செல்வம் கொழிக்க ஒவ்வொரு ராசியினரும் சொல்ல வேண்டிய மந்திரம் (All rasi mantra tamil)
ஒருவரின் ஜாதக அமைப்பில் அவருக்கு அமைந்துள்ள ராசியைப் பொறுத்து கீழே குறிப்பிட்டுள்ள மந்திரங்களை தினமும் ஜெபித்து வந்தால் அவருக்கு செல்வநிலை உயருவதோடு, அனைத்து நன்மைகளும் வந்து சேரும்.
ஒவ்வொரு ராசிக்குரிய மந்திரத்தை ஜெபித்து வந்தால் செல்வங்களும், ஆரோக்கியமும் உயரும்.
மேஷம் ராசிக்குரிய மந்திரம்
செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷ ராசியினர்
”ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்வந்தே ஸிவாத் மஜம்”
என்ற ஸ்லோகத்தை தினமும் 27 முறை கூறி வழிபடுவதோடு, முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வந்தால் மேஷ ராசிக்கான துன்பங்கள் விலகி செல்வமும், சிறப்பும் பெறலாம். குறிப்பாக செவ்வாய் கிழமைகளில் இந்த மந்திரத்தை சொல்வது விசேஷமானது.
ரிஷபம் ராசிக்குரிய மந்திரம்
சுக்கிர பகவானை அதிபதியாக கொண்ட ரிஷப ராசியினர் வணங்க வேண்டிய தெய்வம் மகா லட்சுமி. இவர்கள் லட்சுமி கடாட்சம் பெற வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து,
”ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யைஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ”
என்ற ஸ்லோகத்தை தினமும் 11முறை கூறி வழிபட்டு வந்தால், செல்வம் நிலை உயரும்.
மிதுனம் ராசிக்குரிய மந்திரம்
புதன் பகவானை அதிபதியாக கொண்டவர்கள் மீதுன ராசியினர். இவர்கள் மகா விஷ்ணுவை வழிபட்டு வருவது ஏற்றம் தரக்கூடியது.
விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபடுவதுடன்,
“ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம”
என்ற ஸ்லோகத்தை 54 முறை தினமும் கூறி வருவதால் எல்லா நன்மைகளும் வந்து சேரும்.
கடகம் ராசிக்குரிய மந்திரம்
சந்திரனின் அருளைப் பெற்றவர்கள் கடக ராசியினர். அதன் காரணமாக ஒவ்வொரு பெளர்ணமி அன்று விரதமிருந்து அம்பாளுக்கு உரிய சகஸ்ரநாம அர்ச்சனையை செய்து வழிபடுவதோடு
”ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம”
என்ற ஸ்லோகத்தை 21முறை கூற வழிபடவும்.
சிம்மம் ராசிக்குரிய மந்திரம்
நவகிரகங்களின் தலைவனும், ஆளக்கூடியவருமான சூரியனின் அருளைப் பெற்றவர்கள் சிம்ம ராசியினர். இவர்கள் ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் சூரியனுக்கு உரிய சகஸ்ரநாம அர்ச்சனையை செய்து வழிபடுவதோடு,
“ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம” என்ற மந்திரத்தை கூறி வந்தால் வாழ்வில் அனைத்து செல்வமும், வெற்றியும் வந்து சேரும்.
கன்னி ராசிக்குரிய மந்திரம்
புதன் பகவானின் அருளாசி பெற்றவர்கள் கன்னி ராசியினர். இவர்கள் புதன் கிழமை தோறும் விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை செய்வதும், ”ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம”
என்ற மந்திரத்தை உச்சரித்து வந்தால் நீங்கள் நினைத்த காரியம் வெற்றி அடையும்.
துலாம் ராசிக்குரிய மந்திரம்
சுகத்தை அருளக்கூடிய சுக்கிர பகவானை அதிபதியாக கொண்டவர்கள் துலாம் ராசியின், வாழ்வில் செல்வமும், நல்லருளும் பெற பெளர்ணமி தோறும் சத்ய நராயணனை நினைத்து பூஜைகள் செய்து
“ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம” என்ற மந்திரத்தை சொல்லி வழிபட்டு வருவதால் நன்மைகள் பல ஏற்படும்.
