செவ்வாய் தோஷம் என்றால் என்ன? | sevvai dosham endral enna
செவ்வாய் தோஷம் ::

லக்னம், சந்திரன், சுக்கிரன் முதலியவற்றுக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாகக் கருத வேண்டும்.

மேற்கூறிய இடங்களில் செவ்வாய் தோஷமானது லக்கினத்திலிருந்து பார்க்கும் போது முழுமையானதாகவும், சந்திரன் நின்ற வீட்டிலிருந்து பார்க்கும் போது பாதி (1/2) தோஷத்தையும் மற்றும் சுக்கிரனிலிருந்து பார்க்கும்போது கால் பங்கு(1/4) தோஷத்தையும் அளிக்கும்.

செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் :

பின்வரும் கிரக அமைப்புகளால் செவ்வாய் தோஷம் ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் 2, 4, 7, 8 மற்றும் 12-ஆம் வீட்டிலிருந்தாலும், விதிவிலக்காகி செவ்வாய் தோஷம் இல்லாமல் செய்துவிடும்.

1. மிதுனம் மற்றும் கன்னி இரண்டாம் வீடானால், செவ்வாய் தோஷம் இல்லை.

2. மேஷம் மற்றும் விருச்சிகம் நான்காம் வீடானால், செவ்வாய் தோஷம் இல்லை.

3. கடகம் மற்றும் மகரம் ஏழாம் வீடானால், செவ்வாய் தோஷம் இல்லை.

4. தனுசு மற்றும் மீனம் எட்டாம் வீடானால், செவ்வாய் தோஷம் இல்லை.

5. ரிஷபம் மற்றும் துலாம் பன்னிரெண்டாம் வீடானால், செவ்வாய் தோஷம் இல்லை.

6. கடகம், சிம்மம் இந்த
இரண்டு
லக்கினகாரர்களுக்கும்,
செவ்வாய்
யோக காரகர் ஆவதால்,
செவ்வாய் தோஷம்
இல்லை.

7. செவ்வாய் தனது நண்பர்களான சூரியன், சந்திரன் மற்றும் குரு வீடுகளான கடகம், சிம்மம், தனுசு மற்றும் மீனத்தில் இருப்பின், செவ்வாய் தோஷம் இல்லை.

8. செவ்வாய், தனது சொந்த வீடுகளான மேஷம் மற்றும் விருச்சிகத்தில் இருப்பின், செவ்வாய் தோஷம் இல்லை.

9. செவ்வாய் வக்கிரம் அடைந்திருப்பின் தோஷம் இல்லை.

10. செவ்வாய் அமர்ந்துள்ள வீட்டு அதிபதி கேந்திர (1, 4, 7, 10) வீடுகளிலும் மற்றும் திரிகோண (1, 5, 9) வீடுகளிலும் அமர்ந்திருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.

இவை ஒரு சிலவே, மேலும் திருமணப் பொருத்தத்தின் போது நன்கு ஆராய்ந்து திருமணம் செய்விப்பதால், திருமணப் பந்தம் நீண்டு நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகம் தேவை இல்லை.