Arthamulla Aanmeegam

உன்னை வெல்லும் வழி அது என்ன? 301 ways to win yourself

உன்னை வெல்லும் வழி அது என்ன? 301 Ways to win yourself!

உன்னை வெல்லும் வழி அது என்ன? How to win yourself in this world என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

1. உன்னை அறிய வேண்டின்
குரு தேடு

2. பிரம்மம் அறிய வேண்டின்
குரு தேடு

3. பிரம்மம் உணர வேண்டின்
குரு சரண் அடை

4. உலகில் ஈடு இணை அற்றது
இறை நிலையே

5. எப்பொருளாலும் வாங்க முடியாதது
இறை நிலையே

6. இறைவனை பிடிக்க வேண்டின்
குருவைப் பிடி. குருவே துணை

7. குரு மன்னிக்கா விடில்
சிவம் மன்னிக்காது

8. குரு மன்னிக்காததை
சிவம் மன்னிக்காது

9. அன்பில்லா இடத்தில் சிவத்தை அறிய முடியாது
அன்பில்லா இடம் நரகம்

10. அன்பைக் கொடு
சிவத்தைப் பெறு

11. அன்பும் அமைதியுமே
சிவனின் இருப்பிடம்

12. விதையில் விருட்சம் உணர்வாயின்
அன்பில் சிவத்தைக் காண்பாய்

13. திரிக்கால யோகி சிவத்திற்கு
உன்னை மட்டுமே கொடு

14. அன்பில்லா எந்த பொருளும்
சிவத்திடம் செல்லுபடி ஆகாது

15. சிவத்துக்கு நிகர் சிவமே
அருளுக்கு நிகர் அருளே

16. பிரம்மத்தைவிட உயர்ந்த பொருள்
உலகில் இல்லை

17. உன்னில் நிறைந்த பொருள் சிவம்
அது ஜீவனுடன் கலந்துள்ளது

18. எதையும் துன்பப்படுத்தாதே
சிவத்துக்கு வலிக்கும்

19. யாரையும் துன்பப்படுத்தாதே
நீ துன்பமே இல்லாது வாழ

20. நித்தம் பிறரை கணம் செய்
நீ கணப்படுத்தப் படுவாய்

21. குருப் பார்வையில் நீ விலகினால்
சனிப் பார்வை கிட்டும்

22. இறைவனை அடைய
இறைவன் மட்டுமே உதவ முடியும்

23. இறைவனை அடைய இறைவன்
நாமம் மட்டுமே உதவும்

24. ஜபமும் தபமும் ஒன்று சேரலாம்
பாலும் தேனும் போல

25. இறை நாமத்தை ரசிப்பவனே
இறைவனை ருசிக்க முடியும்

26. இறைவனின் ஓர் நாமத்தையே தேர்வு செய்
அதில் லயப்பட்டு கரைந்து விடு

27. ஒரு நல்ல மனிதனுக்கு உற்ற துணை
இறைவனைத் தவிர யார் இருக்க முடியும்

28. வாழ்நாள் முழுவதும் இறைவன்
கரம் பிடித்தே செல்

29. மன விடுதலை இறைவனால் மட்டும் தான்
தர முடியும்

30. எண்ண விடுதலை இறை நாமத்தால்
மட்டுமே முடியும்

31. உணர்த்தும் பொருள் இறைவன்
வெளியிளேயே

32. உணரும் பொருள் இறைவன்
உன்னுள்ளேயே

33. ஆன்ம சொரூபத்தை அடைய
நீ ஆத்மாவில் தியானி

34. ஆன்ம தியானத்தில் நீ
அனைத்துமாய் இருப்பதை உணர்வாய்

35. ஆன்மா நேசிப்பவனை
அனைத்து ஜீவனும் நேசிக்கும்

36. அகண்ட சொரூபம் நம்
அகத்துள்ளேயே உள்ளது

37. அதுவாகியது எல்லாம், ஆண்டவனால்
ஆனதுவே ஆகும்

38. சிந்தித்தால் மட்டுமே சிவம்
39. சிவன் அன்றி ஓர் செயலும்
இயங்குவது இல்லை

40. சிவனே என்று இருந்து இயக்குபவன்
சிவன் ஒருவனே

41. உன்னை ஜீவனாகப் பார்க்காதே
சிவனாகப் பார், சிவனாகிப் போக

42. உள்ளம் உருக அழைத்துக் கொண்டே இரு. ஒருவனையே
தன்னால் வரும் சிவம்

43. இறைவன் ஆனாலும் அன்பாகி அழை
பண்பாகி வருவான் சிவம்

44. சித்தத்தை சிவன்பால் வை
சிவனாகிப் போக

