Events

Thulam rasi palangal Ragu ketu peyarchi 2019 | ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

துலாம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை) Thulam rasi palangal Ragu ketu peyarchi 2019

துலாம் ராசி வாசகர்களே

ஓடோடிவந்து யாருக்கும் உதவும் குணத்தை வாழ்வின் ஒரு அம்சமாகக் கடைப்பிடிப்பவர்களே! உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகு தரப்போகும் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்குப் பத்தாவது வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை ஒரு வேலையையும் செய்ய விடாமல் முடக்கிப் போட்ட ராகு பகவான் இப்போது ஒன்பதாம் வீட்டுக்கு வந்தமர்வதால் சோம்பல் நீங்கும். முடியாமல் கிடப்பில் கிடந்த பல காரியங்களை இனி முழுமூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள். ஒளிந்து மறைந்து வாழ்ந்த வாழ்க்கை இனிப் பிரகாசிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். வீட்டில் ஒரு நல்லது கூட நடக்காமல் தடைபட்டுக் கொண்டேயிருந்ததே, இனி சுபகாரியங்களால் வீடு களைகட்டும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழி காண்பீர்கள்.

கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். வசதி, வாய்ப்புகள் நிறைய இருந்தும் வாரிசுகள் இல்லாமல் தவித்தீர்களே! இனி கண்ணுக்கு அழகான வாரிசு உண்டாகும். ஆனால், ராகு ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் தந்தையாருடன் கருத்து மோதல் வர வாய்ப்பிருக்கிறது. கனிவான பேச்சால் பிரச்சினைகளைத் தவிர்க்கப் பாருங்கள். பூர்வீகச் சொத்தை விற்று வேறிடத்தில் இடம் வாங்குவீர்கள். உறவினர்கள் மதிக்கும்படி உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.

ஆடை, ஆபரணங்கள் சேரும். வி.ஐ.பி.க்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் துணையுடன் முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

குருவின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.2.2019 முதல் 18.8.2019 வரை ராகு பகவான் செல்வதால் தடைகள் நீங்கும். ஓரளவு பணமும் வரும். அவ்வப்போது ஏமாற்றங்கள், இழப்புகளைச் சந்திக்க வேண்டியது வரும். வழக்கை சுமுகமாக முடிக்க முயல்வீர்கள். சிலர் வீடு மாற வேண்டியது வரும். உறவினர்களின், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை எடுத்துச் செய்வீர்கள். இளைய சகோதரர் வகையில் அலைச்சல் இருக்கும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனைக் குறைந்த வட்டிக்கு மாற்றுவீர்கள்.

ராகு பகவான் தன் சுய நட்சத்திரமான திருவாதிரையில் 19.8.2019 முதல் 26.4.2020 வரை செல்வதால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு இக்காலகட்டத்தில் பிரிவு, விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. புது முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. மகான்கள், சித்தர்களின் ஜீவசமாதிக்குச் சென்று வருவது நல்லது. வாகனம் வாங்குவீர்கள். பணவரவும் உண்டு. திருமணம் கூடி வரும்.

செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 27.4.2020 முதல் 31.8.2020 வரை ராகு பகவான் செல்வதால் எதிர்பார்த்த பணம் வரும். சொத்துப் பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் புது வழி கிடைக்கும். மனைவி வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. விலையுயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். வீடு கட்டும் முயற்சி பலிதாகும். வெளிமாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில் போட்டிகள் தளரும். தொழில் நுணுக்கங்களை அறிந்து பேசுவீர்கள். புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். அனுபவமிகுந்த வேலையாட்கள் சேருவார்கள்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்கு நான்காவது வீட்டில் அமர்ந்துகொண்டு காரியத்தடை, மன உளைச்சல், தாயாருக்கு மருத்துவச் செலவு என உங்களைப் பலவகையிலும் அவஸ்தைப்படுத்திய கேது பகவான் இப்போது மூன்றாவது வீட்டிலே வந்தமர்கிறார். குடும்பத்தில் சந்தோஷம் குடி கொள்ளும். சங்கடங்கள் தீரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அடிக்கடி சந்தேகப்பட்டுக் கொண்டீர்களே! இனி அன்னியோன்யம் அதிகரிக்கும்.

