyarchi palangal 2024-25… Read More

    5 days ago

    Rishaba rasi Guru peyarchi palangal 2024-25 | ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

    Rishaba Rasi Guru Peyarchi Palangal 2024-25 ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் Rishaba Rasi Guru Peyarchi Palangal… Read More

    5 days ago

    Mithuna rasi Guru peyarchi palangal 2024-25 | மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

    Mithuna rasi Guru peyarchi palangal 2024-25 மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Mithuna rasi guru peyarchi palangal… Read More

    5 days ago