விருச்சிகம் ராசிக்குரிய மந்திரம்
செவ்வாய் பகவானின் அருளாசையைப் பெற்றவர்கள் விருச்சிக ராசியினர். இவர்கள் செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து துர்க்கை அம்மனுக்கு பூஜை செய்து வணங்கி
”தரணி கர்ப்ப ஸம்பூதம்வித்யுத் காந்தி ஸமப்ரதம்குமாரம் சக்தி ஹஸ்தம்சமங்களம் ப்ரணமாம்யஹம்”
என்ற மந்திரத்தை கூறி வழிபட வேண்டும்.
தனுசு ராசிக்குரிய மந்திரம்
குரு பகவானை அதிபதியாக கொண்டவர்கள் தனுசு ராசியினர். இவர்கள் வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபடுதல் வேண்டும்.
”ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம”
என்ற ஸ்லோகத்தை சொல்லி வழிபட்டு வருவதால் செவமும், நல்ல பலன்களும் கிடைக்கும்.
மகரம் ராசிக்குரிய மந்திரம்
சனி பகவானின் அருளாசையும், அதிபதியாகவும் கொண்டவர்கள் மகர ராசியினர். இவர்கள் சனிக்கிழமை விரதமிருந்து சனி பகவானை வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும். அதோடு சனீஸ்வர சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபடுவதுடன்
“ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம”
என்ற மந்திரத்தை உச்சரித்து வழிபடுவதால் சகல காரியத்திலும் வெற்றி கிடைக்கும்.
கும்பம் ராசிக்குரிய மந்திரம்
கும்ப ராசியினர் சனி பகவானை அதிபதியாக கொண்டவர்கள். இவர்கள் செல்வமும் நல்லருளும் பெற சனிக்கிழமை தோறும் அனுமனுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
அதோடு “ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம”
என்ற மந்திரத்தை உச்சரித்து வந்தால், நல்ல பலன்கள் உண்டாகும்.
மீனம் ராசிக்குரிய மந்திரம்
குருவின் அருளைப் பெற்றவர்கள் மீன ராசியினர். இவர்கள் வியாழன் தோறும் சிவ பெருமானுக்கு உரிய சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.
“ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம” எனும் மந்திரத்தை கூறி வந்தால், துன்பங்கள் விலகி செல்வங்கள் பெருகும்.
12 இராசிகளுக்கும் லால் கிதாப் பரிகாரங்கள்
உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்கு எந்த சித்தர்களை வழிபாடு செய்ய வேண்டும்?
உங்கள் ராசிக்கு எந்த சிவன் கோவில்
27 நட்சத்திரங்களின் கடவுள், மரங்கள் மற்றும் பாடல்கள்
பல நன்மைகள் தரும் நவகிரக மந்திரங்கள்
காரியம் கைகூட பீஜ அட்சர மந்திரங்கள்!
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our WhatsApp group *_📖 பஞ்சாங்கம்: ~_*… Read More
Aadi Pooram Festival ஆடிப்பூரம் (Aadi Pooram) என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது… Read More
மூர்த்தி நாயனார் தமிழ் வளர்த்த மதுரையில் வணிகத்தொழில் செய்யும் குடும்பத்தில் அவதரித்தவர் மூர்த்தி எனும் அடியார் பெருமானார். மதுரை ஆலவாய்… Read More
முனையடுவார் நாயனார் முனையடுவார் பண்டைய சோழ நாட்டில் திருநீடூரில் அவதரித்த பெருமானாவார். திருநீடூர் தற்போது மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது. பண்டைய… Read More
முருக நாயனார் சோழநாட்டிலே திருப்புகலூர் எனும் அற்புத திருத்தலத்திலே அவதரித்தவர் முருகனார். சைவசமய நெறியின் தலை நின்ற இப்பெருமானார், இறைவன்… Read More
மானக்கஞ்சாற நாயனார். செங்கரும்பின்சாறு ஆறென பாயும் சோழவளநாட்டில் காஞ்சாறு என்னும் திருத்தலத்தில் அவதரித்தவர் மானகாந்தன் என்னும் சிவனடியார். இவரது இல்லத்தரசியர்… Read More
Leave a Comment