சனிஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம் (Sani bhagavan pariharam) :-
திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது.
நீங்கள் எத்தனை கோடி, கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள், நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும். தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா? அதை நடைமுறைப்படுத்த உங்களுக்கு ஜாதக அமைப்பு இருக்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் சர்வ நிச்சயம்.
இதை தவறாது செய்து முடித்தால், உங்களுக்கு அந்த சனிபகவான் —முழு அருள் கடாட்சம் வழங்கி, உங்களுக்கு தலைமை ஸ்தானம் கிடைப்பது உறுதி. அப்படிப்பட்ட, ஒரு தேவரகசியம் போன்ற தகவலை, நமது வாசக அன்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மட்டற்றமகிழ்ச்சி…
தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப் பொங்கல் வைக்க உபயோகிக்கிறோமே) ஒருகைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.
உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும், அதையே மாற்றக் கூடிய சக்தி இதற்கு உண்டு என்கிறார். இதை தவிர, வன்னி மர விநாயகருக்கு பச்சரிசி மாவு படைத்தாலும், சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம் படைத்தாலும்,
ஒரு மிகப்பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.
காகத்திற்கு தினமும் காலையில் சாதம்வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா..
இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா… தெரியவில்லை!.. ஆனால், உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள்,விபத்துக்கள், வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது.. செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது.
தீராத கடன் தொல்லைகள், புத்திரசந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான
பலன்களையும், உங்கள் நியாயமான அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர் வழிபாடுதான். உங்கள் முன்னோர்களுக்கே , நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல, அற்புதமான ஜீவ ராசி – காக்கை இனம். குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலி பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம்.
தன் உடன்பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க, தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்த காணுப் பிடிபூஜையைச்செய்கிறார்கள்.
திறந்தவெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பிஅதில் வண்ண வண்ண சித்ரான்னங்களைஐந்து,
ஏழு, ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி அளவு எடுத்து வைத்து, காக்கைகளை “கா…கா…’
என்று குரல் கொடுத்து அழைப்பார்கள். அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும்
பறந்துவரும்.
அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும். வாழை இலையில் உள்ள அன்னங்களைச் சுவைக்கும்.
அப்படிச்சுவைக்கும் போது அந்தக் காக்கைகள் “கா… கா…’ என்று கூவி தன் கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும்.
அந்தக் காக்கைகள் உணவினைச் சாப்பிட்டுச் சென்றதும், அந்தவாழை இலையில் பொரி, பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள், வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள். இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.
மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)
காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.
இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத்திருப்திப்படுத்தியதாவும் கருதுகிறார்கள்.
காக்கை சனிபகவானின் வாகனம். காக்கைக்கு உணவு அளிப்பது சனி பகவானுக்கு மகிழ்ச்சிதருமாம்.
காக்கைகளில் நூபூரம், பரிமளம், மணிக்காக்கை, அண்டங்காக்கை என சில வகைகள் உண்டு.
காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப் பறவைகளிடமும் காண முடியாது. எமதர்மராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம்.
அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். எமனும் சனியும் சகோதரர்கள் ஆவர். அதனால், காக்கைக்கு உணவிடுவதால் ஒரே சமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது. தந்திரமான குணம் கொண்ட காலையில் நாம் எழுவதற்குமுன், காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றிபெற நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக் கரைந்தால் நல்ல பலன் உண்டு. வீடு தேடிகாகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிடவே எனவே, காக்கை வழிபாடு செய்வதால் சனிபகவான்,
எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்…
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023
சனிபகவானின் சச்சரவுகள் குறைய உங்கள் ராசிப்படி செல்ல வேண்டிய கோவில்கள்
Sivapuranam lyrics Tamil - சிவபுராணம் பாடல் வரிகள் சிவபுராணம் பாடல் வரிகள் (sivapuranam lyrics tamil) மற்றும் இந்த… Read More
Aadi Pooram Festival ஆடிப்பூரம் (Aadi Pooram) என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது… Read More
ஓம் நமசிவாய... ஓம் சக்தி.... நம: பார்வதீ பதயே என்பது என்ன? சிவன் கோயில்களில் நம:பார்வதீபதயே என ஒருவர் சொல்ல,… Read More
சக்தி வாய்ந்த 6 சிவன் மந்திரங்கள் | Powerful Shiva Mantras Tamil Powerful shiva mantras tamil |… Read More
பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our 3rd WhatsApp group *_📖 பஞ்சாங்கம்:… Read More
Leave a Comment