Lyrics

Dakshinamurthy 108 Potri in Tamil | தட்சிணாமூர்த்தி 108 போற்றி

Dakshinamurthy 108 Potri in Tamil

தட்சிணாமூர்த்தி 108 போற்றி (Dakshinamurthy 108 potri) இந்த பதிவில் உள்ளது…  குரு பகவான் என்பர் வேறு, தட்சிணாமூர்த்தி என்பவர் வேறு… ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அவர்களை வணங்கினால் உங்கள் குழந்தைகள் மிக அறிவாற்றலுடன் படிப்பில் சிறப்பு பெற முடியும் என்பது நம்பிக்கை…

1. ஓம் அறிவுருவே போற்றி

2. ஓம் அழிவிலானே போற்றி

3. ஓம் அடைக்கலமே போற்றி

4. ஓம் அருளாளனே போற்றி

5. ஓம் அல்லல் அறுப்பவனே போற்றி

6. ஓம் அடியாரன்பனே போற்றி

7. ஓம் அகத்துறைபவனே போற்றி

8. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி

9. ஓம் அற்புதனே போற்றி

10. ஓம் அபயகரத்தனே போற்றி

 

11. ஓம் ஆன்கீழமர்ந்தவனே போற்றி

12ஓம் ஆன்மீகநாதனே போற்றி

13. ஓம் ஆச்சாரியனே போற்றி

14. ஓம் ஆசாரக்காவலே போற்றி

15. ஓம் ஆக்கியவனே போற்றி

16. ஓம் ஆதரிப்பவனே போற்றி

17. ஓம் ஆதிபகவனே போற்றி

18. ஓம் ஆதாரமே போற்றி

19. ஓம் ஆழ்நிலையானே போற்றி

20. ஓம் ஆனந்தஉருவே போற்றி

 

21. ஓம் இருள்கொடுப்பவனே போற்றி

22. ஓம் இருமைநீக்குபவனே போற்றி

23. ஓம் இசையில்திளைப்பவனே போற்றி

24. ஓம் ஈடேற்றுபவனே போற்றி

25. ஓம் உய்யவழியே போற்றி

26. ஓம் ஊழிக்காப்பே போற்றி

27. ஓம் எந்தையே போற்றி

28. ஓம் எளியோர்க்காவலே போற்றி

29. ஓம் ஏகாந்தனே போற்றி

30. ஓம் ஏடேந்தியவனே போற்றி

 

31. ஓம் ஒளிப்பிழம்பே போற்றி

32. ஓம் ஓங்காரநாதமே போற்றி

33. ஓம் கயிலைநாதனே போற்றி

34. ஓம் கங்காதரனே போற்றி

35. ஓம் கலையரசே போற்றி

36. ஓம் கருணைக்கடலே போற்றி

37. ஓம் குணநிதியே போற்றி

38. ஓம் குருபரனே போற்றி

39. ஓம் சதாசிவனே போற்றி

40. ஓம் சச்சிதானந்தமே போற்றி

 

41. ஓம் சாந்தரூபனே போற்றி

42. ஓம் சாமப்பிரியனே போற்றி

43. ஓம் சித்தர்குருவே போற்றி

44. ஓம் சித்தியளிப்பவனே போற்றி

45. ஓம் சுயம்புவே போற்றி

46. ஓம் சொற்பதங்கடந்தவனே போற்றி

47. ஓம் ஞானமே போற்றி

48. ஓம் ஞானியே போற்றி

49. ஓம் ஞானநாயகனே போற்றி

50. ஓம் ஞானோபதேசியே போற்றி

51. ஓம் தவசீலனே போற்றி

 

52. ஓம் தனிப்பொருளே போற்றி

53. ஓம் திருவுருவே போற்றி

54. ஓம் தியானேஸ்வரனே போற்றி

55. ஓம் தீரனே போற்றி

56. ஓம் தீதழிப்பவனே போற்றி

57. ஓம் துணையே போற்றி

58. ஓம் தூயவனே போற்றி

59. ஓம் தேவாதிதேவனே போற்றி

60. ஓம் தேவருமறியாசிவனே போற்றி

 

61. ஓம் நன்னெறிக்காவலே போற்றி

62. ஓம் நல்யாகஇலக்கே போற்றி

63. ஓம் நாகப்புரியோனே போற்றி

64. ஓம் நான்மறைப்பொருளே போற்றி

65. ஓம் நிலமனே போற்றி

66. ஓம் நிறைந்தவனே போற்றி

67. ஓம் நிலவணியானே போற்றி

68. ஓம் நீறணிந்தவனே போற்றி

69. ஓம் நெற்றிக்கண்ணனே போற்றி

70. ஓம் நோய்தீர்ப்பவனே போற்றி

71. ஓம் பசுபதியே போற்றி

 

