எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி பாடல் வரிகள் Enga Karuppasamy Lyrics Tamil
வீரமணிதாசன் சாமி அவர்களால் பாடப்பட்ட எங்க கருப்பசாமி பாடல் வரிகள் மற்றும் காணொளி இங்கே பதிவிட்டுள்ளோம்… இந்த பாடல் விளக்கு பூஜை என்னும் பக்தி albumல் நான்காவது பாடலாக இடம் பெற்றுள்ளது…
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி
அக்கினியில் பிறந்தவராம் அரனாரின் மைந்தனவன்
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி
முன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன்
சந்தனப் பொட்டுக்காரன் சபரிமலை காவல்காரன்
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி
ஜடைமுடி காரனவன் சாமிகளைக் காத்திடுவான்
சல்லடையைக் கட்டி வரான் சாஞ்சி சாஞ்சி ஆடி வரான்…
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி
வில்லு பாட்டுப் பாடி வரான் வித விதமா ஆடி வரான்
பந்தம் கையில் பிடிச்சி வரான் பாரி வேட்டை ஆடி வரான்
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி
அச்சன் கோவில் ஆண்டவர்க்கு எதிராக இருப்பவராம்
பதினெட்டு படிகளுக்கு காவலாக இருப்பவனாம்
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி
தட்சையை கட்டி வரான் கை அருவா காட்டி வரான்
ஒய்… மீசையை முறுக்கி வரான் முச்சந்தியில் நடந்து வரான்
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பண்ண சாமி
வில்லாளி வீரனுக்கும் வீர மணிகண்டனுக்கும்
இருமுடிய சுமக்கும் போது பாதுகாக்க வருபவனாம்
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி
கற்பூர ஆழி முன்னே கடவுளாக நின்றிடுவார்
ஒய்.. கருப்பு வேட்டி கட்டிக்கிட்டு பாவங்களை போக்கிடுவார்
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி
எங்க கருப்பன் வரான் எங்க கருப்பசாமி… (Sing fast and music should be faster)
கார்மேகம் போல வரான் — கருப்பசாமி
அந்தா வரான் இந்தா வரான் — கருப்பசாமி
நாகவல்லி கொண்டு வரான் — கருப்பசாமி
ஒய்..முன்கோப காரன் வரான் — கருப்பசாமி
அருவாளு தூக்கி வரான் — கருப்பசாமி
ஜெவ்வாது வாசகாரன் — கருப்பசாமி
வெள்ளிப் பிரம்பு கொண்டு வரான் — கருப்பசாமி
ஒய்.. வேகமாக ஆடி வரான் — கருப்பசாமி
வேகமாக ஓடி வரான் — கருப்பசாமி
வாட்ட சாட்டமாக வரான் — கருப்பசாமி
பம்பாநதி தீரத்திலே — கருப்பசாமி
கருப்பன் வரும் வேளையிலே — கருப்பசாமி
பம்பாநதி குளிச்சி வரான் — கருப்பசாமி
கருப்பசாமி ஆடி வரான் — கருப்பசாமி
கரண்ட அளவு தண்ணியிலே — கருப்பசாமி
தள்ளிக் கொண்டு வாரானப்பா — கருப்பசாமி
சாமி முட்டளவு தண்ணியிலே — கருப்பசாமி
முழுங்கி கொண்டு வாரானப்பா — கருப்பசாமி
அரையளவு தண்ணியிலே
துள்ளிக் கொண்டு ஓடி வரான் — கருப்பசாமி
கழுத்தளவு தண்ணியிலே
கருப்பசாமி நீந்தி வரான் — கருப்பசாமி
அந்தளவு தண்ணியிலே
அங்காரமா ஓடி வரான்— கருப்பசாமி
எங்க கருப்பன் ஓடி வரான் — கருப்பசாமி
எங்க கருப்பன் ஓடி வரான் — கருப்பசாமி
ஒய் பம்பையிலே குளிச்சி வரான் — கருப்பசாமி
பாங்காக வரான் ஐயா — கருப்பசாமி
அந்தா வரான் இந்தா வரான் — கருப்பசாமி
பெரியான வட்டம் வரான் — கருப்பசாமி
சிரியான வட்டம் வரான் — கருப்பசாமி
ஒய் கரிமலையை ஏறி வரான் — கருப்பசாமி
பகவதியை வணங்கி வரான் — கருப்பசாமி
கரியிலாந்தோடு வரான் — கருப்பசாமி
இலவம் தாவளம் கடந்து வரான் — கருப்பசாமி
சாமி முக்குழிய தாண்டி வரான்— கருப்பசாமி
அழுதாமேடு உச்சி வரான் — கருப்பசாமி
சாமி அழுதையிலே குளிச்சி வரான் — கருப்பசாமி
காளை கட்டி தொட்டு வரான் — கருப்பசாமி
சாமி பூங்காவனம் புகுந்து வரான் — கருப்பசாமி
எரிமேலி வாரானய்யா — கருப்பசாமி
வாவர் சாமி கூட வரான் — கருப்பசாமி
எரிமேலி வந்து இறங்கிய கருப்பன் சுற்றும் முற்றும் பார்த்து எம்பெருமான் கருப்பனுக்கு மலர்கள் என்றால் கொள்ளை ப்ரியம் அவர் மலர்களால் சல்லடை கட்டி வருகின்ற வேளையில் அஹா அஹா காண கண்கோடி வேண்டும் அவை என்னென்ன மலர்கள் என்று கேட்டால்..