45. இறைவனைக் கட்ட யாராலும் முடியாது
அது அருவ பேர் இயக்கம்

46. சிவம் நெருப்பு. நெருப்பை யாராலும்
கட்டவோ கட்டிப்போடவோ முடியாது

47. இறைவனானாலும் ஓர் சொல்லுக்கு
கட்டுண்டு நிற்க்கும்

48. அன்பை பண்பால் கட்டு
சிவம் அமைதியாய் கட்டுண்டு நிற்க்கும்

49. குணம் மாறாமல் சிவம் கிட்டாது
50. குணம் மாறிவிட்டால் ஜீவன்
சிவனாகத் தெரியும்

51. மாயையின் உபதேசத்துக்கு
மயங்காதே

52. மந்திரத்திலும் மாயை உண்டு
மெய்யானவற்றிக்கு செல்லாது

53. ஒன்றை அறிந்து உறவாடு
ஓசை உரசிப் போகும் உன்னுள்

54. சிவனை அறிந்தபின் நாம்
எவரையும் அறிய வேண்டுவதில்லை

55. சிவனை அறிந்தபின் மனம்
எவரையும் தொழுதிலார்

56. சுத்த சிவம் எழுவது
குருவுக்குள் மட்டுமே

57. மாயை விலக சிவம் தெரியும்
அது குருவால் மட்டுமே

58. அழித்தலின் நாயகன் சிவம். ஆனால்
கர்மத்தை ஒழிப்பவன் குருவாவான்

59. சிவப் பொருளை அருந்துவீராக
அது எண்ண ஒன்னா சோம பானம்

60. சிவரசத்தை பருகிட வேண்டின்
உன்னுள் ஒடுங்கியே இரு

61. உயர்வான எண்ணத்தில் மட்டுமே
சிவம் சிம்மாசனம் இட்டு இருக்கும்

62. சிவத்தில் ஜீவன் உருக
சிவ ரசம் கிட்டும்

63. உருகி, உருகி அழைக்க
சிவம் பெறுகி பெறுகி நிற்பான்

64. சிவ குணத்தை அடைவாயாக
அதுவே தபம்

65. காண்பது எல்லாம் சிவமாக காண்
ஆனால் சிவனை மட்டுமே வணங்கு

66. சிவனே மெய் என்று அறிந்த பின்
வேறு ஒருவரையும் திரும்பிப் பார்காதே

67. சிவன் ஒருவனே இறைவன்
மற்றவர்கள் சிவனின் பணியாளர்கள்

68. சிவத்தை நாடுபவருக்கு
வேறு எதிலும் நாட்டம் இருக்காது

69. சிவத்தை அடைந்தவன் முக்காலமும்
கைலாயத்தில் வசிக்கிறான்

70. சிவனே என்று இரு. சிவனாகி இரு
சிவத்தைப் பிடிக்க

71. எளிமை. எளிமை எதுவோ
அதில் சிவம் குடி கொள்ளு

72. எதையும் எதிர்பார்க்காதது சிவம்
நீ சிவத்தின் அன்பை எதிர்பார்த்து இரு

73. சிவ மருந்து யோகியரின்
அரு விருந்தாகும்

74. உன்னை சிவமாக்க முயலு
பிறரை எதிர்ப்பார்காதே

75. உன்னை அறிந்தது சிவம்
உன்னை கொடு காத்திரு

76. சிவத்தின் அன்பை பெறுவது தான்
பல பல பிரபஞ்ச சித்தாகும்

77. உன்னை விட உயர்வானப் பொருள்
இறைக்குத் தர ஏதும் இல்லை

78. தன்னை தருவது தான்
தபம் ஆகும்

79. உடலையும், உயிரையும் இறைவனுக்கு தா
சிவத்தை நினைப்பதுவே தபம்

80. தன்னை மறப்பது தபம் அல்ல
சிவத்தை நினைப்பதுவே தபம்

81. யோகிக்கு தங்கம் தகரம் வேறு இல்லை
உலகப் பொருள் தபத்துக்கு செல்லாது

82. சிவத்திற்கு ஒப்பான தெய்வம் இல்லை
வேறு ஒன்றோடும் ஒப்பிட்டுப் பார்க்காதே

83. மதம், மொழி, இனம் கடந்து
நிற்பது சிவம் மட்டுமே

84. உலகமே போற்றுதலுக்குரியது
சிவம் மட்டுமே

85. சிவத்தின் குணம் அழகு – இதில்
மயங்காதவர் உலகில் யாரும் இல்லை

86. உண்மையின் பொருள் அறிந்தவர்
சிவத்தை அறிவர். மெய்யே சிவம்

87. சத்தியம். நித்திய சொரூப சிவம்
88. பிறக்காதவரும். நம் பிறவி அறுப்பவரும் – சிவம்
89. சிவனை தேடுபவர்க்கு சிவத்தை தவிர
வேறு எதுவும் கிட்டாது

