Arthamulla Aanmeegam

Tulasi plant in home | துளசிச் செடியை ஏன் வீட்டில் வைக்க வேண்டும்

ஏன் வீட்டில் துளசிச் செடியை வைக்க வேண்டும்

Find the reasons and uses of keeping tulasi plant in home

🌷 இந்துக்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த தெய்வமாக கருதப்படும் செடி துளசி ஆகும். இந்துக்கள் துளசி செடி முன், தீபம் ஏற்றி பூஜை செய்வார்கள். துளசி விவா என்பது ஒரு முக்கியமான பூஜை ஆகும். இந்த பூஜையில், துளசி செடியை மகாவிஷ்ணுவை பிரதிபலிக்கும் ஷாலிகிராம் உடன் திருமணம் செய்து வைப்பார்கள். வீட்டில் ஏன் துளசி செடி வைத்து வணங்க வேண்டும்? அதன் பயன்கள் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

History of Tulasi Plant:

*துளசி உருவான கதை :*

🌷 ஜலந்தரா என்ற ஒரு அசுரன் இருந்தான். இந்திரன்மீது சிவபெருமான் கோபப்பட்டதால், அந்த கோபத்தில் ஜலந்தரா பிறந்தார். ஜலந்தரா சிவனைப் போன்று சக்திவாய்ந்தவராக இருந்தார். அவர் அழகிய வெந்தாவை மணந்தார். வெந்தா விஷ்ணுவின் பெரும் பக்தை. அவளது பக்தி காரணமாக ஜலந்தரா யோக சக்திகளை பெற்றார். ஒவ்வொரு முறையும் ஜலந்தரா போருக்குச் செல்லும்போதும், வெந்தா விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்தார்.

🌷 இது அசுரரின் வெற்றியை உறுதி செய்யும். ஒருமுறை ஜலந்தரா தேவர்களுடன் போர் செய்தான். சிவன் தேவர்களின் தலைவராக இருந்தார். ஜலந்தராவை தோற்கடிக்க இயலாதது என்று கடவுள்கள் அறிந்திருந்தனர். ஏனென்றால் வெந்தா பிரார்த்தனை செய்துகொண்டிருந்தாள். எனவே, விஷ்ணு ஜலந்தராரின் உருவில் வெந்தாவிடம் சென்றார். வெந்தா உன் தொழுகைகளை நிறுத்து, நான் சிவனை தோற்கடித்துவிட்டேன். இப்போது உலகம் முழுவதும் என்னைப் போன்று சக்திவாய்ந்தவர் இல்லை என்று சொன்னார். இந்த வார்த்தைகளை கேட்டு, அவள் பிரார்த்தனையை நிறுத்திவிட்டு, தன் ஆசனத்தில் இருந்து எழுந்தாள்.

🌷 ஆனால் அவள் அவ்வாறு செய்தபோது, ஏதோ தவறு இருப்பதை உணர்ந்தாள். அந்த நேரத்தில், சிவன் ஜலந்தராவை கொன்றுவிட்டார். வெந்தா இதை உணர்ந்து, விஷ்ணுதான் தன்னை ஏமாற்றிவிட்டார் என்று அறிந்துகொண்டாள். அவள் விஷ்ணுவிடம், நீங்கள் என் கணவரையும் காப்பாற்றி இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் என் கணவர் கொல்லப்படும்போது ஒரு கல்லைப்போல நின்று கொண்டு இருந்தீர்கள். உங்கள் பாவங்களைக் குறித்து ஒரு கல்லில் சிக்க வைக்கப்படுவீர்கள் என்று அவள் விஷ்ணுவை சபித்தாள். விஷ்ணுவை சபித்துவிட்டு வெந்தா இறந்து போனாள்.

🌷 வெந்தாவின் சாபத்தின் படி, விஷ்ணு சாலிகிராமத்தில் சிக்கிக் கொண்டு, துளசி ஆலை என்ற பெயரில் மறுபடியும் பிறந்தார். துளசியின் இலைகள் விஷ்ணுவின் வடிவம் ஆகும். அதனால் வீட்டில் துளசி செடி வைத்து வழிபட்டால் விஷ்ணுவின் பரிபூரண அருள் கிடைத்து வாழ்வில் ஏற்றம் உண்டாகும். மேலும் மருத்துவ ரீதியாக துளசிச் செடி இலையானது காய்ச்சல், குளிர், இருமல், நுரையீரல் கோளாறுகள், ஆஸ்துமா, இதய நோய்கள் மற்றும் சிறுநீரகக் கற்கள் போன்ற பல நோய்களை குணப்படுவதாக அறியப்படுகிறது. ஆகையால் துளசி செடியை வீட்டில் வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களை தரும்….

