Bairavar 108 Potri in Tamil
தினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி திதியில் இந்த பைரவர் 108 போற்றியை (Bairavar 108 potri) சொல்லி பைரவர் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். அந்த 108 மந்திரத்தை கீழே பார்க்கலாம். தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். இந்த நாளில் மாலை 4.30 – 6 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த 108 போற்றியைச் சொல்லலாம். பைரவர் சன்னதி முன்பு கூட்டாக அமர்ந்து, ஒருவர் சொல்ல மற்றவர்கள் திருப்பிச் சொல்லலாம்.
இந்த போற்றிகளை எப்படி உச்சரிப்பது என்று கீழே உள்ள விடியோவை கேட்டு புரிந்து பைரவரின் அருளை முழுமையாக பெறவும்…
Note: பைரவ 108 போற்றி கீழே உள்ளது…
ஓம் பைரவனே போற்றி
ஓம் பயநாசகனே போற்றி
ஓம் அஷ்டரூபனே போற்றி
ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
ஓம் அயன்குருவே போற்றி
ஓம் அறக்காவலனே போற்றி
ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
ஓம் அடங்காரின் அழிவே போற்றி
ஓம் அற்புதனே போற்றி
ஓம் அசிதாங்க பைரவனே போற்றி
ஓம் ஆனந்த பைரவனே போற்றி
ஓம் ஆலயக்காவலனே போற்றி
ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி
ஓம் உக்ர பைரவனே போற்றி
ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
ஓம் உதிரம் குடித்தவனே போற்றி
ஓம் உன்மத்த பைரவனே போற்றி
ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி
ஓம் எல்லை தேவனே போற்றி
ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
ஓம் கபாலதாரியே போற்றி
ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
ஓம் கர்வ பங்கனே போற்றி
ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
ஓம் கதாயுதனே போற்றி
ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி
ஓம் கருமேக நிறனே போற்றி
ஓம் கட்வாங்க தாரியே போற்றி
ஓம் களவைக் குலைப்போனே போற்றி
ஓம் கருணாமூர்த்தியே போற்றி
ஓம் கால பைரவனே போற்றி
ஓம் காபாலிகர் தேவனே போற்றி
ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி
ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
ஓம் காசிநாதனே போற்றி
ஓம் காவல்தெய்வமே போற்றி
ஓம் கிரோத பைரவனே போற்றி
ஓம் கொன்றைப்பிரியனே போற்றி
ஓம் சண்ட பைரவனே போற்றி
ஓம் சட்டை நாதனே போற்றி
ஓம் சம்ஹார பைரவனே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
ஓம் சிவத்தோன்றலே போற்றி
ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி
ஓம் சிக்ஷகனே போற்றி
ஓம் சீர்காழித்தேவனே போற்றி
ஓம் சுடர்ச்சடையனே போற்றி
ஓம் சுதந்திர பைரவனே போற்றி
ஓம் சிவ அம்சனே போற்றி
ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
ஓம் சூலதாரியே போற்றி
ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி
ஓம் செம்மேனியனே போற்றி
ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
ஓம் தட்சனை அழித்தவனே போற்றி
ஓம் தலங்களின் காவலனே போற்றி
ஓம் தீது அழிப்பவனே போற்றி
ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி
ஓம் தெற்கு நோக்கனே போற்றி
ஓம் தைரியமளிப்பவனே போற்றி
ஓம் நவரச ரூபனே போற்றி
ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி
ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
ஓம் நாய் வாகனனே போற்றி
ஓம் நாடியருள்வோனே போற்றி
ஓம் நிமலனே போற்றி
ஓம் நிர்வாணனே போற்றி
ஓம் நிறைவளிப்பவனே போற்றி
ஓம் நின்றருள்வோனே போற்றி
ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
ஓம் பகையளிப்பவனே போற்றி
ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி
ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி
ஓம் பால பைரவனே போற்றி
ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி
ஓம் பிரளயகாலனே போற்றி
ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி
ஓம் பூஷண பைரவனே போற்றி
ஓம் பூதங்களின் நாதனே போற்றி
ஓம் பெரியவனே போற்றி
ஓம் பைராகியர் நாதனே போற்றி
ஓம் மல நாசகனே போற்றி
ஓம் மகோதரனே போற்றி
ஓம் மகா பைரவனே போற்றி
ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி
ஓம் மகா குண்டலனே போற்றி
ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் முக்தியருள்வோனே போற்றி
ஓம் முனீஸ்வரனே போற்றி
ஓம் மூலமூர்த்தியே போற்றி
ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
ஓம் ருத்ரனே போற்றி
ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
ஓம் வடுக பைரவனே போற்றி
ஓம் வடுகூர் நாதனே போற்றி
ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி
ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
ஓம் வாரணாசி வேந்தே போற்றி
ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி
ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
ஓம் விபீஷண பைரவனே போற்றி
ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி!