90. நல்லவை அனைத்தும் சிவம் ஆகும்
91. உள்ளத்தால் சிவனை உருக்கு
சிவன் ஜீவனாகட்டும்

92. அழைக்கும் முறையை அறி
அழைத்த குரலுக்கு செவி சாய்ப்பது சிவம்

93. எதை கேட்டாலும் தரும் சிவம்
நீ சிவத்தையே கேள்

94. சிவ சிவ என்று சொல்லியே இரு
பாவ கர்மம் விலகியே போகும்

95. உன்னையும் உலகையும் காப்பது சிவம்
அழைத்தவுடன் உருவம் எடுப்பதும் சிவம்

96. அருவம் ஆனாலும் உருவம் ஆனாலும் சிவம்
அழைத்தவுடன் உருவம் எடுப்பதும் சிவம்

97. சிவத்தை உணர்ந்து அழைப்பவர்களுக்கு
எங்கும் இருந்து சிவம் உதவும்

98. உலக நாட்டம் உள்ளவர்கள்
சிவமாயை மட்டும் அடைவார்கள்

99. சிவத்தை அடைய பர வைராக்கியம்
வேண்டும். மனத்திற்கு

100. அருளிலும் மாயை உண்டு
அது படோபகார சன்னியாசம்

101. எந்த தெய்வத்திற்கும் மயங்காதே
சிவத்தில் மதி மயங்கியே இரு

102. பூட்டை எப்படி வேண்டுமானாலும் திறக்கலாம்
சாவி கொண்டு திறப்பது குருவே

103. இறைவனை குருவில் காண்பவன்
இறைவனை உணர்ந்து, அறிந்து அடைந்து விடுவான்

104. இதய குகையே உயிரின் இருப்பிடம்
அவ்விடத்தில் இறை நாமத்தை புகு

105. சூட்சும நாடி இதயக்குகை அடியிலேயே
ஒடுங்கி உள்ளது

106. சூட்சும நாடியில் இறைவனை மட்டும்
நாளங்கள் உள்ளது

107. இறை நாமங்கள் இடம் அறிந்து
இறைகிதம் மீட்டு. புற உலகு ஒடுங்கும்

108. தபம் தன்னுள்ளே என்பது மெய்
மெய்யை மெய்யால் இயக்கு

109. எழுத்தறிவால் ஆன்மா அறிய முடியாது
இறை உணர்வோடு அறிவதே ஆகும்

110. மனித உணர்வு வேறு
இறை உணர்வு வேறு

111. மனித குணம் மாறி தெய்வ குணம் வந்தால்
இறை உணர்வை அடைவாய்

112. யார் இறைஉணர்வை அறிந்து
அதுவாக மாறுகிறானோ – அவனே தெய்வம்

113. தெய்வநிலை பல கோடி உண்டு
பிரம்ம நிலை ஒன்றே ஒன்று

114. தெய்வநிலையில் இருந்து வெளிவருவது தான்
அருள் நிலையாகும்

115. உலகு பல நிலையில் இயக்கப்படுகிறது
அனைத்தும் தெய்வ நிலையாகும்

116. தெய்வநிலை அனைத்தும்
சிவத்தின் கைப்பாவைகள் ஆகும்

117. வெளி உலகம் (புற உலகம்) அக உலகம்
இரண்டும் மாறுபட்டது ஆகும்

118. வெளி உலகம் புற செயலால் சூழ்ந்தது
அக உலகம் நம் எண்ண செயலால் ஆனது

119. அக உலகம் இறைநாமத்தால் இயங்குகிறது
நாடி நரம்புகளில் அரங்கேர கூடியது

120. அகத்தில் உள்ள மூலத்தையே
தியானி

121. தியானத்தின் மூலம் மெய் பொருளாக
இருக்க வேண்டும்

122. தியானத்தில் தியானிக்கும் இடமும், பொருளும்
மாறினால் தியானம் வீண்

123. வீணான தியானம் புற உலகை உடையது
அது மெய் அன்றி அனைத்தையும் தரக்கூடியது

124. பொய் உலகில் பொய் அனைத்தையும்
விலக்கி மெய் அறிவதே தபம்

125. தபப்பலன் மெய் ஒன்றே. அதை அறிந்து
அதுவாகுவதே தபம்.