துளசி கல்யாணம் ஸ்பெஷல் !

துளசி !

1. தனது வேரின் அடியில் சகல தீர்த்தங்களையும், நடுவில் சர்வ தேவதைகளையும், நுனியில் சர்வ வேதங்களையும் கொண்ட ஸ்ரீதுளசியை நமஸ்கரிக்கிறேன்.

2. தன்னை தரிசிப்போரது சகல பாவங்களையும் போக்குபவள். தன்னை ஸ்பரிசிப்போரது மேனியைத் தூய்மைப்படுத்துபவள். தன்னை வணங்குவோரது சகல நோய்களையும் தீர்ப்பவள். தனக்கு நீர் வார்ப்போரைக் கண்டு எமனும் நடுங்குமாறு செய்பவள்(எம பயத்தைப் போக்குபவள்). தன்னை விதிப்படி பிரதிஷ்டை செய்பவர்களை(பூஜிப்பவர்களை), ஸ்ரீகிருஷ்ணரது அன்புக்குரியவர்களாகச் செய்பவள். தன்னை பூஜித்தால் மோக்ஷத்தை நல்குபவள். அத்தகைய மகிமை பொருந்திய ஸ்ரீதுளசியை வணங்குகிறேன்.

3. ஸ்ரீ துளசி, பவித்ரமானவள், பூஜிக்கத் தகுந்தவள், பிருந்தாவனத்தை வாசஸ்தலமாகக் கொண்டவள், ஞானம் நல்குபவள், ஞானமயமானவள், எவ்விதக் களங்கமும் அற்றவள், எல்லோராலும் பூஜிக்கப்படுபவள்.

4. ஸ்ரீ துளசியானவள், கற்புக்கரசி, பதிவிரதை. பிருந்தா என்ற ரூபமுடையவள். பாற்கடலைக் கடைந்த போது தோன்றியவள், (கறுப்பு, பச்சை, வெள்ளை) ஆகிய மூன்று வித வண்ணங்களை உடையவள். எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவள்.

5. ஸ்ரீ துளசி தேவி, ஸ்ரீதேவியின் தோழி. எப்போதும் சுத்தமானவள். (பறித்துப் பல நாட்கள் இருந்தாலும் சுவாமிக்கு அர்ச்சனை செய்திருந்தாலும் மற்ற புஷ்பம் போல் நிர்மால்யம் என்ற தோஷமில்லாதவள்), அழகிய பற்கள் உடையவள், பூமியைப் புனிதமாக்குபவள், எப்போதும் ஸ்ரீஹரியையே தியானிப்பவள், பகவானது பாதத்தையே தன் இருப்பிடமாகக் கொண்டவள்.

6. ஸ்ரீ துளசி, புனிதத்தின் திருவுருவமானவள். மிகச் சிறந்தவள், நல்ல வாசனையுள்ளவள், அமிர்தத்தோடு கூடவே தோன்றியவள், நல்ல தோற்றத்தையும், ஆரோக்கியத்தையும் தருபவள், மகிழ்ச்சியானவள், மூன்று சக்திகளின் (துர்கா, லக்ஷ்மீ, சரஸ்வதி) திருவடிவானவள்.

7. ஸ்ரீ துளசி தேவி மிகப் பிரகாசமானவள், தேவர்களாலும் முனிவர்களாலும் துதிக்கப்படுபவள், அழகிய திருவுருவம் உடையவள், ஸ்ரீவிஷ்ணுவின் மனதிற்குப் பிரியமானவள், பூதம், வேதாளம் முதலியவற்றால் உண்டாகும் பயத்தை நீக்குபவள், மஹா பாபங்களைப் போக்குபவள்.

8. விருப்பங்களை நிறைவேற்றுபவள், ஸ்ரீ துளசி தேவி. மேதா (மேதைத் தன்மை, நுண்ணறிவு) வடிவமானவள், ஒளி ரூபமானவள், வெற்றியை அளிப்பவள், சங்கு, சக்கரம், கதை, தாமரை இவற்றைத் தரித்திருப்பவள், தன் விருப்பத்திற்கேற்ற ரூபத்தை எடுக்கும் சக்தியுடையவள்.

9. மோட்சத்தைத் தருபவள், ஸ்யாம (கரும்பச்சை) வர்ணம் உள்ளவள் (என்றும் இளமையானவள்), மெல்லிய இடை உடையவள், அழகான கேசமுள்ளவள், வைகுண்டத்தை வாசஸ்தலமாக உடையவள், ஆனந்தத்தை அளிப்பவள், கோவைப்பழம் போன்ற உதடுகள் உள்ளவள், குயில் போன்ற குரல் உடையவள்.