72. ஓம் பரப்பிரம்மனே போற்றி

73. ஓம் பிரம்மச்சாரியே போற்றி

74. ஓம் பிறப்பறுப்போனே போற்றி

75. ஓம் பேறளிப்பவனே போற்றி

76. ஓம் பேசாமற்றெளிவிப்பேன் போற்றி

77. ஓம் பொன்னம்பலனே போற்றி

78. ஓம் போற்றப்படுவனே போற்றி

79. ஓம் மறைகடந்தவனே போற்றி

80. ஓம் மறையாப்பொருளே போற்றி

81. ஓம் மஹேசுவரனே போற்றி

 

82. ஓம் மங்கலமளிப்பவனே போற்றி

83. ஓம் மலைமுகட்டிருப்பவனே போற்றி

84. ஓம் மாமுனியே போற்றி

85. ஓம் மீட்பவனே போற்றி

86. ஓம் முன்னவனே போற்றி

87. ஓம் முடிவிலானே போற்றி

88. ஓம் முக்கண்ணனே போற்றி

89. ஓம் மும்மலமறுப்பவனே போற்றி

90. ஓம் முனீஸ்வரனே போற்றி

 

91. ஓம் முக்தியளிப்பவனே போற்றி

92. ஓம் மூலப்பொருளே போற்றி

93. ஓம் மூர்த்தியே போற்றி

94. ஓம் மோஹம்தீர்ப்பவனே போற்றி

95. ஓம் மோனசக்தியே போற்றி

96. ஓம் மௌனஉபதேசியே போற்றி

97. ஓம் மேதாதட்சணாமூர்த்தியே போற்றி

98. ஓம் யோகநாயகனே போற்றி

99. ஓம் யோகதட்சணாமூர்த்தியே போற்றி

100. ஓம் யமபயமழிப்பவனே போற்றி

 

101. ஓம் ருத்திரப்பிரியனே போற்றி

102. ஓம் ருத்திராட்சம்பூண்டவனே போற்றி

103. ஓம் வித்தகனே போற்றி

104. ஓம் விரிசடையனே போற்றி

105. ஓம் வில்லவப்பிரியனே போற்றி

106. ஓம் வினையறுப்பவனே போற்றி

107. ஓம் விஸ்வரூபனே போற்றி

108. ஓம் தட்சணாமூர்த்தியே போற்றி போற்றி…

சரஸ்வதி 108 போற்றி

குரு பகவான் 108 போற்றி

ஶ்ரீ ஹயக்ரீவ அஷ்டோத்திர சத நாமாவளி

தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் பாடல் வரிகள்

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    மஹாளய பட்சம் பற்றிய தகவல்கள் | Mahalaya patcham Tamil | Mahalaya paksha

    மஹாளய பட்சம் பற்றிய தகவல்கள் | Mahalaya patcham Tamil | Mahalaya paksha information *மஹாளய பட்சம்* (30.9.2023… Read More

    1 hour ago

    Sivapuranam lyrics Tamil | சிவபுராணம் பாடல் வரிகள் | Manickavasagar Tiruvasagam Tamil

    Sivapuranam lyrics Tamil - சிவபுராணம் பாடல் வரிகள் சிவபுராணம் பாடல் வரிகள் (sivapuranam lyrics tamil) மற்றும் இந்த… Read More

    2 hours ago

    Aadi Pooram | ஆடிப்பூரம் | Aadi pooram Festival | Aadi Pooram 2023 Date

    Aadi Pooram Festival ஆடிப்பூரம் (Aadi Pooram) என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது… Read More

    2 months ago

    நம: பார்வதீ பதயே என்பது என்ன?

    ஓம் நமசிவாய... ஓம் சக்தி.... நம: பார்வதீ பதயே என்பது என்ன? சிவன் கோயில்களில் நம:பார்வதீபதயே என ஒருவர் சொல்ல,… Read More

    3 months ago

    உங்கள் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும் சக்தி வாய்ந்த 6 சிவன் மந்திரங்கள் | Powerful shiva mantras tamil

    சக்தி வாய்ந்த 6 சிவன் மந்திரங்கள் | Powerful Shiva Mantras Tamil Powerful shiva mantras tamil |… Read More

    2 months ago

    Girivalam benefits | திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள் | கிரிவலம் வரலாறு

    பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More

    4 months ago