பொய்யின்றி மெய்யோடு ( பாடல் )
2 ( பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம் ) 2
2 ( ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா )2

அவனை நாடு அவன் புகழ் பாடு
புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன்
உன்னை புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன்
இருப்பது காடு வணங்குது நாடு
அவனைக் காண தேவை பண்பாடு

2 ( ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா )2

பூஜைகள் போடு தூய அன்போடு
பெயரோடு வாழ வைப்பான் ஐயப்பன்
நல்ல பெயரோடு வாழ வைப்பான் ஐயப்பன்
அனைவரும் வாருங்கள் ஐயனை நாடுங்கள்
2 ( அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழ வைப்பான் )2
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா

2 ( பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம் ) 2
2 (ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா )2

2 என்னும் வாக்கியங்களை இரண்டு முறை பாடவும்…

Poi Indri By K J Yesudass one of ayyappan video song

Leave a Comment