அஷ்ட பைரவர்கள்
ஸ்ரீ கால பைரவ மூர்த்தியே எட்டுத் திசைகளிலும் தோன்றி ஒளியை உண்டாக்கினார்.இன்று அஷ்ட பைரவர் மற்றும் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மந்திரங்களை பதிவு செய்துள்ளோம். இப்படி எட்டுவிதமாகத் தோன்றிய பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று பூமியில் வணங்கப்படுகிறார்கள். ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீக்ஷன பைரவர், கபால பைரவர் என எட்டு பைரவர் மட்டுமின்றி ஆதிசைவர்கள் 64 விதமான பைரவர்களையும் வணங்கி வந்துள்ளார்கள் என புராணங்கள் கூறுகின்றன.ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் திருவடிகளே சரணம்
ஓம் பைரவா போற்றி ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி வேணும் வைரவமூர்த்தி துணை
சொர்ணாகர்ஷண பைரவர்-பைரவி (ஞாயிறு-சூரியனின் பிராண தேவதை)
ஓம் பைரவாய வித்மஹே-ஆகர்ஷணாய தீமஹி
தன்னோ சொர்ணபைரவ ப்ரசோதயாத்
ஓம் த்ரிபுரதயை ச வித்மஹே-பைரவ்யை ச தீமஹி
தன்னோ பைரவி ப்ரசோதயாத்
காலபைரவர்-இந்திராணி (திங்கள்-சந்திரனின் பிராண தேவதை)
ஓம் கால தண்டாய வித்மஹே-வஜ்ர வீராயதீமஹி
தன்னோ கபால பைரவ ப்ரசோதயாத்
ஓம் கஜத்வஜாயை வித்மஹே-வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ இந்திராணி ப்ரசோதயாத்
சண்டபைரவர்-கௌமாரி (செவ்வாயின் பிராண தேவதை)
ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே-மஹாவீராய தீமஹி
தன்னோ சண்ட பைரவ ப்ரசோதயாத்
ஓம் சிகித்வஜாயை வித்மஹே-வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ கௌமாரி ப்ரசோதயாத்
உன்மத்த பைரவர் – ஸ்ரீ வராஹி (புதனின் பிராண தேவதை)
ஓம் மஹா மந்த்ராய வித்மஹே-வராஹி மனோகராய தீமஹி
தன்னோ உன்மத்தபைரவ ப்ரசோதயாத்
ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே-தண்ட ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்
அசிதாங்க பைரவர் – பிராம்ஹி (வியாழன்-குருவின் பிராண தேவதை)
ஓம் ஞான தேவாய வித்மஹே-வித்யா ராஜாய தீமஹி
தன்னோ அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்
ஓம் ஹம்ஷத் வஜாயை வித்மஹே-கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தன்னோ பிராம்ஹி ப்ரசோதயாத்
ருரு பைரவர்-மஹேஸ்வரி (வெள்ளி-சுக்கிரன் பிராண தேவதை)
ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே-டங்கேஷாய தீமஹி
தன்னோ ருருபைரவ ப்ரசோதயாத்
ஓம் வ்ருஷத் வஜாயை வித்மஹே-ம்ருக ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ரௌத்ரி ப்ரசோதயாத்
குரோதன பைரவர்-வைஷ்ணவி (சனியின் பிராண தேவதை)
ஓம் கிருஷ்ண வர்ணாய வித்மஹே-லட்சுமி தராய தீமஹி
தன்னோ குரோதன பைரவ ப்ரசோதயாத்
ஓம் தாக்ஷ்யத் வஜாயை வித்மஹே-சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்
சம்ஹார பைரவர் -சண்டீ (ராகுவின் பிராண தேவதை)
ஓம் மங்ளேஷாய வித்மஹே-சண்டிகாப்ரியாய தீமஹி
தன்னோ ஸம்ஹார பைரவ ப்ரசோதயாத்
ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே-மஹாதேவி ச தீமஹி
தன்னோ சண்டி ப்ரசோதயாத்
பீஷண பைரவர்-சாமுண்டி (கேதுவின் பிராண தேவதை)
ஓம் சூலஹஸ்தாய வித்மஹே-ஸ்வானுக்ராய தீமஹி
தன்னோ பீஷணபைரவ ப்ரசோதயாத்
ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே-சூலஹஸ்தாயை தீமஹி
தன்னோ காளி ப்ரசோதயாத்
குறிப்பு : அந்தந்த கிழமைகளில் அந்தந்த பைரவருக்கு உரிய காயத்திரி மந்திரங்களை படிப்பது மிகவும் நன்மை அளிக்கும். இவற்றுள் ராகு, கேது மட்டும் அந்தந்த கிழமைகளில் ராகு காலம் மற்றும் கேது காலங்களில் பாராயணம் செய்ய நன்மைகள் கிடைக்கும்.
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் திருவடிகளே சரணம்
ஓம் பைரவா போற்றி!!! ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி வேணும் வைரவமூர்த்தி துணை