126. மெய், பொய்யானவற்றில் கலந்துள்ளது
அதை அறிந்து அதனோடு இரு

127. மெய் அறிந்து அதை ருசிப்பதுவும்
காண்பதுவும், திளைப்பதுவும் தபப்பலன்

128. குருவே இறை நாமம்
இறை நாமமே இறைவன்

129. உடல், உயிர், ஆன்மா அறிவது ஆன்மீகம்
ஆன்மா, உயிர் அறிவது தெய்வீகம்

130. ஆன்மா அறிந்து உயிரைக் கொண்டு
ஆன்மாவை உய்விப்பது தபப்பலம்

131. ஆன்மா, உயிர் இரண்டையும் அறிய செய்து
அதை பிரித்து அறிய செய்வது குரு

132. ஆன்மா, உயிர் இரண்டையும் அறிவித்து
ஆன்மா தொட்டு காட்டும் வித்தைகாரன் – குரு

133. ஆன்ம லயம் அறிவிப்பதும், உணர்வின்
விளக்கமும் குருவால் மட்டுமே முடியும்

134. பிரம்மத்தை குருவால் மட்டுமே உணரவும்,
உணர்த்தவும் செய்ய முடியும்

135. குருவால் மட்டுமே வெளிப்படுவது பிரம்மம்
இது சிவ வாக்கு

136. சிவம் வரும் வழியே
குரு வாய் மொழியே

137. சிவம் தூண்டும் குரு
மெய் வாயில் குருவே

138. ஒலி, ஒளிக்கு திசை, இரவு, பகல் நல்லது கெட்டது
எதுவும் இல்லை. எதிலும் ஊடுருவி இயங்கும்

139. சிவ நாதம் திசை , இரவு, பகல், இன்பம், துன்பம்,
உறக்கம் , வலி, பசி, தாகம், கோபம், கர்மம் இல்லை

140. குணம் அற்றது சிவம்
குணம் அற்றது ஆன்மா

141. குணத்துடன் கூடியே சிவம் இருக்கும்
ஆன்மா எல்லாம் அறிந்தும் விலகி இருக்கும்

142. குணத்தோடு உள்ள உயிர் அடிப்படையே
விதியின் இயங்கும் – இது இயற்கை நீதி

143. உயிர் எண்ணம் சூழப்பட்ட மனிதன்
குரு அருளால் சூழப்பட்டவன்

144. நல்லெண்ணம் ஒருவனில் வெளிப்பட்டு கொண்டே
இருந்தால் அதுவே ஆன்ம வெளியீடு

145. சிவம் – நல்லதை தவிர வேறு எதையும்
இயக்கவோ, செய்யவோ செய்யாது

146. நல்ல எண்ணம் , நற்செயல் இரண்டும்
சிவத்தின் பாத சுவடுகள்

147. நல்லவனா இரு, அப்போது தான்
நீ நல்ல சிவம் ஆவாய்

148. நல்லவனாய் மாற முடியாதவன் – சிவம் சொல்லி
சிவமாயை இருப்பான்

149. இறை ஒளியே மெய். அதுவே சிவம்
படைக்கபட்டது எல்லாம் ஒளியும் சிவமாயை

150. ஜென்மங்கள் பூவுலகில் கழிய வேண்டின்
சிவ பதம் நாடு

151. சிவத்தை எண்ணாதவன் ஜீவன் அற்றவன்
152. ஆன்ம அறிவு இல்லாதவன் இறைவனை
நெருங்க முடியாது

153. தெய்வங்களின் குணம், பூவின் மனம் போன்றது
பூவுக்கு பூ மணம் மாறும்

154. தபம். இறைவனுடன் கலக்க செய்யும்
உயிரின் இயக்க கருவியாகும்

155. ஜபம் கர்மங்களை அறிந்து கடன், கடமை முடிக்க
உதவும்
156. சிவம் வேண்டின் உலக கடனை
கடமையாக முடித்து வெளியே வா

157. யோகம் வேண்டின் ஒரு நாள், ஒரு பொழுதும்
வீணாக்காதே – ஜபம் செய்

158. சிவ ஜபம் ஓடி நின்றால்தான்
தபம் கிட்டும்

159. ஒவ்வொரு நாளும் இறை நாமத்துடன்
தொடங்கு இறைவனே துணை செய்ய

160. சிவ ஜபம் இறைவனுக்கும் உனக்கும்
உள்ள இடைவெளியை குறைக்கும்

161. சிவ நாமத்தில் மனம் தெளியும்
மரியாதை கிட்டும் நிம்மதி கிட்டும்

162. மனிதர்களால் மதிக்கப்படுபவன் மனிதன்
மனிதர்களால் தொழப்படுபவன் மஹான்

163. சிவம் என்றென்றும் உன்
உள்ளங்கை நெல்லி கனியே
164. சிவம் ஒன்றே ஒன்றானது
பின் இரண்டாகி அது உலகாகியது

