மதுரகாளியம்மன் மந்திரம் (Madhura Kaliamman mantra) வெற்றி தரும் காளி அஷ்டகத் துதி,
கடந்த நூற்றாண்டில் காஞ்சிப் பெரியவரின் நண்பராக இருந்த ஸ்ரீசெம்மங்குடி முத்துசுவாமிகள் என்பவர் சிறுவாச்சூர் மதுரகாளி அம்மனுக்குச் சேவகம் செய்து வந்தார், முத்துசாமி சிவாச்சாரியார் என்றும் செம்மங்குடி சாமிகள் என்றும் அழைக்கப்பட்ட அவர் மதுரகாளிதேவியைப் பற்றி சக்தி வாய்ந்த அஷ்டகத்தைப் பாடி உள்ளார், காளியின் எண்குண ரூபவர்ணனையைக் கூறும் இந்தத் துதியை காளி பூஜை முடிவில் மும்முறை கூறிட, துர்சக்திகள் அகன்று இன்பமே சூழும், எல்லா நலன்களும் சித்திக்கும். இந்தத் துதிக்கு ஜெய மதுராஷ்டகம் என்று பெயர்.
ஓம் நமஸ்தே ஏகவஸ்த்ரே சிகிஜ்வால சிகேசுபே
வாமரூபே கபால தகனே சர்வாபரண பூஷிதே
க்ரூர தம்ஷ்ட்ரே ரத்தமால்யே அஷ்டாதச பூஜகரே
மங்களே காரணே மாதே மாதர்பலே ரக்ஷகே
குங்குமப்ரியே குணவாஸினே குலவிருத்திகாரணே ஸ்ரியே
சூல டமருகஞ்சைவ கபாலம் பாசதாரிணே
ஓம்காரரூபிணே சக்தி வரரூபே வராபயே!
ஸுகாசினே சாமுண்டே சுந்தரீ யோகதீஸ்வரி
ஸிம்ஹவாஹனப்ரியே தேவி ச்யாமவர்ணேச சாம்பவீ
மதுரகாளி ஸ்மசானவாஸே மாத்ருகா மகாமங்களீ
சீர்வாச்சூர் வாஸப்ரியே சீக்ர வரமண்டிதே
பூர்வபுண்ய தர்ஸனே தேவி மகாமங்கள தர்ஸனீ
ஜோதிர்மயே ஜயகாளிகே துக்க நாஸன ப்ரியே சிவே
ஜன்மலாப வரே காந்தே மதுரே ஜோதி ரூபிணே
சர்வக்லேச நாசினே மாதே சாவித்ரீ அபீஷ்டானுக்ரஹே
சோடசானுக்ரஹே தேவீ பக்தானுக்ரஹ அர்ச்சிதே
ஏகமாஸம் சுக்ரவாரே ஸெளபாக்யம் காளி தர்ஸனம்
சுக்ரசோம தினஞ் ஜபித்வா ஸர்வமங்கள நிதிபாக்யதம்
அஷ்ட பூர்வம் ஜபேந்நித்யம் அஷ்டஸித்தி ப்ராப்திதஞ்சுபம்
இதிஸ்ரீ முத்துஸ்வாமி ஜிஹ்வாத்வாரே ஜெயமதுராஷ்டகம்
ஸம்பூர்ணம்…
குறிப்பு: இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது, இந்த மந்திரத்தை மூன்று முறை உச்சரியுங்கள் உங்களை சூழ்ந்துள்ள தீயவை அகலும்..
ஓம் நம சிவாய..
Sivapuranam lyrics Tamil - சிவபுராணம் பாடல் வரிகள் சிவபுராணம் பாடல் வரிகள் (sivapuranam lyrics tamil) மற்றும் இந்த… Read More
Aadi Pooram Festival ஆடிப்பூரம் (Aadi Pooram) என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது… Read More
ஓம் நமசிவாய... ஓம் சக்தி.... நம: பார்வதீ பதயே என்பது என்ன? சிவன் கோயில்களில் நம:பார்வதீபதயே என ஒருவர் சொல்ல,… Read More
சக்தி வாய்ந்த 6 சிவன் மந்திரங்கள் | Powerful Shiva Mantras Tamil Powerful shiva mantras tamil |… Read More
பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our 3rd WhatsApp group *_📖 பஞ்சாங்கம்:… Read More
Leave a Comment