10. பொன்னிறமானவள் (கபிலா என்ற பசு வடிவமானவள்), (கண்டகி) நதி உண்டாகக் காரணமானவள் (கண்டகீ என்ற நதி துளசீ தேவியின் உடலிலிருந்தும் துளசிச் செடி அவளது கேசத்திலிருந்தும் உண்டானதாக புராணம்), ஆயுள் விருத்தியைத் தருபவள் (பெண்கள் துளசியைத் தினமும் பூஜை செய்தால் கணவனின் ஆயுள் விருத்தியாகும்), வன(காடு) ரூபமானவள் (துளசி ஒரே செடியானாலும் புதர் போல் வளரும் என்பதால்), துக்கத்தை நசிப்பவள், மாறுதல் இல்லாத, இறைவனைப் போன்றவள், நான்கு திருக்கரங்களை உடையவள்.

11. கருடனை வாகனமாக உடையவள், சாந்தமானவள், புலனடக்கம் நிரம்பியவள், துன்பங்களைப் போக்குபவள், ஸ்ரீவிஷ்ணு மூலிகையாக உள்ளவள். (விஷ்ணுவுக்கு வேர் போன்றவள் – துளசிக்கு விஷ்ணு மூலிகா என்று பெயர்), நன்கு வளர்ந்த தேகமுடையவள், தர்ம, அர்த்த காம பலன்களைத் தன்னை உபாசித்தவர்களுக்கு அளிப்பவள்.

12. மூன்று சக்திகளுக்கும் மேலான சக்தியானவள். மஹாமாயையின் ஸ்வரூபமானவள், லக்ஷ்மீயாலும், சரஸ்வதியாலும் பூஜிக்கப்படுகின்ற‌வள், சுமங்கலிகளைப் பூஜித்தால் சந்தோஷமடைபவள். சகல மங்கலங்களையும் விருத்தி செய்பவள்.

13. சாதுர்மாஸ்ய உத்சவ காலத்தில் விசேஷமாகப் பூஜிக்கத் தக்கவள். சாதுர்மாஸ்யத்தில் தன்னை பூஜிக்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ மகாவிஷ்ணுவின் சந்நிதானமான வைகுண்டத்தை அடையும் பாக்கியம் அளிப்பவள், உத்தான துவாதசியில் விசேஷமாகப் பூஜிக்கத்தக்கவ‌ள். (சயன ஏகாதசி – சுவாமி சயனிக்கும் நாள், பரிவர்த்தன ஏகாதசி – புரளும் நாள், உத்தான ஏகாதசி -‍சயன நிலையிலிருந்து எழுந்திருக்கும் நாள்), சகல தேவர்களாலும் பூஜிக்கப்படுகின்றவள்.

14. கோபியர்களுக்கும் அவர்கள் ப்ரேமை கொண்டுள்ள ஸ்ரீ கிருஷ்ணருக்கும் இடையில் அன்பு பாலமாக இருப்பவள். அழிவற்றவள், முக்குணங்களுக்கப்பாற்பட்டவள் (நிர்க்குணா), பார்வதி தேவிக்குப் பிரியமானவள், அபமிருத்யுவைப் போக்குபவள் (துளசிவனம் உள்ள இடத்தில் அகால மரணம் ஏற்படாது), ராதா தேவிக்கு மிகவும் பிரியமானவள், மான் போன்ற விழிகளை உடைய‌வள்.

15. வாடாத ரூபமுள்ளவள், அன்னம் போன்ற நடையழகை உடையவ‌ள், கமலாசனத்தில் வீற்றிருக்கும் பிரம்ம தேவரால் வணங்கப்படுகின்றவ‌ள், பூலோகத்தில் வாசம் செய்பவ‌ள், சுத்தமானவள், ராமகிருஷ்ணாதிகளால் பூஜிக்கப்பட்டவள்.

16. சீதா தேவியால் பூஜிக்கப்பட்டவள், ஸ்ரீராமனது மனதிற்குப் பிரியமானவள், ஸ்வர்க்கத்தை அடைவிப்பவளாக இருப்பவள் (நந்தன ஸம்ஸ்திதா), சகல புண்ணிய தீர்த்த மயமானவள், மோட்ச வடிவானவள், உலகை சிருஷ்டிப்பவள்.

17. காலையில் தரிசிக்கத்தக்கவள், உடல் மற்றும் மனதின் களைப்பை அகற்றுபவள்,

18. ஸ்ரீவிஷ்ணுவின் பத்தினியாக விளங்குபவள், சகல சித்திகளையும் தருபவள், நாராயண ஸ்வரூபமானவள் (நாராயணீ), சந்ததியை நல்குபவள், தன் வேரின் மண்ணை பக்தியுடன் அணிபவரைப் புனிதப்படுத்துபவள்.

