எந்த மலை சேவித்தாலும் பாடல் வரிகள் (Entha malai sevithalum lyrics) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… ஐயப்ப பஜனை பாடல்களில் இந்த பாடல் மிக சிறப்பான ஒன்றாகும்… நம் சபரிமலை ஐயனை போற்றி பாட இந்த பாடல் மிக சிறந்த ஒன்று…. ஒவ்வொரு சரணம் முடிவிலும் “எந்த மலை சேவித்தாலும்” என்று குழுவாக பாடும் போது இந்த பாடலின் தனித்தன்மை அனைவருக்கும் விளங்கும்… ஓம் சாமியே சரணம் ஐயப்பா…
ஸ்ரீ வீர தேவர் அகிலமும் ஓம் காரமாய் விளங்க
ஸ்ரீ சபகிரீஸ்வரராய் மணிப்பீடத்தில் ஐயப்பா…
கண்டம் இடறி என்னை நீ தொண்டனாய் பாடவைப்பாய்
நம்பினவர்க் ஆதரவுற்றருளும் ஐயனே ஐயனே ஐயனே
ஐயன் ஐயப்பனே சரணம் ஐயப்பா…
எந்த மலை சேவித்தாலும்
தங்கமலை வைபோகம்
எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா
எங்கேயும் நான் கண்டதில்லையே…
எந்த மலை சேவித்தாலும்
சபரிமலை வைபோகம்
எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா
எங்கேயும் நான் கண்டதில்லையே
கோடி சூரியன் உதிக்கும் மலை
கோமலாங்கன் வாழும் மலை
கோடி ஜனங்கள் வருகும் மலை
குளத்தூர் ஐயன் வாழும் மலை
எந்த மலை சேவித்தாலும்
தங்கமலை வைபோகம்
எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா
எங்கேயும் நான் கண்டதில்லையே…
பாரில் உள்ளோரெல்லாம் புகழும் மலை
பரவசத்தை கொடுக்கும் மலை
பாவ வினைகளை தீர்க்கும் மலை
பம்பா பாலன் வாழும் மலை
எந்த மலை சேவித்தாலும்
தங்கமலை வைபோகம்
எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா
எங்கேயும் நான் கண்டதில்லையே…
சபரிநாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை கூறினால்
சகல வினைகளும், சகல குறைகளும், சகல பிணிகளும் அகலுமாம்
மதகஜானனா குக சகோதரா வருக வருக என வாழ்த்தினால்
மதகஜானனா குக சகோதரா வருக வருக வருக என வாழ்த்தினால்
மனமகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவார்
சுவாமியே சரணம் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே………….. சரணம் ஐயப்பா…
பகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள்
தள்ளாடி தள்ளாடி நடை நடந்து பாடல் வரிகள்
சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே பாடல் வரிகள்
Entha Malai Sevithalum Video Song Lyrics Tamil
Vinayaga 100 special information விநாயகர் சதுர்த்தி விரதம் சிறப்பு பதிவு. விநாயகர் பற்றிய 100 அரிய குறிப்புகள் .… Read More
Vinayagar Agaval Lyrics in Tamil விநாயகர் அகவல் (Vinayagar Agaval) - ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர்… Read More
ஓம் கணநாதனே போற்றி போற்றி ஓம் ஞான முதல்வனே போற்றி ஓம் வெள்ளை கொம்பனே போற்றி கணபதியே கணபதியே… கணபதியே… Read More
Vinayaka Chathurthi Pooja Procedure Tamil விநாயகர் சதுர்த்தி (7/9/2024) வழிபடும் முறைகள் (Vinayagar Chathurthi Pooja Procedure in… Read More
Vinayagar Statue directions வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்? ⭐ விநாயகர் சதுர்த்தி, விநாயகரின் முக்கியமான விழாவாகும்.… Read More
நினைப்பு ஸ்ரீ ரமண மகரிஷி. நேரம்ன்னா என்ன? அது கற்பனை. உங்களோட ஒவ்வொரு கேள்வியும் ஒரு நினைப்புதான். உங்களுடைய இயல்பே… Read More
Leave a Comment