Today rasi palan in tamil |இன்றைய ராசிப்பலன் மற்றும் பஞ்சாங்கம் 23.9.2020 புதன்கிழமை புரட்டாசி– 7.  If you are seeing old date, please refresh the page. நீங்கள் பழைய தேதியின் ராசிபலன்கள் கண்டால்… இந்த pageஐ refresh செய்யவும்.. (Reload the page to see updated content)

இன்றைய ராசிபலன்⬇️

பஞ்சாங்கம்

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇮🇳🇮🇳 ஹரி ஓம் நம சிவாய 🇮🇳🇮🇳
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
பஞ்சாங்கம்🇮🇳தமிழ்நாடு,இந்தியா
*புரட்டாசி 07 {23.09.2020} புதன்கிழமை*
*1.வருடம் ~சார்வரி வருடம் {சார்வரி நாம சம்வத்ஸரம்}.*
*2.அயனம் ~தக்ஷிணாயனம்*
*3.ருது ~வர்ஷ ருதௌ*
*4.மாதம் ~புரட்டாசி (கன்யா மாஸம்)*
*5.பக்ஷம் ~சுக்ல பக்ஷம்*
*6.திதி ~ஸப்தமி* *ஸ்ரார்த்த திதி ~ஸப்தமி*
*7.நாள் ~புதன்கிழமை {ஸௌம்ய வாஸரம்}*
*8.நக்ஷத்திரம் ~கேட்டை*
*யோகம் ~சித்த யோகம்.*
*கரணம் ~கரஜை , வணிஜை*
*நல்ல நேரம் ~9.15 AM~10.15 AM & 4.45 PM ~5.45 PM*
*ராகு காலம் ~12 Noon~1.30 PM*
*எமகண்டம்~7.30 AM~9.00 AM*
*குளிகை ~10.30 AM ~12 NOON*
*சூரிய உதயம் ~06.03 AM*
*சூரிய அஸ்தமனம் ~06.04 PM*
*சந்திராஷ்ட்டமம் ~பரணி, கார்த்திகை*
*சூலம் ~வடக்கு*
*பரிகாரம் ~பால்*
*இன்று ~*🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇮🇳HARI OM NAMAH SHIVAYA🇮🇳
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
Panjangam🇮🇳Tamilnadu,India 🇮🇳
*PURATTAASI 07 (23.09.2020) WEDNESDAY*
*1.YEAR ~SAARVARI VARUDAM {SAARVARI NAMA SAMVATHSARAM}.*
*2.AYANAM ~DHAKSHINAAYANAM*
*3.RUTHU ~VARSHA RUTHU*
*4.MONTTH ~PURATTAASI (KANYAA MAASAM}*
*5.PAKSHAM ~SUKLA PAKSHAM.*
*6.THITHI ~SABTHAMI. SRAARTHTHA THITHI ~SABTHAMI.*
*7.DAY ~WEDNESDAY (SOWMYA VAASARAM).*
*8.NAKSHATHRAM ~KETTAI*
*YOGAM ~SIDHDHA YOGAM*
*KARANAM ~GARAJAI, VANIJAI RAGU KALAM~12 Noon ~1.30PM.*
*YEMAGANDAM ~7.30 AM ~9.00 AM.*
*KULIGAI ~10.30AM ~12 Noon*
*GOOD TIME~9.15 AM~10.15 AM & 4.45 PM ~5.45 PM.*
*SUN RISE ~06.03 AM.*
*SUN SET ~06.04 PM.* *CHANDRAASHTAMAM ~BHARANI, KAARTHIGAI.*
*SOOLAM ~NORTH.*
*PARIGARAM ~MILK*
*TODAY ~🙏*

சந்திராஷ்டமம் பரிகார முறை

குளிகை என்றால் என்ன?

திதி பற்றிய விளக்கம்

இன்றைய ராசிபலன் (23/9/2020)

_*இன்றைய ராசிபலன் 23.09.2020 புரட்டாசி ( 7 ) புதன்கிழமை.!!*_

மேஷம்

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் பல விஷயங்களை நீங்களே பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சின்னசின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமுண்டு. திறமைகள் வெளிப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் புது பொறுப்பை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.

கடகம்

கடகம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

சிம்மம்

சிம்மம்: எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.

கன்னி

கன்னி: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.

துலாம்

துலாம்: இதுவரை கணவன்-மனைவிக்குள் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மாற்றங்கள் ஏற்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்:  ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: எதிர்காலம் பற்றி கவலைகள் வந்து போகும். பிள்ளைகளை அன்பால் அரவனைத்து போங்கள். அரசு விவகாரங்களில் விவாதம் வேண்டும். மருத்துவ செலவுகள் ஏற்படும். அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

மகரம்

மகரம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் பிறக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமை உணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்பு கூடும் நாள்.

கும்பம்

கும்பம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகம் ஆவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

மீனம்

மீனம்:  இதுவரை இருந்த டென்ஷன், கோபம் யாவும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் திருப்தியான சூழல் உருவாகும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்…

Leave a Comment