Categories: Lyrics

Harivarasanam Tamil Song Lyrics | உன்னதமான சிம்மாசனத்திலே பாடல் வரிகள்

Unnadhamaana simmasanathile (Harivarasanam Tamil Song Lyrics – New) – ஹரிவராசனம் பாடல் திரு. ஜீ. சதிஷ் அவர்களால் எழுதப்பட்டு திரு. வீரமணி ராஜு அவர்காளால் .. பாடப்பட்டது. கடந்த, 1975ல் மலையாள இசையமைப்பாளர் தேவராஜன் இசையில், பாடகர் ஏசுதாஸ் குரலில் இப்போதுள்ள ஹரிவராசனம் உருவானது. இப்பாடலை, தமிழில் கொண்டு வந்து, அய்யப்பன் புகழை இன்னும் பரப்ப வேண்டும் என்பதற்காக முயற்சி செய்தேன் என்று திரு. ஜீ. சதிஷ் அவர்கள் கூறினார்.. கோவை மகா சாஸ்த்ரூ சேவா சங்கத் தலைவர் அரவிந்த் சுப்ரமணியன் அவர்கள் பாடலுக்கு விளக்கம் சரிதானா என்பதை உறுதி செய்தார்….. இந்த புதிய ஹரிவராசனம் பாடல் வரிகள் மற்றும் காணொளி இந்த பதிவில் உள்ளது…

உன்னதமான சிம்மாசனத்திலே ஐயன்  உலகை மயக்கிடும் புன்னகை வீச

பரிரதம் மீதில் வருகின்ற பரிதி ஐயன், ஐய்யனின்  பாதம் பூஜிப்பான்

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..

எதிரியை அழித்து ஆனந்த நடனம் செய்திடும் எந்தன் ஐயப்ப சுவாமி

அந்த  ஹரிஹரசுதனை ஐயன் ஐய்யனை சரணடைகின்றேன் சரணம் ஐயப்பா..

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..

சரணகோஷத்தை கேட்பதனாலே மனதிலில் மகிழ்ச்சி அடையும் சுவாமியே

உலகினை காத்து ரட்சித்து அருளி உளம்தனில் நின்று நடனம் ஆடும் சுவாமியே

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..

அருணோதயத்தை போல் ஒளிமயமான ஜோதி உடையவன் எந்தன் பூதநாயகன்

அந்த  ஹரிஹரசுதனை ஐயன் ஐய்யனை சரணடைகின்றேன் சரணம் ஐயப்பா..

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..

சத்யநாதனின் பிரிய நாயகன் தன்னை சரணடைந்தோர்க்கு கற்பகம் இவனே

ஒளிமிகும்வடிவம் தனம் அருளும் ஆற்றலும் உடையவன் எந்தன் ஐயப்ப சுவாமி

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..

ஓம்காரமென்னும் ப்பிரணவரூபமே இசைகளின் மீது காதல் கொண்ட நாதமே

அந்த  ஹரிஹரசுதனை ஐயன் ஐய்யனை சரணடைகின்றேன் சரணம் ஐயப்பா..

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..

வெள்ளைக்குதிரையாம் வாகனம் மீதில் ஏறி பவனி வந்திடும் அழகு நாயகா

கதையும் பானமும் ஏந்தும் பாலகா வேதங்கள் போற்றும் எந்தன் சத்ய சாகரா

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..

குருவினை  போலே பிரியமானவன் கானங்கள் பிரியம் மோகம் கொண்டவன்

அந்த  ஹரிஹரசுதனை ஐயன் ஐய்யனை சரணடைகின்றேன் சரணம் ஐயப்பா…

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..

மூன்று புவனமும் பூஜித்து வணங்கும் சகல தெய்வத்தின் அம்சமானவன்

முப்பத்து முக்கோடி தேவர்களாலும் பூஜிக்கும் எங்கள் வரம் தரும் ஐயன்….

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..