எடுத்து வைக்கும் கால்களுக்கு சாமந்தி சள்ளடையாம்
முன்னே வைக்கும் கால்களுக்கு முல்லைப் பூ சள்ளடையாம்
பின்னே வைக்கும் கால்களுக்கு பிச்சி பூ சள்ளடையாம்
அள்ளி வைக்கும் கால்களுக்கு அரளி பூ சள்ளடையாம்
துள்ளி வைக்கும் கால்களுக்கு துளசியால சள்ளடையாம்
வீசி வைக்கும் கால்களுக்கு வீரத்தாலே ச்ள்ளடையாம்
துள்ளி வைக்கு கால்களுக்கு அருகம்புல் சள்ளடையாம்
ஒய் உச்சந்தல கட்டி வரான் — கருப்பசாமி
புளியாட்டும் ராஜா வரான் — கருப்பசாமி
சபரிமலை காவல்காரன் — கருப்பசாமி
ஆங்காரமாய் ஓடி வரான் — கருப்பசாமி
தமிழ் நாட்டு எல்லையிலே — கருப்பசாமி
தாண்டி தாண்டி வாரானய்யா — கருப்பசாமி
செங்கோட்ட கருப்ப வரான் — கருப்பசாமி
தென்காசி சுடல வரான் — கருப்பசாமி
ஆம்பூரு சுடல வரான் — கருப்பசாமி
சாத்தானறு சுடல வரான் — கருப்பசாமி
அங்காரமாய் வாரானய்யா — கருப்பசாமி
ஆவேசமாய் வாராரய்யா — கருப்பசாமி
ஒய் போராடி வாராரய்யா — கருப்பசாமி
காவலாளி வாராரய்யா — கருப்பசாமி
பாபநாசம் கோட்டை குள்ளே — கருப்பசாமி
துணப் பேச்சி கூட வரான் — கருப்பசாமி
தேவர்கள் மலர் சொரியும் சொரிமுத்து அய்யனார் கோவில் வந்து இறங்கிய எம்பெருமான் கருப்பன் யார் யாரை வணங்குகிறான் என்று கேட்டால்…..
என்னன்னேன் சேட்டனடா — சாமியே
திரு மகாலிங்க சாமியரே– ஐயப்போ
தட்சனாமூர்த்தி சாமி — சாமியே
ஒய் சங்கிலி பூதத்தாரே — ஐயப்போ
பாதாள பூதத்தாரே — சாமியே
மேல் வாச பூதத்தாரே — ஐயப்போ
சுடர் மாடன் சாமியரே — சாமியே
ஒய் தலைவனான சாமியரே — ஐயப்போ
உண்டில் மாடன் சாமியரே — சாமியே
பள்ளி மாடன் சாமியரே — ஐயப்போ
உக்ரகாளி தாயாரே — சாமியே
வன பேச்சி தாயாரே — ஐயப்போ
ஜக்கம்மா தாயாரே — சாமியே
வண்டி மலச்சி தாயாரே — ஐயப்போ
பட்டராயன் சாமியரே — சாமியே
ஒய் கரடி மாடன் சாமியரே — சாமியே
அக்ஸ்தியின் மாமுனியும் — ஐயப்போ
2 (ஆங்காரமாய் காட்சி தந்தார்
அக்ஸ்தியின் மாமுனியும் ) 2
இப்படியாக தரிசித்து கொண்டு வந்த எம்பெருமான் கருப்பன் இந்த ஐயப்பன் மலர் பூஜை வருவதற்கு ஆவல் கொண்டு கண்ணிமாரையும் சாமி மாரையும் ஐயப்ப மாரையும் மாளிகைபுரத்தம்மனையும் ஆன்மீக நெஞ்சங்களையும் வாழ்த்தி அருள வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இந்த ஐயப்பன் பூஜைக்கு கருப்பன் வருகிறான்
ஆங்காரமாய் பரவசமாய் உதிரமாய் ஓடி வருகிறான்……………..
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி
3 ( கருப்பன் வரான் கருப்பன் வரான்
ஆங்காரமாய் ஓடி வரான்
ஒய் ஆவேசமாய் தேடி வரான்
கருப்பன் வரான் கருப்பன் வரான்
கருப்பன் வரான் கருப்பன் வரான் )3
ஸ்வாமியே … சரணம் ஐயப்போ ..
எங்க கருப்பசாமி.. அவர் எங்க கருப்பசாமி……
கருப்பண்ண ஸ்வாமியே…. சரணம் ஐயப்போ…
சத்குரு நாதனே சரணம் ஐயப்போ ….
எங்க கருப்பசாமி பாடல் காணொளி