Events

Rishaba rasi palangal Ragu ketu peyarchi 2019 | ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

Rishaba rasi Ragu ketu peyarchi 2019

ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் ரிஷபம்:  (13.02.2019 முதல் 31.08.2020 வரை)

ரிஷப ராசி வாசகர்களே

எறும்பு போல் அயராது உழைத்து, தேனீயைப் போல் சேமிக்கும் இயல்பு உடையவர்களே! உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகு தரப்போகும் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்து கொண்டு வாழ்வில் புதிய திருப்பங்களையும் மன தைரியத்தையும் பெரிய மனிதர்களின் நட்பையும் கொடுத்துவந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் வந்து அமர்கிறார். வருமானம் ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் அதற்குத் தகுந்தாற்போல் கொஞ்சம் செலவுகளும் இருக்கத்தான் செய்யும். தடைபட்டு பாதியிலேயே நின்றுபோன காரியங்கள் இப்போது கைகூடும். குடும்பத்தில் சின்னப் பிரச்சினைகள் இருந்தாலும் ஒற்றுமை பாதிக்காது.

உடன்பிறந்தவர்களுடன் மனக்கசப்புவிலகும். அவர்களுடனான பாசமும் அதிகரிக்கும். சகோதரியின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

குருவின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.2.2019 முதல் 18.8.2019 வரை ராகு பகவான் செல்வதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். தடைப்பட்ட கல்யாணம் கூடி வரும். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம்.

ராகு பகவான் தன் சுய நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் 19.8.2019 முதல் 26.4.2020 வரை செல்வதால் வி.ஐ.பி.க்கள் அறிமுகமாவார்கள். புது வேலை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். மாதக்கணக்கில் வாய்தா வாங்கித் தள்ளிப்போன வழக்கில் சாதகமாகத் தீர்ப்பு வரும். சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். புது வாகனம் வாங்குவீர்கள்.

செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 27.4.2020 முதல் 31.8.2020 வரை ராகு பகவான் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் உண்டு. மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அடிவயிற்றில் வலி வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். வீடு, மனை வாங்குவீர்கள். சகோதரர் உதவுவார். சகோதரிக்குத் திருமணம் முடியும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்து தந்தைக்கு உடல்நலக் குறைவையும் பணப்பற்றாக்குறையையும் தந்த கேது உங்களின் ராசிக்கு எட்டில் வந்தமர்கிறார். கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் மனநிம்மதியுண்டு. வெளிவட்டாரத்தில் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிப்பது நல்லது. மனைவியிடம்விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். முன் கோபம் அதிகமாகும். இரவு நேரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் 13.2.2019 முதல் 17.4.2019 வரை கேது பகவான் செல்வதால் உஷ்ணத்தால் வேனல் கட்டி, கண் எரிச்சல் வந்து போகும். வேலைச்சுமை அதிகரிக்கும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். சிலர் கூடுதல் அறை கட்டுவீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 18.4.2019 முதல் 22.12.2019 வரை கேது செல்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கௌரவப் பதவியும் பொறுப்பும் தேடி வரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். அயல்நாடு சென்று வருவீர்கள்.

கேது பகவான் தன் சுய நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் 23.12.2019 முதல் 31.8.2020 வரை செல்வதால்சுற்றியிருப்பவர்களின் பலம், பலவீனம் அறிந்து செயல்படுங்கள்.

இந்த ராகு-கேது மாற்றத்தால் உலக அனுபவங்களைப் பெறுவதுடன், உங்கள் பலம் பலவீனத்தை நீங்களே உணரும் சக்தி உண்டாகும்.

அரசியலில் இருப்பவர்கள் அனைத்து விடயங்களிலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வருடத்தின் முற்பகுதியில் விவசாயிகள் சற்று கஷ்டப்பட்டாலும், ஆண்டின் இறுதியில் விவசாயத்தில் நல்ல லாபங்கள் பெற்று வாங்கிய விவசாயத்தில் அனைத்தையும் அடைப்பார்கள். கலைஞர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்க பெற்றாலும் அவ்வப்போது, வீண் விரயங்களை சந்திக்கும் நிலை ஏற்படும். திருமண வயதை அடைந்த பெண்களுக்கு நல்ல வரன் அமையப்பெற்று திருமணம் நடக்கும். மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் சாதனைகள் செய்வார்கள்.

keyword

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனை ராகுகாலத்தில் வழிபடுவதுடன் பைரவ சுவரூபமாகிய நாய்க்கு உணவு கொடுக்க வேண்டும்.

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

Share
ஆன்மிகம்

Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    அள்ளிக் கொடுப்பதில் பாடல் வரிகள்| Alli koduppathil song lyrics tamil

    அள்ளிக் கொடுப்பதில் பாடல் வரிகள்| Alli koduppathil song lyrics tamil அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன்… Read More

    1 month ago

    பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்| Pachai Mayil Vahananae Lyrics Tamil

    பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்| Pachai Mayil Vahananae Lyrics Tamil பச்சை மயில் வாகனனே – சிவ… Read More

    1 day ago

    மஞ்ச பொடவ கட்டி பாடல் வரிகள் | Manja Podava Katti song lyrics tamil

    மஞ்ச பொடவ கட்டி பாடல் வரிகள் | Manja Podava Katti song lyrics tamil மண்ணளந்த காளி அவள்… Read More

    1 month ago

    மலையனூரு அங்காளியே பாடல் வரிகள் | Malayanooru Angaliyae amman song lyrics tamil

    மலையனூரு அங்காளியே  பாடல் வரிகள் | Malayanooru Angaliyae song lyrics in tamil மலையனூரு அங்காளியே பாடல் வரிகள்… Read More

    1 month ago

    தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் | Onnam padi eduthu song lyrics in tamil

    தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் - Onnam Padi Eduthu Song lyrics தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் அல்லது… Read More

    1 month ago

    திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா | Karthigai deepam tiruvannamalai

    திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா! Karthigai deepam tiruvannamalai   🏕✅ தினமும் பக்தர்களால் கூட்டம் நிரம்பி வழியும் மலை திருவண்ணாமலை.… Read More

    1 month ago