மூன்று கண்களை கொண்ட நாதனானவன் வேத ரூபமாய் விளங்கும் சீலனானவன்

அந்த  ஹரிஹரசுதனை ஐயன் ஐய்யனை சரணடைகின்றேன் சரணம் ஐயப்பா…

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..

சம்சார சாகரம் என்னும் பயத்தை அழிப்பவன் தந்தையை போல  அடியார்க்கு அருள்பவன்

உலகம் முழுதையும் தன் மாயையினாலே மோகிக்க செய்து மகிழ்ச்சி கொள்பவன்

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..

திருநீரு தரித்து வெள்ளையானை மீதில் பவனி வந்திடும் எந்தன் ஐயனாம்

அந்த  ஹரிஹரசுதனை ஐயன் ஐய்யனை சரணடைகின்றேன் சரணம் ஐயப்பா…

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..

மதுரம் மிகுந்த  மிருதுவான புன்னகை வீசும் அழகிய முகமும் கொண்ட ஐயனே

இளமை மென்மையும் மயங்க வைத்திடும் மோகன ரூபம் கொண்ட பாலனே

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..

யானைவாகனம் சிம்மவாகனம் குதிரைவாகனம் ஏறி பவனி வருபவன்

அந்த  ஹரிஹரசுதனை ஐயன் ஐயனை சரணடைகின்றேன் சரணம் ஐயப்பா..

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..

ஜனங்களின் மீது பிரியம் கொண்டவன் நினைத்ததை உடனே அளிக்க வல்லவன்

வேதங்கள் நான்கும் அவன் அணிகலனாலும் ஆணவம்  பரம்பொருளாக போற்றும் வேத நாயகன்

அந்த  ஹரிஹரசுதனை ஐயன் ஐயனை சரணடைகின்றேன் சரணம் ஐயப்பா..

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா…

இசை : ஆர்.கே.சுந்தர்

பாடல் : ஜி.சதீஸ்

பாடியவர்: திரு.  வீரமணி ராஜு, திரு. அபிஷேக் ராஜு

108 ஐயப்பா சரணம்

ஹரிவராசனம் பாடல் வரிகள்

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
Tags: Lord Ayyappa
  • Recent Posts

    சந்திரனுக்குக் கிடைத்த சாபம் | Chandran Vinayagar Story Tamil

    சந்திரனுக்குக் கிடைத்த சாபம் | Chandran Vinayagar Story Tamil சந்திரனுக்குக் கிடைத்த சாபம்! ஒருமுறை, சந்திரன் கயிலைக்குச் சென்றிருந்தபோது,… Read More

    11 hours ago

    விநாயகர் பற்றிய 100 அரிய குறிப்புகள் | Vinayaga 100 special information

    Vinayaga 100 special information விநாயகர் சதுர்த்தி விரதம் சிறப்பு பதிவு. விநாயகர் பற்றிய 100 அரிய குறிப்புகள் .… Read More

    2 days ago

    விநாயகர் அகவல் பாடல் வரிகள் | Vinayagar Agaval Lyrics in Tamil | Vinayagar songs

    Vinayagar Agaval Lyrics in Tamil விநாயகர் அகவல் (Vinayagar Agaval) - ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர்… Read More

    2 days ago

    கணபதியே கணபதியே பாடல் வரிகள்

    ஓம் கணநாதனே போற்றி போற்றி ஓம் ஞான முதல்வனே போற்றி ஓம் வெள்ளை கொம்பனே போற்றி கணபதியே கணபதியே… கணபதியே… Read More

    5 days ago

    Vinayaka Chathurthi Pooja Procedure in Tamil | சதுர்த்தியன்று பூஜை செய்யும் முறை

    Vinayaka Chathurthi Pooja Procedure Tamil விநாயகர் சதுர்த்தி (7/9/2024) வழிபடும் முறைகள் (Vinayagar Chathurthi Pooja Procedure in… Read More

    6 days ago

    வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்?

    Vinayagar Statue directions வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்? ⭐ விநாயகர் சதுர்த்தி, விநாயகரின் முக்கியமான விழாவாகும்.… Read More

    6 days ago