Illara Dharmam in Tamil

இல்லற தர்மம் – Illara Dharmam in Tamil

கட்டிய மனைவியை கடைசி வரை கண் கலங்காமல்
காப்பவன், தவம் செய்ய தேவை இல்லை.
இருபத்தி ஒரு வயது வரை அவனவன் சொந்த ஆன்ம கர்மா
செயலுக்கு வராது.
அந்த ஆன்மாவின் ஸ்தூல தாய் தந்தை
கர்மாவே வழி நடத்தும்.
96 தத்துவங்கள் முடிவு பெறுவது இருபத்தி ஒரு வயதிலே.
அதன் பிறகே அவனது சொந்த ஆன்ம கர்மா
செயலில் இறங்கும்.
சிவமாக இருந்தால் மட்டும் சிரசு ஏற முடியாது.
சக்தியோடு துணை சேர வேண்டும்.
சிரசு ஏற பல வழி…
தியானம் மூலம் பக்தி மூலம் ஞான மூலம்
யோக மூலம் தீட்சை மூலம் சிவசக்தி மூலம்
இன்னும் எத்தனையோ மூலம் வழி உள்ளது
சிரசு ஏற.
ஆனால் சிறந்த மூலம் இல்லற தர்மம்.
சிவம் பிறக்கையிலே அவனுக்கு முன்பே
சக்தி பிறந்து விடுகிறது.
சக்தி மாறி சிவம் சேர்ந்தாலே
பிறவியே சிக்கலே..
மன பொருத்தம் பூமியிலே ஜெயிப்பது இல்லை.
ஆன்ம பொறுத்தமே பிறவியை ஜெயிக்கும்.
அந்த சக்தியோடு சிவம் சேரும் போதே
சர்வமும் சாந்தி ஆகும்.
சிவ சக்தி இடையே ஊடலும் கூடலும்
உற்சாகம் தானே…!
ஆனால்…
சக்தியின் கண்ணீருக்கு சிவம் காரணமானால்
அதை விட கொடிய கர்மா உலகில் இல்லை.
ஒருவன் வாழ்வை ஜெயிக்க ஆயிரம் வழி
தர்மத்தில் உள்ளது. உண்மையே.
ஆனால்
உறவுகளை கொண்டே உலகை வெல்வதும்
பிறவி பிணி அறுக்கவும் ஒரு வழி உள்ளது…
உலகம் அறியாதது.
சொந்தம் என்பது பழைய பாக்கி என
அறிந்தவனுக்கு சொந்தம் சுமை இல்லை.
நட்பு என்பது
பழைய பகை என்பதை பண்போடு அறிந்தவனுக்கு
பதற்றம் இல்லை.
எதிரி என்பவன் தனது கர்மாவின் தார்மீக கணக்கே
என தன்மையோடு உணர்ந்தவனுக்கு எதிரி இல்லையே..
உனது எதிரியும் நீயே!
உனது செயலே கர்மா ஆகி அந்த கர்மாவே
நீ எதிரி என நினைக்கும் ஒரு உயிருள்ள சடலத்தை
உனக்கு எதிராக பயன்படுத்துகிறது
என நீ உணரும் போது,
உன் எதிரி முகத்தில உனது கர்மா
உனது கண்களுக்கு தெரிய வந்தால்..
எதிரி…
உனக்கு எதிரே இருந்தாலும்
கலக்கம் தேவை படுவதில்லை.
உன்னை
உடனிருந்தே கொல்லும் உறவும்,
உன்னோடு பிறக்கும் உனது
பழைய கணக்காலே!
பழைய கணக்கு புரிந்தால்,
பந்த பாசம்; சகோதரத்துவம் மீது
பற்று அற்ற பற்று வைத்து…
பிறவி கடமை வெல்லலாம்.
கர்மாவின் கணக்கு புரிந்தால்,
உனது பக்கத்தில்
சரி பாதி அமரும் மனைவி…
யார் என்றும் புரியும்.
தாய் தந்தையை அன்போடு பூஜிப்பவன்
தந்தை வழி தாய் வழி ஏழு ஜென்ம கர்மாவில்
இருந்து தப்பிக்கலாம்.
உறவுகளுக்கு அவர்கள் தரும் இன்னல்கள்
பொறுத்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
உபகாரமாக உதவி வந்தால்,
உனது ஏழு ஜென்ம சமூதாய கர்மாவில்
இருந்து தப்பிக்கலாம்.
கோயில் போனாலோ மகா குளத்தில்
குளித்தாலோ ஒன்னும் மாறாது
சிறு இன்பம் மட்டும் சிறிது காலம் கிடைக்கும்
அவ்வளவே..
ஆனால்…..
ஒரே ஒரு உறவை நீ பூஜித்தால்
பிறவி பிணி மொத்தமாக தீரும்
அது, மனைவியே!!
மனைவியை
மகிழ்ச்சியாக வைப்பது உலகிலேயே
சிரமம் மட்டும் அல்ல.
அது தான் உலகிலேயே
சிறந்த தவம்.
தவம் என்பது
சாமான்யன்களுக்கு சிரமமே.
கட்டிய மனைவியையும் உன் மூலம்
அவள் பெற்ற பிள்ளைகளையும்
உளமாற நேசித்து உன்னதமாக
உனது வாழ்வை ஆனந்தமாக நீ
அர்ப்பணித்தால் அதுவே உலகின் சிறந்த தர்மம்
சிறந்த தவம்!
தாய் தந்தையை வணங்கினால்…
– ராமேஸ்வரம் போக தேவை இல்லை
பித்ரு தோஷம் நீங்க!
உறவுகளை மதித்தால்…
– கிரக தோஷம் நீங்க திருவண்ணாமலை,
இடைக்காடரை தேட தேவை இல்லை!
நவ கிரகமும் சுற்ற தேவை இல்லை!
மனைவியை,
பெற்ற பிள்ளையை நேசித்தால், அவர்களை
ஆனந்தமாக வைத்தால்… – கர்ம விமோஜனம் தேட
அகத்தீசனை தேடி பாபநாசம் போக தேவை இல்லை!
இதற்கு தான் இல்லற வாழ்க்கை
அமைத்தான்… நமது
முப்பாட்டன்! ஆதி யோக வம்சம்!
மனைவி அழும் வீடே
நரகம்.
மனைவி சிரிக்கும் வீடே
பிரபஞ்ச சொர்க்கம்…

Leave a Comment