165. குருவை ஒவ்வொரு நிமிடமும் கணம் செய்
நீ பெரிதாய் கணப்படுத்தப்படுவாய்

166. குருவை கணம் செய்து தொண்டு செய்பவன்
கைலாய பூதகனத்தோடு பூதகணமாவாய்

167. குருவுக்கு சேவை செய். பணிவு பண்போடு இரு
சிவ ஞானம் பெருவாய்

168. குருவால் உயர்த்திப் போற்றப்பட்டவன், கணங்களால்
காணப்படுவான். சிவன் ஆவான் நிஜத்தில்

169. குருவால் இருதய முடிச்சு அவிழ்
கர்மம் ஒழிய

170. குருவால் மட்டும் கர்ம சூத்திரம் தர முடியும்
அது உன் பிராத்தம்

171. கர்ம சூத்திரம் உன் பேச்சையும் மூச்சையும்
கணக்கிட்டு நிறுத்தும்

172. உலக வெளியில் இருந்து தப்பித்து
ஒதுங்க ஓர் இடம் உள்ளது. அதை அறி

173. உலக வாசனை விட்டவனுக்கு
தனிமையே சிவ இனிமையாகும்

174. கோபமே மனிதனை மிருகமாக்கிறது
மிருக கர்ம வாசனை மிருக பிறப்பையே தரும்

175. ஒளி பிறக்க இருள் விலகும்
சிவம் நிலைத்தால் கர்மம் விளகும்

176. ஆத்ம ஞானி மட்டுமே உயர்ந்த
சாதகன் ஆவான்

177. ஆத்ம ஞானி ஆத்ம சொரூபத்தை தியானிக்கிறான்
அதனால் கர்மம் அழிகிறது

178. ஆத்ம ஞானியின் அறிவு கடந்த ஞானம்
மெய்யை உணர்த்துகிறது

179. ஆன்மாவை அறிந்து உணர்ந்து
ஆன்மாவை தியானிப்பவன் சிவ ஞானி

180. கனவைக் கனவாக காணுபவனும்
உறக்கமற்றவனும் ஞானத்தை அடைவான்

181. உறக்கம் அற்ற மன உழைப்பும்
பர நம்பிக்கையும் ஞானம் தரும்

182. உடல் உழைப்பு போகமும்
மன உழைப்பு யோகமும் தரும்

183. தங்கத்தில் கலவை சேரும் போது தங்கம் மாறும்
குணம் மாறினால் யோகம் மாறும்

184. தங்கம் சேதாரம் பிரியும் போது தங்கம் தங்கமாகும்
குணம் தங்கம் போன்று சேதாரம் பிரியும் போது தபம் பலிதமாகும்

185. தங்கத்தின் தரம் கூடுவது போல்
பிறவி தரம் கூடும் போது – ஜென்மம் கழையப்படும்

186. உடல் சுரனை மறந்து சிவத்தை, தியானி
சிவ சுரத்தில் ஒளிர்வாய்

187. உடல் பிராணன், மந்திரம் – பிசங்காது தியானி
188. இடைவிடாது சிவத்தை ஓங்குவி
சிவ அந்தம் அருவியாய் கொட்டும்

189. ஓம் – ஓர் எழுத்தாக்கு
பின் அதையே ஊமை எழுத்தாக்கு

190. ஊமை எழுத்தில் மெய் விழிக்கும்
பின்னரே சிவம் விழிக்கும்

191. தென்படாதவனும் தென்படுவான்
திகட்டா திரவிய சொல்லில்

192. திறக்கும் ரவிகலையின் குளுமையில்
சிவ அமிர்தம் துளிர்க்கும்

193. திறக்கும் வாசல் குரு அறிவார்
திறந்த பின் சிவம் அறிவர்

194. சிவத்தை அறியும் சாவியை
குருவிடம் சிவமே தந்தது

195. ஜபத்தால் சிவத்திடம் போரிட்டு
வெற்றி காண்பாய் மகனே

196. சிவம் ஒன்றே என் தெய்வம்
அதுவே என் பேர் ஆனந்தம்

197. உலகப் பொருள் எல்லாம் விலைபோகும்
சிவம் விலை போகாது

198. உன்னிடம் பொன், பொருள், புகழ், போகம்
உள்ளது. சிவம் உள்ளதா?