19. அசோகவனத்தில் உள்ளவள், சீதையால் தியானம் செய்யப்பட்டவள், தானே தனக்குப் புகலிடமானவள், கோமதீ, சரயூ ஆகிய புண்ணிய நதிகளின் கரையில் தோன்றி வளர்பவள். சுருண்ட கூந்தலை உடையவ‌ள்.

20. தகாதவர் உணவைப் புசித்த பாவத்தைப் போக்குபவள், தானம் செய்யும் போது விடும் நீரைச் சுத்தமாக்குபவள் (தானம் செய்யும் போது, துளசி தீர்த்தம் விட்டு தானம் செய்தாலே, தானத்தின் பலன் கிடைக்கும்). (துளசி தளத்தை) பிரசாதமாகக் காதில் அணிந்தால் மிக்க சந்தோஷம் அடைபவள், மங்களமானவள், விரும்பிய எல்லாம் அனைவருக்கும் அளிப்பவள். அத்தகைய மகிமை பொருந்திய துளசி தேவியை வணங்குகிறேன்.

இவ்வாறு துளசி அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்ரம் முடிவுற்றது.

நமஸ்தே துளசி தேவி !
நமோ நமஸ்தே நாராயண ப்ரியே !

 

பெருமாளுக்கு மிகவும் பிடித்தது துளசி ஆகும். எனவேதான் பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக துளசி இலைகளையும், துளசி தீர்த்தத்தையும் கொடுக்கிறார்கள்.

துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை. இவற்றுள் கருந்துளசியே மிகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது. அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும், பூஜைகளின் போதும் அர்ச்சனையாக சமர்ப்பிப்பதிலும், துளசி முக்கியத்துவம் பெறுகிறது.

பெருமாளுக்கு மிகவும் பிடித்தது துளசி ஆகும். எனவேதான் பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக துளசி இலைகளையும், துளசி தீர்த்தத்தையும்  கொடுக்கிறார்கள்.

பெருமாளுக்கு பூஜை நடத்தப்படும் போது துளசி இலையால் அர்ச்சனை செய்யப்படும். அர்ச்சகர் போடும் துளசி இலை பெருமாளின் திருவடியில் விழும். அந்த  இலையை நாம் பிரசாதமாக வெறும்போது, பெருமாலின் அனுக்கிரகம் நமக்கு கிடைப்பதாக ஐதீகம்.

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுவதை வைத்து, அதில் துளசி இலை கலந்து துளசி தீர்த்தம் தயாரிக்கப்படுகிறது. பெருமாள் கோவில்களில் புண்ணிய நதி அல்லது அந்தந்த கோவில் தீர்த்தங்களையும் கலந்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள்.

துளசி தீர்த்தத்தில் பச்சை கற்பூரம், ஏலக்காய் சேர்க்கப்படுவதுண்டு. செம்புப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் துளசி இலைகளைப் போட்டு ஒரு இரவு வைத்திருந்து அந்த நீரைக் குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகளுக்கு சளி தொந்தரவு வராது.

வீட்டில் துளசிச் செடி இருந்தால் இடி, மின்னல் தாக்காது என்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் துளசி மாடம் வளர்ப்பது நல்லது.

ஹரி பக்தி சுதோயம் என்னும் நூலில் துளசியின் மகிமை பற்றி விரிவாக சொல்லப் பட்டுள்ளது. துளசி இலையின் நுனியில் நான் முகனும், மத்தியில்  திருமாலும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் பன்னிரண்டு ஆதித்யர்களும், பதினோரு ருத்திரர்களும், எட்டு வசுக்களும், இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

துளசி ஸ்தோத்திரம் பாடல் வரிகள்

துளசி கவசம்

Brief uses of Tulasi plant in home:

Why To Keep A Basil Plant At Home?

 • Form Of Goddess
 • Wards Off Evil Spirits
 • Improves Vaastu
 • Good Luck Charm
 • Honour Gods
Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
 • Recent Posts

  Girivalam benefits | திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள் | கிரிவலம் வரலாறு

  பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More

  5 days ago

  வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits

  வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம்… Read More

  6 days ago

  செல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி | Chitra Pournami

  செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி::°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா… Read More

  1 month ago

  ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல்

  🌻🙏ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல் (4/5/23, வியாழக் கிழமை) 🌻🕉️ 🍒ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🌹 ஸ்ரீ லக்ஷ்மி… Read More

  1 month ago

  அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya Tritiya benefits

  அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (10) நாள் 23.4.2023 ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை… Read More

  2 months ago