Arthamulla Aanmeegam

Dakshinamurthy Guru Bhagavan Difference in Tamil | தட்சிணாமூர்த்தி குரு பகவான்

Dakshinamurthy Guru Difference in Tamil

தட்சிணாமூர்த்தி என்பவர் வேறு, குரு பகவான் என்பவர் வேறு(Dakshinamurthy guru difference) . இருவரும் ஒருவரல்ல.

ஆனால் நிறைய பேர் தட்சிணாமூர்த்தியும்
குரு பகவானும் ஒருவர்தான் என்று நினைத்துக் கொண்டு வழிபாடு செய்கிறார்கள்.

உண்மையில் தட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

அது தொடர்பான விவரங்கள் வருமாறு:- தட்சிணாமூர்த்தி என்பவர் சிவவடிவம், குரு பகவான் என்பவர் கிரக வடிவம்.

இவர் சிவன், அவர் பிரகஸ்பதி.

தட்சிணாமூர்த்தி என்பவர் முதலாளி, குரு-அதிகாரி.

தட்சிணாமூர்த்தி சிவகுரு,
குரு தேவகுரு.

தட்சிணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர்.

குரு பகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து கொண்டு சேர்ப்பவர்.

தட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர், குரு ஒன்பது கோள் தேவதைகளில் 5 ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர்.

சிவன் தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகள் இல்லாதவர்,

குருவோ உதயம்-அஸ்தமனம் என்ற தன்மைகள் உடையவர்.

இத்தனை தத்துவ வேற்றுமைகளைக் கொண்டுள்ள இந்த இருதேவர்களையும் குரு என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு அவர்தான் இவர் இவர்தான் அவர் என்று வாதிடுவது சரியல்ல…

தட்சிணாமூர்த்தியை தட்சிணாமூர்த்தியாக (சிவகுருவாக) வழிபடுங்கள்.

சில ஆலயங்களில் தட்சிணாமூர்த்தியை குரு பகவான் என்றே மாற்றி விட்டார்கள்.

அதற்கே அனைத்து பரிகார பூஜைகளையும் செய்கிறார்கள். குருவுக்கு அணிவிக்கவேண்டிய மஞ்சள் துணியை தெட்சிணா மூர்த்திக்கு அணிவிக்கிறார்கள். கடலை சாதம் போன்ற குருகிரக நைவேத்திய பொருள்களை தட்சிணாமூர்த்திக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.

குருப்பெயர்ச்சியன்று தட்சிணாமூர்த்தி சன்னதியில் ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள், சாந்தி பரிகாரங்களை செய்கிறார்கள்.

இவையெல்லாம் தவறு என்று ஆன்மீக பெரியவர்கள் சொல்கிறார்கள். என்றாலும் தட்சிணாமூர்த்தியும் குருவும் ஒன்றே என்று பலரும் வாதிடுகிறார்கள்.

குருபகவான் என்பவர் தேவகுரு மட்டும் தானாம். ஆனால் தட்சிணாமூர்த்தி என்பவர் குருவுக்கும் குருவான பெரிய குருவாம். அதனால் குருவுக்குச் செய்வதை இவருக்குச் செய்வதில் தவறில்லை என்று வாதிடுகிறார்கள். சிலர் குருவுக்கு அதிதேவதை தட்சிணாமூர்த்தி என்று சொல்கிறார்கள்.

அதுவும் தவறு.

குருவுக்கு அதிதேவதை இந்திரன். பிரத்யதி தேவதையோ பிரம்மதேவன். இதற்கான ஆதாரங்கள் பல தொன்னூல்களில் உள்ளன.

எனவே தட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒன்றே என நம்மை நாமே குழப்பிக் கொள்ளக்கூடாது.

ஞானம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லோரும் தென்முக தெய்வமான சிவபெருமானின் வடிவமான
தென்னவன் என்ற தட்சிணாமூர்த்தியை
எல்லா நேரங்கிலிலும் வணங்கலாம். ஆனால் ஜாதகத்தில் குரு தோஷம், குரு பலம் அடைய குரு கிரக பிரீத்தி செய்யவேண்டும் என்றால் நவக்கிரகங்களில் ஒருவரான தேவ குருவான பிருஹஸ்பதியை தான் வணங்க வேண்டும்.
இந்த கருத்தில் எள் அளவும் சந்தேகம் வேண்டாம்.

தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திர பாடல் வரிகள்

தட்சிணாமூர்த்தி 108 போற்றி

108 குரு பகவான் போற்றி 

 

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    திருப்தியாக எப்பொழுதும் இருக்கின்றோமா? | Satisfaction in Life Lessons

    திருப்தி - திருப்தியாக எப்பொழுதும் இருக்கின்றோமா? தநமது சூழ்நிலைகள் எப்பொழுதும் திருப்தியாக இருக்கின்றதா? சிலநேரங்களில் அதிருப்தி ஏற்படுவதற்கு என்னகாரணம்? மனம்… Read More

    9 hours ago

    அனுமனை வணங்குவதால் கிடைக்கும் பயன்கள் | Hanuman prayer benefits

    Hanuman prayer benefits tamil ஜெய் ஶ்ரீ ராம்.. ராம பக்த அனுமனை வணங்குவதால் கிடைக்கும் பயன்கள் பற்றி இந்த… Read More

    3 days ago

    பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் எளிய கதை | Ramakrishnar bird life story

    Ramakrishnar bird life story பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் எளிய கதைகளில் ஒன்று. கர்ம வினையும் அதைக் கடந்து போகும்… Read More

    4 days ago

    புரட்டாசி பௌர்ணமி தினத்தில் லட்சுமி கடாட்சம் பெற நாம் செய்ய வேண்டியவை | puratasi pournami

    Puratasi pournami *புரட்டாசி 17.10.2024 மாத பௌர்ணமியில் லட்சுமி கடாட்சம் பெருக செய்ய வேண்டியது!* புரட்டாசி பௌர்ணமி! ✴ ஐப்பசி… Read More

    1 day ago

    பெருமாளை ஏன் கோவிந்தா என்று தெரியுமா? Govindha name history and meaning

    பெருமாளை ஏன் கோவிந்தா என்று தெரியுமா? Govindha name history and meaning *புரட்டாசி சிறப்பு பகிர்வு* *கோவிந்தா! கோவிந்தா!!*… Read More

    2 weeks ago

    நவராத்திரி 2024 சிறப்பு பதிவு | Navaratri festival 2024

    நவராத்திரி 2024 சிறப்பு பதிவு கொலு வைக்க உகந்த நேரம்: 03.10.2024 புரட்டாசி 17 ஆம் தேதி வியாழக்கிழமை முதல்… Read More

    2 weeks ago