199. சிவம் தனிப்பொருள். தனித்திருந்து சிவத்தை
தேடுபவனுக்கு தன்னையே தரும்

200. தன்னை தந்த சிவம்
உன்னை தேடிய சிவம்

201. சிவ ஞான மார்கத்துக்கு
உலகப் பொருள் உதவாது

202. அன்பினும் இனியது சிவம்
203. சிவ என்ற சொல்லை வெளியிடு
மெய் உலகம் பிறக்கும் – உன்னைச் சுற்றி

204. சிவ சொல் உன்னையும், உன் பேச்சையும்
உன்னை சுற்றி காற்றையும் சுத்தகரிக்கும்

205. சிவா……. என்று சொல்
சிவனே வருவார்

206. சிவனை ஓய்வு உறக்கம் இன்றி
அழைப்பவன் யோகி

208. எனக்கு உதவுங்களேன்
உலகுக்கு சிவத்தை தெரியப்படுத்த

209. துரிய அன்பில் மலரும் பொருள்
சிவம் ஆகும்

210. சிவ அன்பில் காமம் இல்லை
உயிர் பேதமும் இல்லை

211. சிவ அன்பில் உலக பந்தமும் இல்லை
உலக பேதமும் இல்லை

212. சிவ ஆனந்தம் சிரசினில்
சித்திக்கும்

213. சிவ ஆனந்தம் கிடைக்க
வெறுப்பை மட்டும் விட்டு விடு

214. கோபம் உள்ளவன் சிவ ரசத்தைப்
புசியான்

215. யோகக் கலை சிவமே
யோகத் தனல் உயிரே

216. போகத்தில் யாகம் வெளியே ஆகும்
யோகத்தில் யாகம் உள்ளேயே ஆகும்

217. தபசி யோகக்கனல் மூட்டி
தன்னுள்ளேயே கர்மம் ஒழிக்க வேண்டும்

218. உயிர் எங்கே செல்லும் என்று அறிவது தபம்
உயிரைத் தன்னுள் கரைப்பது சிவம்

219. மூவுலகப் பெருமான் அல்ல ஈர் ஏழு உலகப் பெருமான் அல்ல
அண்ட பகிரங்கப் அனைத்துமான பெருமான்

220. ஒன்றே சிவம் என்று ஒன்றியே
நன்றே தொழு

221. சிவத்தைத் தொழ தொழ தீயவை விலகிப் போகும்
சிவத்தைத் தொழ தீயவை நாம் செய்வதும் இல்லையே

222. மித மிஞ்சியதை தருவதும், கேட்டு பின் தருவதும்
கர்மம் போக்க செய்வதும் தர்மம் அல்ல

223. சிவ சிந்தனையுடன், சிவத் தொண்டனாக
பல்லுயிர்க்கும் பேதம் அற்று செய்வது தர்மம்

224. சிறப்பினும் சிறப்பு, சிவ சிந்தனையுடன் ஏதேனும்
ஓர் தர்மத்தை தொடர்ந்து செய்வது சிவ தொண்டு

225. மனம் திரியாது, மாறாது, மறவாது, காற்று மழை
வெய்யிலிலும் தர்மம் செய்வது – தர்மநீதீ

226. தன் உழைப்பு, பிறர் உழைப்பு பொருளை
தர்மம் செய்தால் உழைப்பிற்கேற்ற பலனே

227. இடைவிடாதும், அயராதும், தர்மம் செய்
பின் உனக்காக அளவில்லா இறை சேமிப்பு செய்

228. ஒரு தலைமுறைக்கு அளவுடன் சேமிப்பு செய்
பின் உனக்காக அளவில்லா இறை சேமிப்பு செய்

229. பல தலைமுறை சேமிப்பு, இறை தேடலுக்கு உதவாது
பல தலைமுறை சேமிப்பால் உன் ஆயுளே முடிந்துவிடும்

230. அழியும் சொத்தை தேடி வைக்காதே
அழியா சொத்து பல தலைமுறை தொடரும்

231. அழியா சொத்து இறைவனே
அவனே உனக்கும் உன் சந்ததிக்கும் உதவுவான்

232. இறைவனிடம் அன்பு, கருணை பெற போராடு
இறைவனிடம் அன்பை அருளாக பெருவாய்

233. உன் அன்பையும், கருணையையும் பல்லுயிர்க்கும்
பகிர்ந்து அளி. இறைவனையே பெருவாய்

234. பல்லுயிர்க்கும் தேவை அறிந்து செய்
அதுவே அன்பான சிவ கருணையாகும்

235. ஜீவகாருண்யமே சிவ கருணையாகும்
சிவனே சீவனுள்ளும் இருப்பது

236. இல்லாதவனுக்கு இல்லாததை தருவதும்
தர்மநீதி. நேர்மையுடன் அதைப் பயன்படுத்துவதும் நீதி

237. மித மிஞ்சியதை தானம் செய்
தேவை அற்றதை சேமிக்காதே

238. பொருள் தேடுவதைவிட, சிவ அருள் தேடிவை,
உன்னையும், உன் சந்த்தியையும் தொடரும்

239. சிவ அருள் மட்டுமே உன்னையும் காக்கும்
பிறரையும் காக்கும்

240. சிவ அருள், கருணை மட்டுமே நம்
மரணத்துக்கு பின்னும் செல்லுபடி ஆகும்

242. தானம், தர்மமும் நாமே தேடி சென்று
செய்வது சேவை – அதுவே உன்னதம்

243. அன்னதானமே சிறப்பு. நோய் உற்றவனும்
வலிதாங்க சக்தி தருவது அன்னமே

244. உணவை விருந்தாக உண்ணாதே
மருந்தாக உண். உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்று

