Events

Viruchigam rasi palangal Ragu ketu peyarchi 2019 | ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

விருச்சிகம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (13.02.2019 முதல் 31.08.2020 வரை) Viruchigam rasi Ragu ketu peyarchi 2019

விருச்சிக ராசி வாசகர்களே

இஷ்டப்பட்டு வாழும் வாழ்க்கையைப் பெரிதென நினைக்கும் மனதுடையவர்களே! உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகு தரப்போகும் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்துகொண்டு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாதபடி செய்து கொண்டிருந்ததுடன், வருமானத்துக்கு வழியே இல்லாமல் தடுமாற வைத்த ராகு பகவான் இப்போது எட்டாம் வீட்டில் சென்று மறைகிறார். ராகு எட்டில் மறைவதால் அல்லல்பட்ட உங்கள் மனம் இனி அமைதியடையும். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை இனி, பரபரப்பாக முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

தந்தையாரின் உடல் நிலை சீராகும். தந்தைவழிச் சொத்தில் இருந்த சிக்கல்களுக்கு மாற்றுவழி கிடைக்கும். ஆனால், எதிர்பாராத வகையில் செலவு மற்றும் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உறவினர்கள், நண்பர்களிடம் குடும்ப விஷயங்களைப் பேச வேண்டாம். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறையாக நடந்துகொள்ளுங்கள்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

குருவின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.2.2019 முதல் 18.8.2019 வரை ராகு பகவான் செல்வதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். புதிதாக ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல வேலை அமையும். ஷேர் மூலம் பணம் வரும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள்.

ராகு பகவான் தன் சுய நட்சத்திரமான திருவாதிரையில் 19.8.2019 முதல் 26.4.2020 வரை செல்வதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பூர்வீகச் சொத்தைச் சீர்திருத்தம் செய்வீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பெரிய பதவிகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள்.

செவ்வாயின் மிருகசிரீஷம் நட்சத்திரத்தில் 27.4.2020 முதல் 31.8.2020 வரை ராகு பகவான் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் விலகும். திடீர் யோகம் உண்டாகும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். சகோதரர்கள் மனம்விட்டுப் பேசுவார்கள். கைமாற்றாகவும் கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள்.

வியாபாரத்தில் வர வேண்டிய பாக்கி களை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். மற்றவர்களை நம்பிப் பெரிய முதலீடுகளைப் போடாதீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடையே நிலவிவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி யின் அடக்கு முறை மாறும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்ந்து கொண்டு மன தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் கொடுத்துவந்த கேது பகவான் இப்போது ராசிக்கு இரண்டாவது வீட்டில் நுழைகிறார். சாதுரியமான பேச்சால் சாதிக்கப் பாருங்கள். ஆனால், சில நேரங்களில் வீண் வம்பில் சிக்கிக்கொள்வீர்கள்.

பல்வலி, பார்வைக்கோளாறு வந்து நீங்கும். சேமிப்புகள் கரையும் அளவுக்கு அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். மகனின் கல்யாணப் பேச்சு வார்த்தையிலிருந்த சிக்கல்கள் நீங்கி திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் 13.2.2019 முதல் 17.4.2019 வரை கேது பகவான் செல்வதால் அரைகுறையாக நின்ற கட்டிடப் பணியைத் தொடங்குவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி, சம்பளம் உயரும். நாடாள்பவர்கள் உதவுவார்கள். அதிகாரப் பதவிக்குத் தேர்தெடுக்கப் படுவீர்கள். வியாபாரத்தில் புதிய கிளைகளைத் தொடங்குவீர்கள்.

சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 18.4.2019 முதல் 22.12.2019 வரை கேது செல்வதால் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். சிலர் நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உல்லாசப் பயணங்கள் சென்று வருவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள்.

கேது பகவான் தன் சுய நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் 23.12.2019 முதல் 31.8.2020 வரை செல்வதால் எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய சிக்கல்களைத் தீர்ப்பீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். ஆன்மிகவாதிகளைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். வேற்றுமொழிக்காரர்கள் உதவுவார்கள்.

வருடத்தின் முற்பகுதியில் விவசாயிகளுக்கு பொருளாதார நிலையில் சில கஷ்டங்கள் ஏற்பட்டாலும் வருடத்தின் இறுதியில் சிறந்த பலன்களை பெற முடியும். வெளிநாடுகளுக்கு சென்று பொருள், புகழ் ஈட்டும் வாய்ப்புகள் கலைஞர்களுக்கு கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பாரா உதவிகள் தக்க சமயங்களில் கிடைக்கும். கல்வியில் மந்த நிலை ஏற்படும் சூழல் இருப்பதால் கல்வி பயிலும் மாணவர்கள் சற்று கூடுதலான முயற்சிகளில் ஈடுபடுவது சிறந்த பலன்களை தரும்.

இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி உங்கள் ஆழ்மனத்தில் இருந்த திறமைகளை வெளிக் கொணர்வதுடன் ஓரளவு வசதியையும் தருவதாக அமையும்.

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    Girivalam benefits | திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள் | கிரிவலம் வரலாறு

    பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More

    5 days ago

    வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits

    வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம்… Read More

    6 days ago

    செல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி | Chitra Pournami

    செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி::°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா… Read More

    1 month ago

    ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல்

    🌻🙏ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல் (4/5/23, வியாழக் கிழமை) 🌻🕉️ 🍒ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🌹 ஸ்ரீ லக்ஷ்மி… Read More

    1 month ago

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya Tritiya benefits

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (10) நாள் 23.4.2023 ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை… Read More

    2 months ago