சோம்பலாக இருந்த பிள்ளைகள் இனிச் சுறுசுறுப்படைவார்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். புலம்பிக்கொண்டிருந்த தாயார் இனி, சிரிப்பார். அவருடன் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கும். ஆனால், இளைய சகோதரர் வகையில் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வந்து மறையும். கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் 13.2.2019 முதல் 17.4.2019 வரை கேது பகவான் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஆனால், முன்கோபத்தால் புதுப் பிரச்சினைகள் உருவாகும். மூத்த சகோதரர் அனுசரணையாக இருப்பார். புது முதலீடுகள் வேண்டாம். மற்றவர்களை நம்பிப் பெரிய முடிவுகளும் எடுக்க வேண்டாம்.

சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 18.4.2019 முதல் 22.12.2019 வரை கேது செல்வதால் பணத்தட்டுப்பாடு குறையும். புதிய பாதையில் சென்று வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வி.ஐ.பி.க்கள் உதவுவார்கள். வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். என்றாலும் ஓய்வெடுக்க முடியாதபடி அலைச்சலும் அசதியும் சோர்வும் வந்து நீங்கும்.

கேது பகவான் தன் சுய நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் 23.12.2019 முதல் 31.8.2020 வரை செல்வதால் சின்ன விபத்துகள் வந்து நீங்கும். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். மனைவி வழியில் செலவுகள் அதிகரிக்கும். உறக்கமில்லாமல் போகும்.

பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்கள், கட்சி தலைவர்களால் கௌரவிக்கப்படுவார்கள். விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி, வங்கி கடன் உதவி போன்றவை தகுந்த சமயங்களில் கிடைக்கும். விளைச்சல் சிறப்பாக இருக்கும். மிகுந்த பொருள், புகழ் சம்பாதிக்கும் வாய்ப்புகள் கலைஞர்களுக்கு கிடைக்கும். பெண்களுக்கு தாராள பொருள்வரவும், சுப நிகழ்வுகளில் கலந்து கொண்டும் மகிழும் வாய்ப்புகள் ஏற்படும். கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் சாதனைகள் செய்வர்.

இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியில் ராகுவால் முட்டுக் கட்டைகள் இருந்தாலும், கேதுவால் எதையும் சாதிக்கும் வல்லமையுண்டாகும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று மாரியம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபடுவதுடன் புறாவுக்குத் தானியம் கொடுங்கள்.

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

Share
ஆன்மிகம்

Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    Today rasi palan 25/03/2025 in tamil | இன்றைய ராசிபலன் செவ்வாய்க்கிழமை பங்குனி – 11

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _* _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *பங்குனி - 11* *மார்ச்… Read More

    2 hours ago

    கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் | Kandha Sasti Kavasam Tamil Lyrics

    Kandha Sasti Kavasam Tamil Lyrics கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் (Kandha sasti kavasam tamil lyrics)… Read More

    4 days ago

    மருவத்தூர் ஓம் சக்தி பாடல் வரிகள் | Maruvathoor om sakthi song lyrics tamil

    Maruvathoor om sakthi song lyrics tamil மருவத்தூர் ஓம் சக்தி பாடல் வரிகள் | Maruvathur om sakthi… Read More

    1 week ago

    Sani peyarchi palangal 2025-2027 | சனிப்பெயர்ச்சி 2025-2027 பலன்கள்

    Sani peyarchi palangal 2025-2027 சனிப்பெயர்ச்சி 2025-2027 பலன்கள் (Sani Peyarchi Palangal 2025) இந்த மாற்ற நிலை 29.03.2025… Read More

    2 weeks ago

    பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க காரடையான் நோன்பு 14/3/2025 | karadaiyan nombu 2025

    காரடையான் நோன்பு -விளக்கம்-விரத முறை *காரடையான் நோன்பு* 🙏🙏 *காரடையான் நோன்பு* *சிறப்பு பதிவு* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *14.03.2025* *வெள்ளிக் கிழமை*… Read More

    2 weeks ago

    Mesham sani peyarchi palangal 2025-27 | மேஷம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்

    Mesham sani peyarchi palangal 2025-27 மேஷராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் (Mesham sani peyarchi) மேஷ ராசி (… Read More

    2 weeks ago