245. சிவ சிந்தனையுடன் உணவு சமை
சிவ சிந்தனுயுடன் உண்டு வாழ் – இது சிவ விருந்து

246. ஓர் தருமத்தை சிவ தந்ததாகப் பார்
ஒருவனது உழைப்பில் சிவ வலியும் உள்ளது

247. உழைப்பில் உடல்வலி இல்லாமல் இருக்காது
அவ்வுழைப்பு தானமே உயர்வானது

248. அன்னத்தை வீணாக்கி ஒதுக்காதே
அது ஒரு நாள் உன்னை ஒதுக்கும்

249. அன்னம் ஒதுக்கினால் நோய் பிடித்தவன் ஆவாய்
அண்ணத்தை மதித்து நட

250. உயிர் வளர்க்கும் தாய் அண்ணம்
அண்ணத்தை இறைவனுக்கு சிவார்பனம் செய்

251. உழைக்காமல் உண்ணாதே
ஒவ்வொரு கவலத்தையும் சிவார்பனம் செய். உண்

252. மன்னிக்கும் குற்றம் மன்னிக்காத குற்றம் உண்டு
குற்றம் செய்யாது இரு

253. பிரம்மசரியத்தை கடைப்பிடிப்பவன்
அழிவில்லா தேவர்களுக்கு இணையானவன்

254. இருதய நாடியில் சிவனை பொருத்துவதே
சிவ மந்திரம்

255. இதய நாடியில் சிவ நாமம் நீங்காது
நாதனிக்குமானால் அது – சிவதியானம்

256. இதய நாடியில் இருபொருள் ஒன்றாய்
ஒளிருமானால் அது – சிவ பலன்

257. இதய நாடியில் இரு பொருள் ஒன்றாய்
பலிதம் ஆனால் – சித்திக்கும் சிவம்

258. இரண்டும் ஒன்றாய் ஓங்கி எழுந்தால்
யோக கனினீ நாதம் எழும்பும்

259. தபக்கினியை மேல் ஓங்கி
முட்டி திரும்பினால் நாதம் ஒலிக்கும்

260. தபக்கினியின் பிராண நாதம்
ஒலித்தால் மந்திரம் வேண்டாமே

261. பிராண நாதம் கேட்பாயின் உன்னுள்
அதையே கேட்டுக் கொண்டே இரு

262. நாதனின் நாதத்தை தியானிப்பவன்
மௌனியாகிறான்

263. மௌனம் எங்கு இருக்குமே
அங்கு நாதம் நிலை பெறும்

264. மௌனம் அற்று நாதம் கேட்டது
என்றால் அவனே மாயை

265. கடவுளை கண்டேன் என்பவனும்
நாதம் கேட்டேன் என்று பேசினால் – அவன் பொய்

266. நாம் அசைவற்று அமைதியுரும் போது தான்
நாதம் மேல் ஓங்கி எழும்

267. ஒளி , இருளில் கிடைத்த்து என்றால் அது – பொய்
பேசுபவனிடம் அமைதி கூட பிறக்காது

268. வெளிசப்தம் இடுவது எண்ண செயலே
எண்ண செயல் நின்றால் தான் – மௌனம் பிறக்கும்

269. மௌனத்தில் தான் அமைதி பிறக்கும்
அமைதியில் தான் விழிப்புணர்வு பிறக்கும்

270. மௌன விழிப்புணர்வு தான்
உள் நாதத்தை அறிய செய்யும்

271. உறக்கம் அற்ற மௌன விழிப்பு
அமைதியில் உள்ள ஆனந்தத்தை எழுப்பும்

272. அமைதியான பேர் ஆனந்தம்
ஆகாசவானிக்கு அழைப்பு விடும்

273. ஆகாசவனியிடம் பிராண நாதத்தை
செலுத்துவாயானால் நீயே யோகி

274. ஆகாசவானியிடம் பிரம்மக்கலை
அறிந்து செலுத்துபவன் தான் – யோகி

275. இடம், பொருள், ஏவல் மூன்றையும்
தந்திரமாக கொண்டு செயல்படு

276. இடம் அறிந்து, பொருள் அறிந்து, தந்திரமாய்
மந்திரத்தை ஏவல் செய் – இறைவனே வருவான்

277. அமைதியான தந்திர ஏவல் செய்ய
சிவப்பேர் ஆனந்தம் கிட்டுமே

278. இந்த சிவ வித்தையை அறிவது தான்
சிவ ஞானம் – தந்திரம் முற்றே

279. ரகசிய இடத்தில், ரகசியமாய் இருந்து
ரகசியத்தை பயன்படுத்த ரகசியமானவன் தெரிவான்

280. அமைதி வேண்டுமாயின் பேச்சை நிறுத்தி
மூக்கு பின்னால் ஓடு

281. மூக்கு பின்னால் விழிப்புணர்வால்
ஓடுபவன் வாசல் தன்னால் திறக்கும்

282. மூக்கு பின்னால் ஓட மௌன வாசம்
பிறக்கும் . எண்ணம் அழியும்

283. உன் பிராண ஓட்டம் குறைய குறைய
மும் மலங்களும் அழியும்

284. எங்கு பிராண ஓட்டம் நின்றதோ
அங்கு பிராணநாதன் பிரகாசிப்பான்

285. பிராண நாதன் பிரகாசிப்பதை அறிய
பிராண விழிப்பு வேண்டும்

286. பிராண விழிப்பு இல்லாவிடில்
யோக மாயையில் வீழ்வாய்

287. தபம் அல்லாது நிறுத்தம்
யோகம் போல் தெரியும்

288. தபம் அல்லாத சூனியம்
பலன் அற்ற யோகமாயை

289. தபம் ஆகாத செயல் அனைத்தும்
தெய்வபலன் தராது

290. தெய்வபலன் இல்லாத தபம்
மறுபிறப்புக்கு வழிவகுக்கும்

291. அவ்வுலக சஞ்சாரம் இல்லாத யோகி
இவ்வுலகில் மனிதனாகவே இருக்கிறான்
292. அவ்வுலக ஆத்தும ஞானம் இல்லாதவன்

இவ்வுலகிற்கே வந்து விடுவான்
293. அவ்வுலக மந்திர வார்த்தையும்
இயக்கப் பயணிப்பும் இல்லாதவன் – இவ்வுலகவாசி

294. அவ்வுலக பயணிக்கும் ஆயுத்தம்
பயணிக்கும் தகுதியும், வாழும் தகுதியும் பெறு

295. அத்ம ஞானம் ஒன்றே
அவ்வுலகம் செல்ல வழிவிடும்

296. அத்ம ஞானம் இல்லாத பக்தி
வேதம், உபன்யாசம், பூஜை, யாகம், அவ்வுலகத்திற்கு செல்லாது

297. அமைதியில் (தெளிவை) தெளிந்து பெற வேண்டியதை
கலக்கி, கலங்கி பெறுவேன் என்பது மூடத்தனம்

298. அமைதியில் தெளிய வேண்டியதை
ஆர்பாட்டத்தில் காண முடியாது

299. ஓங்காரம் வேறு
நாதம் வேறு

300. ஓங்காரம் வெளியில் இருந்து கேட்பது
நாதம் நாபியில் இருந்து பிறப்பது

301. பல வித யாகம் பூஜை வெளியில் நடப்பதை விட
உட்பூஜை சிறப்பு.

திருச்சிற்றம்பலம்

மகா பெரியவா பொன் மொழிகள்

ஆலய வழிபடுவோர் கடைப்பிடிக்க வேண்டிய 100 விஷயங்கள்

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    பிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம் | Aadi pooram prayers for getting baby

    Aadi pooram Prayers for getting baby பிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம்! ஆடி பூரம் 2024 தேதி… Read More

    1 week ago

    Aadi Pooram | ஆடிப்பூரம் | Aadi pooram Festival | Aadi Pooram 2024 Date

    Aadi Pooram Festival ஆடிப்பூரம் (Aadi Pooram) என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது… Read More

    1 week ago

    ஆடிக்கிருத்திகை விரதமுறை மற்றும் பலன்கள் | Aadi kiruthigai

    Aadi kiruthigai #ஆடிக்கிருத்திகை விரதம் இருக்கும் முறை இதுதான்!! - ஆடி கிருத்திகை 2024 தேதி மற்றும் நேரம்: ஆடி… Read More

    1 week ago

    ஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்பும் | Aadi Amavasai special

    Aadi Amavasai special ஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்பும் Aadi amavasai ********************************************** ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள்… Read More

    1 week ago

    ஆடிப்பெருக்கு விழா | aadi perukku festival | aadi 18

    ஆடிப்பெருக்கு:  3/8/2024 aadi perukku தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இதனால் ஆடி மாதம் ஒவ்வொரு… Read More

    1 week ago

    Aadi month special Festivals Information | ஆடி மாத சிறப்புகள்

    Aadi month special Festival News and Info ஆடி மாத சிறப்புகள் Aadi month special news -… Read More

    1 week ago